சுழற்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒரு கோளம் தனது அச்சில் சுழல்கிறது.

சுழற்சி என்பது, ஒரு பொருளின் வட்ட இயக்கமாகும். ஒரு இரு பரிமாணப் பொருளொன்று ஒரு புள்ளியைச் சுற்றிய சுழற்சியைக் கொண்டிருக்கும். ஒரு முப்பரிமாணப் பொருளின் சுழற்சியானது அச்சு எனப்படும் ஒரு கோட்டைச் சுற்றி இருக்கும். இந்த அச்சு சுழலும் பொருளுக்கு ஊடாகச் செல்லுமாயின் அது தன்னைத் தானே சுற்றும் சுழற்சியாகும். அவ்வச்சு பொருளுக்கு வெளியில் இருக்குமாயின் அப்பொருள் ஒரு சுற்றுப்பாதையில் சுற்றுகிறது எனப்படும்.

பம்பரம், பூமி ஆகியவை தமது அச்சைப் பற்றிய சுழற்சி இயக்கத்தைக் கொண்டுள்ளன. பூமியின் சூரியனைச் சுற்றிய இயக்கம் சுற்றுதல் எனப்படுகின்றது.

கணிதம்[தொகு]

தள உருவம் ஒன்றின் ஒரு புள்ளியைச் சுற்றிய இயக்கம்

கணிதத்தில் சுழற்சி என்பது ஒரு புள்ளி நிலையாக இருக்கத்தக்க வகையில் அமையும் விறைப்பான பொருளொன்றின் இயக்கத்தைக் குறிக்கும். இது பொருளின் எல்லாப் புள்ளிகளுமே இயங்குகின்ற பெயர்ச்சி என்பதிலிருந்து வேறுபட்டது ஆகும். சுழற்சியின் இந்த வரைவிலக்கணம் இருபரிமாணம், முப்பரிமாணம் ஆகிய இருவகைப் பொருட்களின் இயக்கத்துக்கும் ஏற்புடையது. முப்பரிமாணப் பொருளொன்றின் சுழற்சியின்போது ஒரு கோடு முழுவதுமே நிலையாக இருக்கின்றது. இது இயூலரின் சுழற்சித் தேற்றத்தில் இருந்து பெறப்படுகின்றது.

ஒரு விறைப்பான பொருளின் இயக்கம், சுழற்சி, பெயர்ச்சி அல்லது இரண்டினதும் கூட்டாக அமைகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுழற்சி&oldid=3421464" இலிருந்து மீள்விக்கப்பட்டது