கபிலர்மலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கபிலர்மலை தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டத்தில் பரமத்தி-வேலூர் வட்டத்தில் உள்ள ஒரு ஊராட்சி ஒன்றியம் ஆகும். இங்கு புகழ்பெற்ற பாலசுப்ரமணியர் கோவில் உள்ளது. 2008ல் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையால் கபிலர்மலை சட்டமன்ற தொகுதி நீக்கப்பட்டு பரமத்தி-வேலூர் புதிய சட்டமன்ற தொகுதியாக அறிவிக்கப்பட்டது. இங்கு தை பூசம் தேர் திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும். வேளாண்மை முக்கிய தொழில். பல சிறு கிராமத்தை தன்னுள் கொண்டுள்ள ஊர்.

கோவிலில் பாலசுப்ரமணியர் -முருகன் மையக் கடவுள்.,மலை உச்சியில் பிள்ளையார் உள்ளது. மலையில் வற்றாத சுனை நீர் உள்ளது; இந்த மலையில் ஒரு சில அரிய மூலிகை உள்ளது குறிப்பிடத்தக்கது; மேலும் கோவில் கட்டியவர் பற்றியும் அதன் வருடம் பற்றி சரியான தகவல் தெரியவில்லை; மலையில் சில கல்வெட்டு காணப்படுகின்றன. !! கோவிலில் உள்ளே அழகான சிற்பங்களும், ஓவியம் காணப்படுகின்றது

மேலும் இங்கு உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி(1909-) நூற்றாண்டு கடந்து நிற்கிறது இதன் சிறப்பு. தமிழ் நாட்டின் சுற்றுலா தளமான ஜேடர்பாளையம், கபிலர்மலை அருகில் உள்ளது..

"https://ta.wikipedia.org/w/index.php?title=கபிலர்மலை&oldid=1746810" இருந்து மீள்விக்கப்பட்டது