மடிக்கேரி

ஆள்கூறுகள்: 12°25′N 75°44′E / 12.41°N 75.73°E / 12.41; 75.73
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மடிகேரி
—  பேரூர்  —
மடிகேரி
இருப்பிடம்: மடிகேரி

, கருநாடகம்

அமைவிடம் 12°25′N 75°44′E / 12.41°N 75.73°E / 12.41; 75.73
நாடு  இந்தியா
மாநிலம் கருநாடகம்
மாவட்டம் குடகு
ஆளுநர் தவார் சந்த் கெலாட்
முதலமைச்சர் பசவராஜ் போமாய்
மாநகராட்சித் தலைவர்
மக்களவைத் தொகுதி மடிகேரி
மக்கள் தொகை 30,000 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


1,170 மீட்டர்கள் (3,840 ft)

குறியீடுகள்


மடிகேரி (கன்னடம்: ಮಡಿಕೇರಿ) கர்நாடக மாநிலம் (தென்னிந்தியா) குடகு மாவட்டத்தில் உள்ள நகரம். இந்நகரத்தின் மக்கள்தொகை 30,000.

கடல் மட்டத்திலிருந்து 1,170 மீ மேல் உள்ள இந்நகரம் கிழக்கே மைசூர் நகரையும், மேற்கே மங்களூர் நகரையும் கொண்டுள்ளது.

19ஆம் நூற்றான்டில் கட்டப்பட்ட மடிக்கேரி கோட்டை இந்நகரின் மையப்பகுதியில் உள்ளது. இங்கு ஒரு கோயில், திருச்சபை, சிறைச்சாலை மற்றும் சிறிய அருங்காட்சியம் ஒன்றும் உள்ளது.

இந்தக் கோட்டையின் அரச பீடத்தில் இருந்து நகரத்தின் பல பகுதிகளையும் கிராமப்புறப் பகுதிகளையும் காணலாம்.

சொற்பிறப்பியல்[தொகு]

1633 முதல் 1687 வரை குடகினை ஆண்ட முக்கிய ஆலேரி மன்னர் முத்துராஜாவின் நினைவாக மடிகேரி, முத்துராஜா கேரி[1] என்று அழைக்கப்பட்டது.[2][3] இது முத்துராஜாவின் நகரம் என்று பொருள்படும். 1834 முதல், பிரித்தானிய ஆட்சியின் போது, ​​மெர்காரா என்று அழைக்கப்பட்டது. பின்னர் மைசூர் அரசால் மடிகேரி எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.[4][5]

மக்கள்தொகை[தொகு]

2011ஆம் ஆண்டு இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மடிகேரியில் 33,381 மக்கள் உள்ளனர். இவர்களில் ஆண்கள் 57.2% மற்றும் பெண்கள் 42.8%. மடிகேரியின் சராசரி கல்வியறிவு 85% ஆகும். இது தேசிய சராசரியான 69.3ஐ விட அதிகமாக உள்ளது. ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 80%. மக்கள் தொகையில் 11% பேர் 6 வயதுக்குட்பட்டவர்கள்.[6]

புவியியல் மற்றும் காலநிலை[தொகு]

மடிக்கேரி, 1,170 மீ (3,840 அடி) உயரத்தில் உள்ளதால், வெப்பமண்டல உயர்நில காலநிலையைக் கொண்டுள்ளது. மடிகேரி 12.42°வ 75.73°கி-ல் அமைந்துள்ளது.[7][8] மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மடிகேரி ஒரு பிரபலமான மலைப்பிரதேச சுற்றுலா தலம் ஆகும். இதன் அருகிலுள்ள நகரங்கள் வடக்கே ஹாசன், மேற்கில் மங்களூரு மற்றும் கிழக்கே மைசூரு ஆகும். மடிக்கேரி அருகிலுள்ள பன்னாட்டு வானூர்தி நிலையம் கண்ணூரில் அமைந்துள்ளது. இது 80 கிமீ (50 மைல்) தொலைவில் உள்ளது.

