மேச்சேரி பத்ரகாளியம்மன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேச்சேரி பத்ரகாளியம்மன் கோயில்
பெயர்
பெயர்:மேச்சேரி பத்ரகாளியம்மன் கோயில்,சேலம்
அமைவிடம்
அமைவு:மேச்சேரி சேலம் , தமிழ்நாடு
கோயில் தகவல்கள்
மூலவர்:பத்ரகாளியம்மன்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:கோவில்
வரலாறு
கட்டப்பட்ட நாள்:800 ஆண்டுகளுக்கு முன்

அருள்மிகு பத்ரகாளியம்மன் கோயில் சேலம் மாவட்டத்தில், சேலம் மாவட்டத்தில் மேச்சேரியில் உள்ளது.

கோயில்[தொகு]

இந்தக் கோவில் பிரதான வாசல் வடக்கு நோக்கிய ராஜகோபுரத்துடன் கம்பீரமாகக் காட்சி அளிக்கிறது. மேலும் கோவிலைச் சுற்றி உயர்ந்த மதில்களும், நான்கு திசைகளிலும் நான்கு கோபுரங்களுடன் கூடிய வாசல்களும் உள்ளன.

மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவிலில் அன்னையின் அஷ்டபுஜங்களில் பிரம்மா, விஷ்ணு, ருத்ரரூபமான சூலாயுதம், கபாலம், உடுக்கை, வாள், கேடயம், தலை, மணிகளை தாங்கிய தண்டையணி பொன்சலங்கை அணிந்து வலதுகால் மேலூன்றி,

பொன் சலங்கை அணிந்த இடது காலை அசுரன் மீது ஊன்றி வீராசனத்தில் அமர்ந்து, மூக்கில் மின்னும் மூக்குத்தியும், பவளமாய் ஜொலிக்கும் புன்சிரிப் புடனும், அக்னி மகுடமும், குண்டலமும் அணிந்து தேவியாய், பத்ரகாளியாய் அனைவருக்கும் அருள்புரிகின்றாள்.

தோசம் தீர்க்கும் தலம்[தொகு]

அன்னையைத் தரிசனம் செய்வதால் 21 தலைமுறையில் செய்த பாவங்கள், சோகம், ரோகம் போன்றவை நீங்கும். வித்தை, புத்தி சித்திக்கும். அஷ்டமாசித்திகளும் அன்னையை பணிந்து வழிபட்டால் கைகூடிவரும்.

மேலும் பாவ தோஷங்கள், ஏவல், பில்லிசூனியம், எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள், ராகு, கேது தோஷத்தால் ஏற்படும் திருமண தடைகள், குழந்தை பேறின்மை ஆகியவைகளுக்கு ராகுகாலத்தில் எலுமிச்சை விளக்கு ஏற்றி வழிபட்டால் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும்.

மேலும் மனநோய் பாதித்தவர்கள் ஒருமண்டலம் இங்குவந்து தீர்த்தம், விபூதி உட்கொண்டால் நோய் நீங்குகிறது. பேய், பிசாசு பிடித்தவர்கள் வந்து பூதகணங்களின் முன் கூட்டு பிரார்த்தனை செய்து விபூதி அணிந்தால் அவைகள் நீங்கிவிடுகிறது.

கால்நடைகளுக்கு ஏற்படும் நோய் நீங்க பக்தர்கள் வீபூதி பெற்று செல்கின்றனர்.' மக்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறியதும் ஆலயத்திற்கு வந்து பொங்கல் வைத்து வழிபாடு செய்கின்றனர்.

பூஜைகள்[தொகு]

தினமும் காலை, மாலை வேளைகளில் பூஜை நடைபெறும்.

திருவிழா[தொகு]

மாசி மாதம் திருவிழா நடைபெறும்.அப்போது பூக்கரகம் எடுத்தல் ,அலகு குத்துதல், அக்னிக்குண்டம் இறங்குதல், தீச்சட்டி எடுத்தல் என பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துவார்கள்.

அமைவிடம்[தொகு]

சேலத்தில் இருந்து 32 கிலோமீட்டர் தொலைவிலும், மேட்டூர் அணையில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும் 800 ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்த பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது

வெளியிணைப்புகள்[தொகு]