எம். ஆர். விஜயபாஸ்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எம். ஆர். விஜயபாஸ்கர் ஓர் தமிழக அரசியல்வாதியும், தற்போதைய தமிழகத்தின் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் கரூர் வடிவேல் நகரில் குடும்பத்துடன் வசித்து வரும் இவர் பட்டப்படிப்பு வரை படித்துள்ளார்.[சான்று தேவை] இவருடைய மனைவி பெயர் விஜயலட்சுமி. இவருக்கு அட்சயநிவேதா, அஸ்வர்தவர்ணிகா என இருமகள்கள் உள்ளனர். அதிமுக வைச் சேர்ந்த இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை கரூர் பசுபதீசுவரர் கோயில் அறங்காவல் குழு தலைவராக பணியாற்றினார். 2016 ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் கரூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, போக்குவரத்து துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "புதிய அமைச்சர்கள் வாழ்க்கை குறிப்பு". தினத்தந்தி. 29 மே 2016. பார்க்கப்பட்ட நாள் 29 மே 2016.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._ஆர்._விஜயபாஸ்கர்&oldid=3943133" இலிருந்து மீள்விக்கப்பட்டது