பொது நிறை மையம்
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இயற்பியலில், பொருளொன்று அது கட்டமைக்கப்பட்ட துணிக்கைகளின் திணிவு காரணமாக கீழ் நோக்கிய நிறையைக் கொள்கிறது. இந்நிறை பொருளின் குறித்தவொரு புள்ளியில் தாக்குகிறது. இப்புள்ளியே பொது நிறை மையம் (center of mass) அல்லது புவியீர்ப்பு மையம் (center of gravity) எனப்படுகிறது.
வரைவிலக்கணம்
[தொகு]பொருளொன்றின் விளைவு விசை (நிறை) தொழிற்படும் புள்ளி புவியீர்ப்பு மையம் ஆகும்.
- புள்ளிபுவியீர்ப்பு மையத்தில் நிலைநிறுத்தப்படுவதன் மூலம் பொருளொன்றை நிலைநிறுத்த அல்லது சமநிலைப்படுத்த முடியும்.
- எ.கா.: தீச்சட்டி,கும்பம்,கரகம் முதலானவற்றை தலையில் சரியாமல் தாங்கி நடத்தல்.
- கயிற்றில் நடத்தல்
பொது நிறை மையம்
[தொகு]வானியலில் பொது நிறை மையம் (barycenter அல்லது common center of mass) சுற்றியக்கத்தில் உள்ள, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பொருள்கள் அடங்கிய தொகுதியின், பொதுவான நிறையின் மையம்.
- இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பொருள்கள் அடங்கிய அமைப்பின் ஒட்டுமொத்த நிறையும் செறிந்திருக்கும் புள்ளி.
- எ.கா. சூரியனைச் சுற்றி நீள்வட்டப்பாதையில் உள்ள புவி-நிலவு தொகுதிக்கு, நீள்வட்டத்தின் குவியம்.