பாப்பிரெட்டிப்பட்டி (சட்டமன்றத் தொகுதி)
பாப்பிரெட்டிப்பட்டி | |
---|---|
தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 60 | |
![]() தருமபுரி மாவட்டத்தில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | தென்னிந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தருமபுரி |
மக்களவைத் தொகுதி | தருமபுரி |
நிறுவப்பட்டது | 2011 |
ஒதுக்கீடு | பொது |
சட்டமன்ற உறுப்பினர் | |
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | அதிமுக |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
பாப்பிரெட்டிப்பட்டி தர்மபுரி மாவட்டத்தின் புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். தருமபுரி மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளில் ஒன்றாகும். இந்த தொகுதி 1977-ஆம் ஆண்டு முதல் மொரப்பூர் சட்டமன்ற தொகுதியாக இருந்து வந்தது. பின்பு தொகுதி சீரமைப்பு நடவடிக்கையில் 2011-ஆம் ஆண்டு முதல் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியாக மாறியது.
இது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.
2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இந்த தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 2 லட்சத்து 59 ஆயிரத்து 417 பேர். இதில் ஆண் வாக்காளர்கள் 1,30,573 பேர் மற்றும் பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை 1,28,814 ஆகும். அதிமுக சார்பில் ஏ. கோவிந்தசாமி. திமுக சார்பில் டாக்டர் எம். பிரபு ராஜசேகர், மக்கள் நீதி மய்யம் சார்பில் வி. ஸ்ரீனிவாசன், நாம் தமிழர் கட்சி சார்பில் ரமேஷ், அமமுக சார்பில் பி. பழனியப்பன் நிறுத்தப்பட்டனர்.[1]
இந்த தொகுதியில் தருமபுரி வட்டம் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தின் பகுதிகள் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, பி. மல்லாபுரம், கடத்தூர் என 3 பேரூராட்சிகள் உள்ளது.
இந்த சட்டமன்ற தொகுதியின் பிரதான தொழில் விவசாயம், சிறு தானியங்கள், நெல், கரும்பு, வாழை, பாக்கு, மர வள்ளிக் கிழங்கு, கடலை, வெற்றிலை, பூ போன்றவை பயிரிடப்படுகின்றது. நீர் பாசனத்திற்கு சேர்வராயன் மலையில் இருந்து வரும் வாணியாறு நீர் தேக்க தண்ணீர் மட்டுமே. மீதி தேவையை நிலத்தடியில் கிணறு, ஆழ்துளை மூலம் தண்ணீர் பாசனம் பெறுகிறது.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
[தொகு]- தர்மபுரி வட்டம் (பகுதி)
கே.நடுஅள்ளி, நல்லன்அள்ளி, கோணங்கிநாய்க்கன்அள்ளி, வெள்ளானபட்டி, ஆண்டிஅள்ளி, கிருஷ்ணாபுரம், புழுதிக்கரை, கொண்டம்பட்டி, குப்பூர், அனேதர்மபுரி, செட்டிக்கரை, நாய்க்கனஅள்ளி, அக்கமனஅள்ளி, மூக்கனூர், வெள்ளோலை, உங்கரானஅள்ளி, நூலஅள்ளி, முக்கல்நாய்க்கனஅள்ளி, வத்தலமலை, திப்பிரெட்டிஅள்ளி, வேப்பிலைமுத்தம்பட்டி, கொண்டகரஅள்ளி மற்றும் குக்கல்மலை கிராமங்கள்,
- பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் (பகுதி)
மணியம்பாடி, சிங்கிரிஅள்ளி, கெரகோடஅள்ளி, சிந்தல்பாடி, லிங்கிநாயக்கனஅள்ளி, போசிநாய்க்கனஅள்ளி, நல்லசூட்லஅள்ளி, கெடகாரஅள்ளி, கடத்தூர், மடதஅள்ளி, புட்டிரெட்டிப்பட்டி, பசவபுரம், குருபரஅள்ளி, தின்னஅள்ளி, பாலசமுத்திரம், பெத்தூர், சிக்கம்பட்டி, கோபிசெட்டிப்பாளையம், பாப்பிசெட்டிப்பட்டி, அண்ணாமலைப்பட்டி, அல்லாலபட்டி, தென்கரைக்கோட்டை, துரிஞ்சிஅள்ளி, ராமேயனஅள்ளி, பெத்தசமுத்திரம், தாதனூர், பபுனிநாய்க்காஅள்ளி, உனிசேனஅள்ளி, பத்தலமலை, ரேகடஅள்ளி, மேக்கலநாய்க்கனஅள்ளி, பாப்பம்பாடி, புதுப்பட்டி, ஆலாபுரம், மெணசி, பூதிநத்தம், குண்டமடுவு, கதிரிபுரம், கும்பாரஅள்ளி, பொம்மிடி, வெள்ளாளப்பட்டி, பி.பள்ளிப்பட்டி, ஜங்கலஅள்ளி, பைரநத்தம், தேவராஜபாளையம், மோளையானூர், வெங்கடசமுத்திரம், கோழிமேக்கனூர், அதிகாரப்பட்டி, தாதம்பட்டி, கவுண்டம்பட்டி, மூக்காரெட்டிப்பட்டி, இருளப்பட்டி, ஏ.பள்ளிப்பட்டி, நாரணாபுரம், கோபாலபுரம், மாங்கடை, போதக்காடு, சேம்பியானூர், அஜ்ஜம்பட்டி மற்றும் கதரணம்பட்டி கிராமங்கள்.
