பருகூர்
| பருகூர் | |||||||
| ஆள்கூறு | 12°32′34″N 78°21′25″E / 12.542900°N 78.357000°E | ||||||
| நாடு | |||||||
| மாநிலம் | தமிழ்நாடு | ||||||
| மாவட்டம் | கிருஷ்ணகிரி | ||||||
| வட்டம் | பர்கூர் வட்டம் | ||||||
| ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||||
| முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||||
| மாவட்ட ஆட்சியர் | |||||||
| மக்கள் தொகை | 16,366 (2011[update]) | ||||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
| பரப்பளவு • உயரம் |
• 503 மீட்டர்கள் (1,650 அடி) | ||||||
|
குறியீடுகள்
| |||||||
| இணையதளம் | www.townpanchayat.in/bargur | ||||||
பருகூர் (Bargur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பருகூர் வட்டம் மற்றும் பருகூர் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், ஒரு பேரூராட்சியும் ஆகும்.[3] பருகூா் பேரூராட்சி விவசாயம், துணி வியாபாரம், மாங்கனி, தேங்காய், கிரானைட்டு கற்கள் கொண்ட நகரமாகும். பருகூர் நகரம் முந்தைய சேலம் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
அமைவிடம்
[தொகு]பெங்களூரு – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பர்கூர் உள்ளது. பர்கூரிலிருந்து 16 கி.மீ. தொலைவில் கிருஷ்ணகிரி உள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம் 31 கி.மீ. தொலைவில் உள்ள ஜோலார்பேட்டையில் அமைந்துள்ளது.
இதன் கிழக்கில் திருப்பத்தூர் 26 கி.மீ.; மேற்கில் கிருஷ்ணகிரி 16 கி.மீ.; வடக்கில் ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தின் குப்பம் 24 கி.மீ.; தெற்கில் தர்மபுரி 65 கி.மீ. தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
[தொகு]22.5 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 32 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி பர்கூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4][5]
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,760 வீடுகளும், 16,366 மக்கள்தொகையும் கொண்டது.[6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "34 பேரூராட்சிகளை தரம் உயர்த்தி அரசு அறிவிப்பு". தினமணி. https://www.dinamani.com/tamilnadu/2025/Jul/02/government-announces-upgrading-of-34-town-panchayats-in-tamil-nadu. பார்த்த நாள்: 8 August 2025.
- ↑ "கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி- ஓர் அறிமுகம்". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/opinion/columns/1225885-krishnagiri-lok-sabha-constituency-an-introduction-election-2024.html. பார்த்த நாள்: 3 October 2025.
- ↑ பர்கூர் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Bargur Population Census 2011