உள்ளடக்கத்துக்குச் செல்

கஞ்சமலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கஞ்சமலையின் காட்சி

கஞ்சமலை என்பது சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு மலை ஆகும். இந்த மலையில் சித்தர்கள் அதிகம் வாழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது. சேலம் மாநகரத்திலிருந்து வடமேற்கு திசையில் இம்மலை அமைந்துள்ளது. சேலத்திலிருந்து இளம்பிள்ளைக்குச் செல்லும் வழியில் மலையின் வடக்கு அடிவாரத்தில் சித்தர்கோயில் அமைந்துள்ளது. சித்தர் கோயிலின் அருகில் ஒரு நீரோடை ஓடுகிறது. இது வற்றாத நீருற்றாக உள்ளது. இந்த மலையின் இரும்புத்தாது கலந்த இந்த நீர் நோயை நீக்கும் அருமருந்தாகச் சொல்லப்படுகிறது. இந்த மலையில் காளங்கிநாதர் என்ற சித்தர் வாழ்ந்தார் என்பதற்கான குறிப்பு திருமூலர் திருமந்திரத்தில் உள்ளது. மலையின் உச்சியில் மேல்சித்தர்கோயில், கரியபெருமாள் கோயில் ஆகிய கோயில்கள் உள்ளன. மலையடிவாரத்தில் உள்ள சித்தர் கோயிலில் இருந்து சிறிய வழித்தடத்தில் நடந்து மேல்சித்தர் கோயிலுக்குச் செல்லலாம். மேல்சித்தர்கோயில் அருகில் ஓர் ஊற்றும் நீரோடையும் உள்ளது.மலையின் தென்பகுதியில் சடையாண்டி ஊற்று உள்ளது.[1] இந்த இடத்தில் சடையாண்டிச் சித்தர் வாழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது.

சித்தர் கோயில்: இது கஞ்சமலையின் அடிவாரத்தில் உள்ளது

கஞ்சமலைக் காட்சிக்கூடம்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-10-26. Retrieved 2011-11-03.
விக்கிமீடியா பொதுவகத்தில்,
கஞ்சமலை
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கஞ்சமலை&oldid=4364286" இலிருந்து மீள்விக்கப்பட்டது