கிருட்டிணகிரி மாவட்டப் போக்குவரத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிருட்டிணகிரி- ஒசூரை இணைக்கும் மேலுமலைக் கணவாயில் செல்லும் தேசிய நெடுஞ்சாலை

கிருட்டிணகிரி மாவட்டத்தின் தலைமையகம் கிருட்டிணகிரியாகும். இம்மாவட்டம் தமிழ்நாட்டின் வடக்கு நுழைவாயிலாக உள்ளது. மாவட்டத்தில் உள்ள கிருட்டிணகிரியையும் ஒசூரையும் மேலுமலைக் கணவாய் இணைக்கிறது. தேசிய நெடுஞ்சாலைகளின் வலுவான வலைப்பின்னல் மூலம் தென் இந்தியாவில் அனைத்து பகுதிகளுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.

சாலைகள்[தொகு]

கிருட்டிணகிரி மாவட்ட சாலைப் போக்குவரத்து சிறப்பாக விளங்குகிறது. ஏனெனில் சென்னை பெங்களூரு தொழிற்சாலை தாழ்வாரத்தில் இந்த மாவட்டம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மாவட்டத்தில் ஓசூர் சிப்காட் (தமிழ்நாட்டில் எப்போதும் வளர்ந்துவரும் துறை), கிருஷ்ணகிரி சிட்கோ போன்றவை மற்றும் மாவட்டத்தின் பிற பகுதிகளில் தொழிற்சாலைகள் கொண்டும் உள்ளது குறிப்பாக கிரானைட் தொழில், மாம்பழக் கூழ் பதப்படுத்தும் தொழில் போன்றவை இங்கு சிறப்பாக உள்ளன.

தேசிய நெடுஞ்சாலைகள்[தொகு]

மலைகளின் ஊடாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் காட்சி

பின்வரும் மூன்று தேசிய நெடுஞ்சாலைகள் கிருஷ்ணகிரி வழியாக செல்கின்றன.

  1. கிருஷ்ணகிரி - ராணிப்பேட்டை ( தேசிய நெடுஞ்சாலை 46)
  2. பாண்டிச்சேரி (நகரம்) - திருவண்ணாமலை - கிருஷ்ணகிரி ( தேசிய நெடுஞ்சாலை 66)
  3. கிருஷ்ணகிரி - மதனப்பள்ளி ( தேசிய நெடுஞ்சாலை 219)
  4. வாரணாசி - கன்னியாகுமரி ( தேசிய நெடுஞ்சாலை 7), கிருட்டிணகிரி வழியாக செல்கிறது. இது இந்தியாவின் நீளமான தேசிய நெடுஞ்சாலையாக (வாரணாசி - கன்னியாகுமரி) ஆகியவற்றை இணைக்கிறது.
  5. ஓசூர் - தொப்பசப்பிடி ( தேசிய நெடுஞ்சாலை 207)

மேற்குறிப்பிட்ட, தேசிய நெடுஞ்சாலை 46 தங்க நாற்கரச் சாலைத் திட்டம் திட்டத்தின் கீழ் உள்ளது. இது சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் (இந்தியா) மூலம் நான்கு வழிப்பாதை / ஆறு வழிச் சாலையாக மாற்றப்பட்டுள்ளது. என்.எச்7 (வடக்கு தெற்கு இடைவழி) நெடுஞ்சாலையில் போக்குவரத்து அதிகரித்த காரணமாக அண்மையில் கிருஷ்ணகிரி பெங்களூர் / ஓசூர் இருந்து அதிகரித்த போக்குவரத்தின்அணுகலை எளிதாக்க சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது.

தேசிய நெடுஞ்சாலைகளின் நீட்சி

- வரிசை எண் பாதை தேசிய நெடுஞ்சாலை எண் கி.மீ. நீளம். - 1 கன்னியாகுமரி - வாரணாசி 7 2460 - 2 கிருஷ்ணகிரி - ராணிப்பேட்டை 46 144 - 3 பாண்டிச்சேரி (நகரம்) - கிருஷ்ணகிரி 66 214 - 4 கிருஷ்ணகிரி-மதனப்பள்ளி 219 175 - 5 Sarjapur-பாகலூர் - ஓசூர் 207 155

இது தவிர மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் மாவட்ட நெடுஞ்சாலைகளின் வழியாக கிட்டத்தட்ட மாவட்டத்தின் அனைத்து நகரங்கள் மற்றும் கிராமங்கள் இணைக்கப்பட்டுள்ளது. நான்கு தேசிய நெடுஞ்சாலைகள் இந்த மாவட்டத்தின் தலைநகரமான கிருட்டிணகிரியை இணைக்கிறது.

மாநில நெடுஞ்சாலைகள் ஒரு பார்வை[தொகு]

மாவட்டத்தில் உள்ள மாநில நெடுஞ்சாலைகள் பட்டியல் பின்வருமாறு. இவை மாவட்டத்தின் கிராமங்கள் மற்றும் நகரங்களை இணைக்கின்றன.

