பேச்சு:பருகூர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெயர்[தொகு]

'பர்கூர்' என்பதை 'பருகூர்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது சரியானதுதானா? கிருஷ்ணகிரி மாவட்ட அரசு இணையத்தில் பர்கூர் எனவே குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பர்கூர் என்னும் கூகுள் தேடலுக்கு 32,700 முடிவுகளும், பருகூர் என்னும் தேடலுக்கு 2,030 முடிவுகளும் கிடைக்கின்றன. ஆகையால் பரவலாக பயன்படுத்தப்படும் பெயர் என்னும் அடிப்படையில் இக்கட்டுரை மற்றும் இதனுடன் தொடர்புபடுத்தி பெயர் மாற்றம் செய்த மற்ற கட்டுரைகளையும் பர்கூர் என்னும் பெயருக்கு முன்னிலையாக்க வேண்டும். --சத்தியராஜ் (பேச்சு) 07:50, 30 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]


நேற்று நான் பருகூர் வழியாக பேருந்தில் ஒசூருக்கு வந்தபோது, அந்த ஊரில் உள்ள பெயர்ப் பலகைகளில் பருகூர் என்று இருப்பதைப் பார்த்தேன். அதன் பின்னர் விக்கிப்பீடியாவில் பார்த்தபோது அது தவறாக இருப்பதை உணர்ந்து அப்பெயரை பெயரை மாற்றினேன்.--கு. அருளரசன் (பேச்சு) 08:58, 30 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]

மிகச்சரி. பேருந்துகளில் பர்கூர் / பருகூர் என்று இரண்டையும் பயன்படுத்துகின்றனர். அரசு இணையத்தளம், அரசு அலுவலகங்கள் போன்ற இடங்களிலும் மேற்கூறிய இரண்டு எழுத்துக்கூட்டலையும் உபயோகிக்கின்றனர். குழப்பம் தான். --சத்தியராஜ் (பேச்சு) 11:28, 30 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பருகூர்&oldid=3612235" இலிருந்து மீள்விக்கப்பட்டது