சராசரி தினசரி குறைந்தபட்ச வெப்பநிலை சனவரியில் 11 °C (52 °F) குறைவாக இருக்கும். கோடையில் அதிகபட்ச வெப்பநிலை 24 முதல் 27 °C (75 முதல் 81 °F) வரை இருக்கும்.[9] தென்மேற்கு பருவமழை தொடங்குவதால், சூன் மாதத்தில் வெப்பநிலை குறைந்து, குளிர்ச்சியான வானிலை நிலவுகிறது. பதிவு செய்யப்பட்ட குறைந்த வெப்பநிலை 4.5 °C (40.1 °F) ஆகும்.

தட்பவெப்ப நிலைத் தகவல், Madikeri (1981–2010, extremes 1901–2012)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 31.7
(89.1)
32.1
(89.8)
34.2
(93.6)
34.2
(93.6)
35.0
(95)
32.2
(90)
28.9
(84)
31.0
(87.8)
30.0
(86)
30.3
(86.5)
28.5
(83.3)
29.0
(84.2)
35.0
(95)
உயர் சராசரி °C (°F) 26.4
(79.5)
28.2
(82.8)
29.8
(85.6)
29.4
(84.9)
27.5
(81.5)
23.3
(73.9)
21.6
(70.9)
21.6
(70.9)
23.6
(74.5)
25.0
(77)
25.3
(77.5)
25.3
(77.5)
25.6
(78.1)
தாழ் சராசரி °C (°F) 12.4
(54.3)
13.1
(55.6)
15.0
(59)
17.5
(63.5)
18.1
(64.6)
17.6
(63.7)
17.2
(63)
17.2
(63)
17.1
(62.8)
16.9
(62.4)
15.6
(60.1)
13.2
(55.8)
15.9
(60.6)
பதியப்பட்ட தாழ் °C (°F) 4.8
(40.6)
5.1
(41.2)
7.6
(45.7)
10.6
(51.1)
9.4
(48.9)
9.2
(48.6)
8.8
(47.8)
9.5
(49.1)
10.0
(50)
10.6
(51.1)
7.9
(46.2)
5.5
(41.9)
4.8
(40.6)
மழைப்பொழிவுmm (inches) 1.6
(0.063)
3.0
(0.118)
15.0
(0.591)
65.3
(2.571)
128.7
(5.067)
646.3
(25.445)
952.5
(37.5)
821.0
(32.323)
274.7
(10.815)
211.0
(8.307)
70.8
(2.787)
20.0
(0.787)
3,210.0
(126.378)
ஈரப்பதம் 58 55 57 69 77 90 93 93 88 83 74 65 76
சராசரி மழை நாட்கள் 0.2 0.3 1.6 5.0 7.8 22.2 27.0 26.2 16.2 12.2 4.4 1.1 124.1
ஆதாரம்: India Meteorological Department[10][11]
நகரின் மையத்தில் அமைந்துள்ல சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் இராஜா இருக்கை

மேற்கோள்கள்[தொகு]

  1. Coorg History பரணிடப்பட்டது 2009-04-26 at the வந்தவழி இயந்திரம்
  2. Kushalappa, Mookonda (2018). 1785 Coorg. Madikeri, Kodagu: Codava Makkada Coota. 
  3. Kushalappa, Mookonda (2013) (in English). The early Coorgs. Chennai: Notion Press. 
  4. Kushalappa, Mookonda Nitin (2018) (in English). Kodagu principality vs British Empire. Madikeri, Kodagu: Codava Makkada Coota. 
  5. Kushalappa, Mookonda (2014) (in English). Long ago in Coorg. Chennai: Pothi. 
  6. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. 2004-06-16 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2008-11-01 அன்று பார்க்கப்பட்டது.
  7. Madikeri, FallingRain.com
  8. "Maps, Weather, and Airports for Madikeri, India". www.fallingrain.com.
  9. Ground Water Information Booklet, Ministry of Water Resources, 2007. Retrieved 23 June 2011.
  10. "Station: Madikeri/Mercara Climatological Table 1981–2010" (PDF). Climatological Normals 1981–2010. India Meteorological Department. January 2015. pp. 489–490. 5 February 2020 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 19 April 2020 அன்று பார்க்கப்பட்டது.
  11. "Extremes of Temperature & Rainfall for Indian Stations (Up to 2012)" (PDF). India Meteorological Department. December 2016. p. M99. 5 February 2020 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 19 April 2020 அன்று பார்க்கப்பட்டது.


"https://ta.wikipedia.org/w/index.php?title=மடிக்கேரி&oldid=3725274" இருந்து மீள்விக்கப்பட்டது