பொருளாதார ஏற்றத்தாழ்வு
Jump to navigation
Jump to search

உலக நாடுகளில் தேசிய வருவாய் சமனின்மை - ஜினி குறியீடு கொண்டு அளக்கப்பட்டது. ஜினி குறியீடு 0 ஆக இருந்தால் அந்நாட்டில் அனைவரும் சமமான வருவாய் ஈட்டுகின்றனர். 1 ஆக இருந்தார் அனைத்து வருவாயும் ஒருவர் மட்டும் ஈட்டுகிறார், ஏனையோர் வருவாயற்று உள்ளனர். ஜினி குறியீடு இவ்விரண்டு எல்லைகளுக்கு (0, 1) இடைப்பட்டதாக இருக்கும். சிவப்பு நிறம் கொண்ட நாடுகளில் வருவாய்ச் சமனின்மை கூடுதலாகவும், பச்சை நிறம் கொண்ட நாடுகளில் குறைவாகவும் உள்ளது.
பொருளாதார ஏற்றத்தாழ்வு ஒரு சமூகத்தில் அதன் வெவ்வேறு குழுக்களுக்கிடையே அல்லது தனிநபர்களுக்கிடையே இருக்கக் கூடிய பொருளாதார நிலையின் சமனற்ற தன்மையைக் குறிக்கின்றது. பொருளாதார நிலையை வருமானத்தையும் நிலையான சொத்துக்களையும் கொண்டு வரையறை செய்யலாம். ஒரு ஆரோக்கியமான சமூகத்துக்கு அதன் அடிப்படை வாழ்க்கைத் தரம் சிறப்பாகவும், ஏற்றத்தாழ்வு குறைவாகவும் இருத்தல் நலம்.
இந்த ஏற்றத்தாழ்வுகளை அளக்க ஜினி குறியீட்டைப் பயன்படுத்துவர்.