வ. முல்லைவேந்தன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வ. முல்லைவேந்தன் என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதி மற்றும் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை முன்னாள் அமைச்சராவார். இவர் ஆசிரியராக தன் வாழ்வைத் துவக்கியவர். இவர் தன் அரசியல் வாழ்வில் முதலில் அ.இ.அ.தி.மு.க பேச்சாளராக இருந்தவர். பின் தி.மு.கவில் இணைந்து தருமபுரி மாவட்ட தி. மு.க. செயலாளராக ஆனார். தமிழக சட்டமன்ற உறுப்பினராக1989, 1996, 2016 ஆம் ஆண்டுகளில் மொரப்பூர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தி.மு.க. அமைச்சரவையில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராக 1996இல் நியமிக்கப்பட்டார். 2001 ஆண்டின் துவக்கத்தில் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார். 2001 ஆண்டைய சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றார். மீண்டும் 2006 ஆண்டைய தேர்தலில் வெற்றி பெற்றார். 2014 ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. அடைந்த தோல்விக்கு விளக்கம் கேட்டு, அப்போது தர்மபுரி தெற்கு மாவட்டப் பொறுப்பாளராக இருந்த முல்லைவேந்தன் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பியது கட்சி தலைமை, பிறகு முல்லைவேந்தன் முறையான விளக்கம் அளிக்கவில்லை என்று கூறி 2015 ஆண்டு சூலை மாதம் அவர் தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில் தே.மு.தி.கவில் இணைந்தார்,[1][2] என்றாலும் தீவிரமாக செயல்படாமல் ஒதுங்கி இருந்தார்.

இந்நிலையில் கருணாநிதியின் மறைவையடுத்து திமுக தலைவராக மு. க. ஸ்டாலின் ஆன பிறகு 2018 ஆகத்து 31 அன்று மீண்டும் திமுகவில் இணைந்தார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வ._முல்லைவேந்தன்&oldid=2721055" இருந்து மீள்விக்கப்பட்டது