சேக் அமத் பின் கலீபா அல் தானி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
H.H சேக் அமத் பின் கலீபா அல் தானி
الشيخ حمد بن خليفة آلثاني
கத்தார் நாட்டின் அமீர்
Hamad bin Khalifa Al-Thani.jpg
ஆட்சி27 யூன் 1995 முதல் இன்றுவரை
முன்னிருந்தவர்சேக் கலீபா பின் அமத் அல் தானி
மரபுHouse of Thani
தந்தைகலீபா பின் அமத் அல் தானி
சமயம்சன்னி இசுலாம்
தொழில்கத்தார் நாட்டின் அமீர்

சேக் அமத் பின் கலீபா அல் தானி, கத்தார் நாட்டின் அமீர் (ஆட்சியாளர்) ஆவார். இவர் 1995 ஆம் ஆண்டு யூன் 26 ஆம் தேதி, இவரது தந்தையாரைப் பதவியில் இருந்து இறக்கிவிட்டு ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். சேக் அமத் 1977 ஆம் ஆண்டில் முடிக்குரிய இளவரசராக ஆனதுடன், பாதுகாப்பு அமைச்சர் பதவியையும் ஏற்றுக்கொண்டார். 1980களின் தொடக்கத்தில், கத்தாரின் அடிப்படைப் பொருளாதார சமூகக் கொள்கைகளை உருவாக்கிய உயர் திட்ட அவைக்கு தலைமை தாங்கி வழிநடத்தியவரும் இவரே. 1992 ஆம் ஆண்டு முதல், நாட்டின் அமைச்சரவையை இவரே தெரிவு செய்து வந்ததுடன் நாட்டின் அன்றாட அலுவல்களின் நிர்வாகத்துக்கும் இவரே பொறுப்பாக இருந்தார்.

இளமைக்காலம்[தொகு]

சேக் அமத் தனது கல்வியை கத்தாரில் தொடங்கினார். பின்னர் இங்கிலாந்தில் உள்ள சான்டர்சுட் படைத்துறை அக்கடமியில் சேர்ந்தார். 1971 ஆம் ஆண்டில் படிப்பை முடித்துக்கொண்ட அவர் கத்தாரின் படையில் லெப்டினன்ட் கர்னலாக இணைந்து கொண்டார்.

சேக் அமத் பின்னர் மேசர் செனரலாகப் பதவி உயர்வு பெற்றுக் கத்தார் படைகளின் தலைமைத் தளபதியாகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் கத்தார் படைத்துறையை நவீனமயமாக்கியதுடன், படைகளின் எண்ணிக்கையை அதிகரித்துப் புதிய பிரிவுகளையும் உருவாக்கும் திட்டத்தையும் செயல்படுத்தினார்.