வீர இராமநாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வீர இராமநாதன் (ஆட்சிக்காலம் 1254-1295) என்பவன் ஒரு போசாள மன்னனாவான்.

இவனது தந்தையான வீர சோமேசுவரன் தனது பேரரசை இரண்டாகப் பிரித்து நாட்டின் வடக்குப் பகுதியான கர்நாடகப் பகுதியைத் தன் மகன் மூன்றாம் நரசிம்மனுக்கும் தெற்குப் பகுதியான தமிழ்நாட்டின் வடக்குப் பகுதியை மற்றொரு மகனான இராமநாதனுக்கும் அளித்தான். நாடு விரிவாக இருந்ததாலும், நிர்வாக வசதிக்காகவும் அமைதியான முறையில் நாடு இரண்டாகப் பிரிக்கப்பட்டது.

வீர இராமநாதன் குந்தாணியை (இன்றைய கிருட்டிணகிரி வட்டம் சின்னகொத்தூர் கிராமம்) தன் தலைநகராகக் கொண்டான். [1] இவனது ஆறாம் ஆட்சியாண்டு முதல் நாற்பத்தொன்றாம் ஆட்சியாண்டுவரையான கல்வெட்டுகள் இங்குக் கிடைக்கின்றன.

சோழப் பேரரசு வீழ்ச்சியுற்று பாண்டிய பேரரசு எழுச்சியுற்றது. இது இராமநாதனுக்கு ஆபத்தானது. மாறவர்மன் குலசேகரன் சோழர், போசாளர் ஆட்சிப்பகுதிகளை வென்றான். இவ்வாறு தமிழகப் பகுதிகளை இழந்ததால், தன் தமையனான மூன்றாம் நரசிம்மனோடு கலகம் செய்து அவனிடமிருந்து பெங்களூர்,கோலார்,தும்கூர் ஆகிய பகுதிகளைப் பெற்றான்.[2]

உசாத்துணை[தொகு]

  1. "ஒசூர் அருகே 13-ஆம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டெடுப்பு". செய்தி. தினமணி. 2016 நவம்பர் 27. 18 சூன் 2017 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
  2. தகடூர் வரலாறும் பண்பாடும்,இரா.இராமகிருட்டிணன். பக்.254,261

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வீர_இராமநாதன்&oldid=2487956" இருந்து மீள்விக்கப்பட்டது