- கடத்தூர் (பேரூராட்சி), பொ.மல்லாபுரம் (பேரூராட்சி) மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி (பேரூராட்சி).[2]
வெற்றி பெற்றவர்கள்
[தொகு]ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
2011[3] | பெ. பழனியப்பன் | அதிமுக | 76582 | 45.39 | வ. முல்லைவேந்தன் | திமுக | 66093 | 39.17 |
2016[4] | பெ. பழனியப்பன் | அதிமுக | 74234 | 35.56 | அ. சத்தியமூர்த்தி | பாமக | 61521 | 29.47 |
2019 இடைத்தேர்தல் | ஆ. கோவிந்தசாமி | அதிமுக | 100947 | ஆ. மணி | திமுக | 83165 | ||
2021 | ஆ. கோவிந்தசாமி | அதிமுக[5] | 114,507 | 51.81 | எம். பிரபு ராஜசேகர் | திமுக | 77,564 | 35.10 |
2016 சட்டமன்றத் தேர்தல்
[தொகு]வாக்காளர் எண்ணிக்கை
[தொகு], 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
---|---|---|---|
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்
[தொகு]ஆண்கள் | பெண்கள் | மொத்தம் | |
---|---|---|---|
வேட்புமனு தாக்கல் செய்தோர் | |||
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர் | |||
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர் | |||
களத்தில் இருந்த வேட்பாளர்கள் [6] | 14 | 0 | 14 |
வாக்குப்பதிவு
[தொகு]2011 வாக்குப்பதிவு சதவீதம் | 2016 வாக்குப்பதிவு சதவீதம் | வித்தியாசம் |
---|---|---|
% | % | ↑ % |
வாக்களித்த ஆண்கள் | வாக்களித்த பெண்கள் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | வாக்களித்த ஆண்கள் சதவீதம் | வாக்களித்த பெண்கள் சதவீதம் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் | மொத்த சதவீதம் |
% | % | % | % |
நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
---|---|
1467 | 0.7 % |
முடிவுகள்
[தொகு]எண் 060 - பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி | ||||
---|---|---|---|---|
மொத்த செல்லுபடியாகும் வாக்குகள் | 2,08,754 | |||
வ. எண் | வேட்பாளர் பெயர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
1 | பெ. பழனியப்பன் | அதிமுக | 74234 | 35.56 |
2 | அ. சத்தியமூர்த்தி | பாமக | 61521 | 29.47 |
3 | ம. பிரபு இராஜசேகர் | திமுக | 56109 | 26.88 |
4 | ஆ. பாஸ்கர் | தேமுதிக | 9441 | 4.52 |
5 | கோ. அசோகன் | கொமதேக | 1760 | 0.84 |
6 | அனைவருக்கும் எதிரான வாக்கு | நோட்டா | 1467 | 0.7 |
7 | கு. கோபி | பசக | 827 | 0.4 |
8 | அ. இராஜலிங்கம் | சுயேட்சை | 818 | 0.39 |
9 | வ. ராஜ்குமார் | சுயேட்சை | 771 | 0.37 |
10 | மா. மூவேந்தன் | நாதக | 588 | 0.28 |
11 | கி. சரவணன் | இமமாக | 293 | 0.14 |
12 | மு. முனிராஜ் | சுயேட்சை | 287 | 0.14 |
13 | மா. சுந்திரமூர்த்தி | இஜக | 270 | 0.13 |
14 | வெ. இரகு | சுயேட்சை | 204 | 0.1 |
15 | இரா. தனபால் | சக | 164 | 0.08 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 2021 பொதுத்தேர்தல், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி, கண்ணோட்டம்
- ↑ "DELIMITATION OF PARLIAMENTARY AND ASSEMBLY CONSTITUENCIES ORDER, 2008" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2016-01-29.
- ↑ 2011 இந்திய தேர்தல் ஆணையம்
- ↑ "2016 தமிழக சட்டமன்றத் தேர்தல் - தொகுதிவாரியாக வாக்களித்தவர் விவரம்" (PDF). தமிழ்நாடு தேர்தல் ஆணையம். Retrieved 18 நவம்பர் 2016.
- ↑ பாப்பிரெட்டிபட்டி சட்டமன்றத் தேர்தல் 2021 ஒன் இந்தியா
- ↑ "2016 தமிழக சட்டமன்றத் தேர்தல் - வேட்பாளர்கள் எண்ணிக்கை" (PDF). தமிழ்நாடு தேர்தல் ஆணையம். Retrieved 18 நவம்பர் 2016.