பெ. பழனியப்பன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெ. பழனியப்பன் (P. Palaniappan) என்பவர் ஓர் தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் தரும்புரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டிக்கு அருகிலுள்ள மோளையனூர் கிராமத்தைச் சேர்ந்தவர். 1980 இல் அ.தி.மு.க. வில் இணைந்த பழனியப்பன் கிளைச் செயலாளராகி, பின் மாவட்ட அளவில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். 2001-2006 காலகட்டத்தில் மொரப்பூர் தொகுதியில் இருந்து சட்டப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2011 இல் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியிலிருந்து தமிழக சட்டபேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு.[1] தமிழக அரசின் முன்னாள் உயர்கல்வித் துறை அமைச்சராக நியமிக்கபட்டார்.[2] 2016 சட்டம்ன்றத் தேர்தலில் மீண்டும் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார் என்றாலும் இவருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. இதற்கிடையில் புதிய அரசு அமைந்த சில மாதங்களில் ஜெயலலிதா இறந்தார். அதைத் தொடர்ந்து அதிமுகவில் பல மாற்றங்கள் ஏற்பட்டு எடப்பாடி க. பழனிசாமி முதலமைச்சரானார். பின்னர் அதிமுகவில் இருந்து விலகி தினகரன் அமமுக வில் இணைந்தார் அக்கட்சியின் துணை பாெதுச்செயலாளாராக இருந்துள்ளார். 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியுற்றார். இந்நிலையில் அமமுக வில் இருந்து விலகி திமுக கட்சித் தலைவர் மு. க. ஸ்டாலின் முன்னிலையில், 3 சூலை 2021 அன்று அவர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்.[3]

பள்ளிக் கல்வி அமைச்சர்[தொகு]

2013 செப்டம்பர் 5 ஆம் நாள் வைகைச் செல்வன் பள்ளிக் கல்வி அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதும், பள்ளிக் கல்வி அமைச்சர் பதவியை பி. பழனியப்பன் கூடுதல் பொறுப்பாக ஏற்றார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்கள் 2011" (PDF). தமிழக அரசு விவர தொகுப்பு அகராதி. Archived from the original (PDF) on 2013-04-02. பார்க்கப்பட்ட நாள் 2011-12-10.
  2. "தமிழக அமைச்சரவை". தமிழக அரசு. Archived from the original on 2011-08-25. பார்க்கப்பட்ட நாள் 2011-12-10.
  3. Key AMMK leader Palaniappan joins DMK in presence of Stalin. The New Indian Express. 3 july 2021. https://www.newindianexpress.com/states/tamil-nadu/2021/jul/04/key-ammk-leader-palaniappan-joins-dmk-in-presence-of-stalin-2325260.html. 
  4. அமைச்சர் வைகைச்செல்வன் பதவியில் இருந்து நீக்கம் 05 September 2013 04:55 PM IST பரணிடப்பட்டது 2013-09-08 at the வந்தவழி இயந்திரம் தினமணி பார்த்த நாள் 5.9.2013


"https://ta.wikipedia.org/w/index.php?title=பெ._பழனியப்பன்&oldid=3701309" இலிருந்து மீள்விக்கப்பட்டது