திராவிடதேசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
South India Map 1794.jpg

திராவிடதேசம் (Dravida Kingdom) குளிந்ததேசத்தின் தெற்பாகத்தில் ஓடும், கிருட்டிணா நதிக்கு தெற்கிலும், சோழதேசத்திற்கு வடக்கிலும்,விசாலமான பூமியில் பரவி இருந்த தேசம்.[1]

இருப்பிடம்[தொகு]

இந்த தேசத்தில் பூமி கிடைமட்டமாகவும், மேடு, பள்ளமும், காணப்படும். இந்த தேசம் வருடத்தில் 6 மாத காலம் வெப்பம் அதிகமாக இருப்பதால் இப்பூமியின் மக்கள் கருத்த நிறமுடையவர்களாக இருப்பார்கள்.[2]

மலை, காடு, விலங்குகள்[தொகு]

இந்த தேசத்தின் நான்கு பக்கங்களிலும் மலைகள் உண்டு. இவை பெரும்பாலும் சிறு, சிறு குன்றுகளும், சிறு, சிறு காடுகளும் செழிப்பான நல்ல பூமி அதிகமாகவும் இருக்கும்.

நதிகள்[தொகு]

இந்த திராவிடதேசத்தில் சுவர்ணமுகி நதியும், வேகவதி நதியும், க்ஷீரநதி (பாலாறு) பெண்ணையாறு, கருடநதி சேர்ந்து திராவிடதேசத்தை செழிக்க வைக்கின்றது.[3]

வேளாண்மை[தொகு]

இந்த திராவிடதேசத்தில் நந்தவனங்கள், ஈச்சை, நாணல், கொங்கு, பனை, பலா, புளி, இலவை, இலுப்பை, முதலிய எண்ணெய் வித்துக்கள் உள்ள மரங்களும், துவரை, கடலை போன்ற புன்செய் பயிர்களும் விளைகின்றது.

சிறப்பு[தொகு]

இந்த திராவிடதேசத்தின் நடுவில் திருவேங்கடமும், காஞ்சிபுரமும் சிறப்பு வாய்ந்த தலங்களாகும்.

கருவி நூல்[தொகு]

சான்றடைவு[தொகு]

  1. "புராதன இந்தியா"-பி. வி. ஜகதீச அய்யர்-1918 - Published by- P. R. Rama Iyer & co-madaras
  2. புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள் - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009- பக்கம் - 265 -
  3. புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள் - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009- பக்கம் - 268 -
"https://ta.wikipedia.org/w/index.php?title=திராவிடதேசம்&oldid=2529398" இருந்து மீள்விக்கப்பட்டது