உலோகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மிகச்சூடான நிலையில் உள்ள உலோகம்

ஒரு உலோகம் (Metal) என்பது கடினமான, ஒளிஊடுருவாத , பளபளப்பான, நல்ல மின் மற்றும் வெப்ப கடத்துத்திறன் கொண்ட ஒரு பொருள் ஆகும். இவற்றை சுத்தியலால் தட்டி உடைக்காமல் தகடாக மாற்றலாம், கம்பியாக இழுக்கலாம், உருக்கலாம். தனிமவரிசை அட்டவணையில் உள்ள 118 தனிமங்களில் 91 தனிமங்கள் உலோகங்களாகும்.

வேதியியலில் உலோகங்கள் மின்கடத்தல் மற்றும் வெப்பக் கடத்தல் திறன் கொண்டவை. பொதுவாக உலோகங்கள் நேர் மின்னூட்டம் கொண்டவை. குறிப்பிட்ட சில பண்புகளைக் கொண்ட சில தனிமங்களுக்கு உலோகம் அல்லது மாழை என்று பெயர். பரவலாக அறியப்படும் இரும்பு, தங்கம், வெள்ளி போன்றவை மாழைகளாகும். மாந்தர்களின் வரலாற்றில் மாழைகள் மிகப் பெரும் பங்கு வகித்து வந்துள்ளன. மாந்தர்கள் அன்றாடம் பயன்படுத்தும், உணவுத் தட்டு, நீர்க் குவளை, கத்தி, கரண்டி, தோசைக்கல், நீர்க் கொப்பரை, கடப்பாரை, மண்வெட்டி, நகை நட்டுகள் போன்றவையும், போர் ஆயுதங்கள், அறிவியல் கருவிகள், மருத்துவக் கருவிகள், பொறியியல் கருவிகள் பலவும் மாழைகளாலும் (உலோகங்களாலும்) மாழைக் கலவைகளினாலும் செய்யப்பட்டவை ஆகும்.

உலோகங்களின் பண்புகள்[தொகு]

  • உலோகம் அல்லது மாழை என்று சொல்லும் பொருட்களை தட்டியும் கொட்டியும் நீட்டிக்கவோ தகடாக்கவோ முடியும்.
  • தேய்த்து மழமழப்பாக்கி பளபள என்று ஒளிவிடச் செய்ய முடியும்.
  • (பொதுவாக) வெப்பத்தையும் மின்சாரத்தையும் நன்கு கடத்த வல்லவை
  • பெரும்பாலானவை நாம் வாழும் அறையின் வெப்பநிலையில் திண்மப் பொருளாக இருக்கும் (பாதரசம் என்னும் ஒரு மாழை மட்டும் நீர்ம நிலையில் இருக்கும்)
  • அடர்த்தி மிக்கவை.
  • உயர்ந்த வெப்பநிலையில் உருகும் தன்மை வாய்ந்தவை
"https://ta.wikipedia.org/w/index.php?title=உலோகம்&oldid=2083113" இருந்து மீள்விக்கப்பட்டது