திருவல்லம் வில்வநாதேசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(திருவல்லம் வில்வநாதேஸ்வரர் கோயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
தேவாரம் பாடல் பெற்ற
திருவல்லம் வில்வநாதேசுவரர் திருக்கோயில்
பெயர்
புராண பெயர்(கள்): திருவலம்
பெயர்: திருவல்லம் வில்வநாதேசுவரர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்: திருவல்லம்
மாவட்டம்: வேலூர்
மாநிலம்: தமிழ்நாடு
நாடு: இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்: வில்வநாதேசுவரர்
தாயார்: வல்லாம்பிகை
தல விருட்சம்: வில்வம்
தீர்த்தம்: நீவாநதி, கவுரி தீர்த்தம்
ஆகமம்: சிவாகமம்
சிறப்பு திருவிழாக்கள்: பிரம்மோற்சவம்
பாடல்
பாடல் வகை: தேவாரம்
பாடியவர்கள்: திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்

வில்வநாதேசுவரர் கோயில் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்தலம் தமிழ்நாட்டிலுள்ள வேலூர் மாவட்டத்தில் திருவல்லம் எனும் ஊரில் அமைந்துள்ளது. இவ்வூரானது திருவலம் என்று பழங்காலத்தில் அழைக்கப்பட்டிருந்தது. [1]

தல வரலாறு[தொகு]

கஞ்சன் மலையிலிருந்து திருவல்லத்திற்கு இறைவனை அபிசேகம் செய்ய தீர்த்தம் கொண்டுவரும் அர்ச்சகரை, கஞ்சன் என்பவன் தொல்லை செய்தான். சிவபெருமானின் வானமான நந்தி தேவன் கஞ்சனை எட்டுப் பாகங்களாக கிழித்தார். சிவபெருமானிடம் இறவா வரம் பெற்றிருந்த கஞ்சன் அவ்விடம் விட்டு ஓடிவிட்டார் என்று கோயிலின் தல வரலாறு கூறுகிறது. அத்துடன் இறவாமல் இருக்கும் கஞ்சனை மீண்டும் வருகிறானா என்பதை கண்காணிக்க நந்தி தேவர் கோயிலின் வாசலை நோக்கியவாறு இருக்கிறார். [1]

அமைப்பு[தொகு]

ஐந்து நிலை ராஜகோபுரத்துடன், மூன்று திருச்சுற்றுடன் இக்கோயில் உள்ளது. [1]

மேற்கோள்கள்[தொகு]

இவற்றையும் பார்க்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

அருள்மிகு வில்வநாதேஸ்வரர் திருக்கோயில் - தினமலர் கோயில்கள்