- வரிசை எண் பாதை மாநில நெடுஞ்சாலை எண் கி.மீ. நீளம். - 1 மாலூர் - ஓசூர் - அதியமான் கோட்டை சாலை 17 101,8 - 2 சேலம் - ஊத்தங்கரை - திருப்பத்தூர் - வாணியம்பாடி 18 125 - 3 ஒகேனக்கல் - தர்மபுரி - போச்சம்பள்ளி - திருப்பத்தூர் சாலை 60A 96.6 - 4 இராயக்கோட்டை - அத்திப்பள்ளி 85 35 - 5 பருகூர் - திருப்பத்தூர் 131 34.2
கிருஷ்ணகிரி பேருந்து நிலையம்
ஒசூர் பேருந்து நிலையத்தின் ஒரு தோற்றம்

அரசு போக்குவரத்துக் கழகங்கள்[தொகு]

தர்மபுரி வட்டாரத்தைச் சேர்ந்த த.ந.அ.போ.க ( முன்னர் அன்னை சத்யா போக்குவரத்து கழகம் (ASTC) என அழைக்கப்பட்டது) இம்மாவட்டத்திலும், அருகிலுள்ள மாநிலங்களில் எல்லைப் பகுதிகளிலும் இயங்கிவருகிறது, கிருட்டிணகிரி மற்றும் ஒசூர் ஆகிய நகரங்களில் இருந்து மாநிலத்தின் அனைத்து நகரங்களுக்கும் பேருந்துகள் இயங்கிவருகிறன. இந்த மாவட்டத்தில் அருகில் உள்ள வேலூர், சேலம், திருவண்ணாமலை போன்ற பகுதிகளை மையமாகக் கொண்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளும் இம்மாவட்டத்தில் பேருந்துகளை இயக்குகின்றன. கிருட்டிணகிரியில் கிருஷ்ணகிரி நகர் மற்றும் கிருஷ்ணகிரி புறநகர் என இரு பணிமனைகளை் போக்குவரத்து கழகத்துக்காக இயங்குகின்றன. இது தவிர, த.நா.அ.வி.போ.க மற்றும் கர்நாடக அரசு போக்குவரத்துக் கழகம், போன்றவை மூலம் தேசிய நெடுஞ்சாலைகளில் விரைவு பேருந்துகள் அனைத்து நகரங்களையும் விரைந்து இணைக்கும் வகையில் இந்த மாவட்டத்தில் ஓடிக்கொண்டிருக்கின்றன.

முதன்மை பேருந்து நிலையங்கள்[தொகு]

கிருஷ்ணகிரி நகராட்சியின் எல்லைக்குள் இரண்டு பேருந்து நிலையம் உள்ளன.

  • பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையம்
  • நகர பேருந்து நிலையம் (அருகிலுள்ள கிராமங்களை இணைக்க )

ஓசூர் நகரில் தற்போது ஒருங்கிணைந்த நவீன பேருந்து நிலையம் கட்டப்பட்டு இயங்கி வருகிறது. இதற்கு ஓசூர் பேரூராட்சியின் முன்னாள் தலைவர் கே அப்பாவு பிள்ளை பெயரிடப்பட்டுள்ளது, இங்கு நகர புறநகர பேருந்துகள் இயங்கிவருகின்றன.

ஒசூர் தொடர்வண்டி நிலையம்

தொடர்வண்டி போக்குவரத்து[தொகு]

தொடர் வண்டி போக்குவரத்து இந்த மாவட்டத்தில் சாலைப் போக்குவரத்துக்கு இணையாக இல்லை. வேலூர் மாவட்டம், திருப்பத்தூரில் இருந்து கிருட்டிணகிரிவரை 1905ஆம் ஆண்டு முதல் 1936வரை பயணிகள் போக்குவரத்து பயன்பாட்டில் இருந்துவந்தது. அதன்பின் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. 1942ஆம் ஆண்டு தொடர்வண்டிப் பாதை முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இதன் பிறகான காலகட்டத்தில் இப்பகுதி மக்கள் தொடர்வண்டி வசதிவேண்டும் என கோரிவ ருகின்றனர்.[1] சேலம் - பெங்களூரு பாதையில் ஓசூர் தொடர்வண்டி நிலையம் உள்ளது. இந்த பாதை 1913இல் போடப்பட்டது. 1941இல் இப்பாதையும் மூடப்பட்டது. மீண்டும் 28 ஆண்டுகள் கழித்து பெங்களூர் சேலம் தொடர்வண்டி பாதை மீட்டர் கேஜ் பாதையாக போடப்பட்டு, போக்கவரத்து தொடங்கியது. 1996இல் இப்பாதை அகலப்பாதையாக மேம்படுத்தப்பட்டது.[2] (கிருட்டிணகிரியில் இருந்து 45 கி.மீ.) மாநில தலைநகரான சென்னையை தொடர் வண்டி பாதையில் மாவட்டத்தை இணைக்கும் வகையில் ஒசூர் ஜோலார்பேட்டை இருப்புப்பாதையை இணைக்க நீண்ட காலமாக கோரிக்கை இருந்து வருகிறது.

வானூர்தி நிலையங்கள்[தொகு]

அருகில் உள்ள வணிக பயன்பாட்டுக்கான வானூர்தி நிலையங்கள் பெங்களூரு சர்வதேச விமான நிலையம் (92 கிமீ),கோயம்புத்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் (230 கிமீ), சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம்(244 கிமீ), திருச்சிராப்பள்ளி பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகியனவாகும். உள்நாட்டு வானூர்தி நிலையங்களாக சேலம் வானூர்தி நிலையம் (110 கிமீ) (259 கி.மீ) மற்றும் தனியாரின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஓசூர் வானூர்தி நிலையம், (தனிஜா விண்வெளி & வானூர்தி நிறுவனத்தால் இயக்கப்படும் வானூர்தி தளம்) மாவட்டத்தில் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]