இ. எசு. எம். பக்கீர்முகம்மது
Appearance
இ. எசு. எம். பக்கீர் முகம்மது | |
---|---|
தனிப்பட்ட விவரங்கள் | |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
வாழிடம்(s) | தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா |
வேலை | புகையிலை தொழிலதிபர் |
இணையத்தளம் | http://164.100.47.194/loksabha/writereaddata/biodata_1_12/3097.htm |
இ. எசு. எம். பக்கீர் முகம்மது (பிறப்பு: ஏப்ரல் 28, 1937) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் 1937 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி சேக் மைதீன் என்னும் புகையிலை தொழிலதிபருக்கு மகனாக பிறந்தார். இவர் 1980 ஆம் ஆண்டில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், தஞ்சாவூர் மாவட்டத்தின் தொகுதிகளில் ஒன்றான கும்பகோணம் சட்டமன்றத் தொகுதியில், இந்திய தேசிய காங்கிரசின் சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[1] இவர் 1984, 1989 ஆகிய ஆண்டுகளில் நடந்த மக்களவை தேர்தலில், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில், இந்திய தேசிய காங்கிரசின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[2]. இவர் சனவரி 28, 1991 ஆம் ஆண்டு மரணமடைந்தார்.
சட்டமன்ற உறுப்பினராக
[தொகு]ஆண்டு | வெற்றி பெற்ற தொகுதி | கட்சி | வாக்கு விழுக்காடு (%) |
---|---|---|---|
1980 | கும்பகோணம் | இதேகா | 59.79% |
நாடாளுமன்ற உறுப்பினராக
[தொகு]ஆண்டு | வெற்றி பெற்ற தொகுதி | கட்சி | வாக்கு விழுக்காடு (%) |
---|---|---|---|
1984 | மயிலாடுதுறை | இதேகா | 60.16 % |
ஆண்டு | வெற்றி பெற்ற தொகுதி | கட்சி | வாக்கு விழுக்காடு (%) |
---|---|---|---|
1989 | மயிலாடுதுறை | இதேகா | 52.42 % |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "1980 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-07-13. பார்க்கப்பட்ட நாள் 2018-02-20.
- ↑ 9th Lok Sabha Members Bioprofile PACKEER MOHAMED, SHRI E.S.M