பல்கு மாகாணம்
பல்கு மாகாணம் Balkh | |
---|---|
ஆப்கானிஸ்தானில் பல்கு மாகாணம் | |
நாடு | ஆப்கானித்தான் |
தலை நகரம் | மசார் ஈ சரீப் |
அரசு | |
• ஆளுநர் | அட்டா முகமது நூரி |
பரப்பளவு | |
• மொத்தம் | 16,186.3 km2 (6,249.6 sq mi) |
மக்கள்தொகை (2012)[2] | |
• மொத்தம் | 12,45,100 |
• அடர்த்தி | 77/km2 (200/sq mi) |
நேர வலயம் | UTC+4:30 |
ஐஎசுஓ 3166 குறியீடு | AF-BAL |
முதன்மை மொழிகள் | துரி மொழி, பஷ்தூ மொழி, துருக்குமேனிய மொழி, உசுபேகிய மொழி |
[3] |
பல்கு மாகாணம் (Balkh (பாரசீகம் மற்றும் பஷ்தூ: بلخ, Balx) என்பது ஆப்கானிஸ்தானின் 34 மாகாணங்களில், ஒன்று ஆகும். இது நாட்டின் வடபகுதியில் உள்ளது. இந்த மாகாணம் பன்னிரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதன் மக்கள் தொகை 1,245,100 ஆகும்.[2] இந்த மாகாணத்தில் பல்லின மக்கள் வாழ்கின்றனர் பெரும்பாலானவர்கள் பாரசீக மொழி பேசும் சமூகத்தினராக உள்ளனர். மாகாணத்தின் தலை நகராக மசார் ஈ சரீப் நகரம் உள்ளது. இந்த நகரின் கிழக்கு முனையில் மசார் ஈ சரீப் பன்னாட்டு வானூர்தி நிலையம் உள்ளது.
மாகாணத்தின் பெயர் பழங்கால நகரான பல்கு நகரில் இருந்து தோன்றியது, இந்தப் பழங்கால நகரம் தற்கால நவீன நகரத்திற்கு அருகில் உள்ளது. இந்த நகரத்தில்தான் புகழ்வாய்ந்த நீல பள்ளிவாசல் உள்ளது, இது ஒரு காலத்தில் செங்கிஸ் கானால் அழிக்கப்பட்டது. என்றாலும் பிற்காலத்தில் தைமூரால் மீண்டும் கட்டப்பட்டது. மஜார்-இ-ஷெரிப் நகரமானது மத்திய கிழக்கு,மத்திய தரைக்கடல் ஐரோப்பா மற்றும் தொலை கிழக்கு போன்ற பகுதிகளுக்கான வர்த்தக பாதைகளில் முதன்மையான இடத்தில் இருக்கிறது.
பல்கில் நகரமும் பல்கு மாகாணத்தில் பகுதிகளும் வரலாற்றில் அரினாவினதும் குராசானினதும் பகுதிகளின் ஒரு பகுதியாகக் கருதப்பட்டது.[4]
இது நடு ஆசியவிலிருந்து ஆப்கானித்தான் வருபவர்களுக்கு இரண்டாவது பெரிய நுழைவாயிலாக உள்ளது. பிற நுழைவு வாயிலாக அருகில் உள்ள குண்டூஸ் மாகாணத்தின் ஷிர் கான் பந்தர் உள்ளது.
நிலவியல்
[தொகு]பல்கு மாகாணம் ஆப்கானிஸ்தானின் வடக்குப் பகுதியில் உள்ளது, இதன் எல்லைகளாக வடக்கில், உசுபெக்கிசுத்தான் வடகிழக்கில், தஜிகிஸ்தான், கிழக்கில் குண்டூஸ் மாகாணம், தென்கிழக்கில் சமங்கன் மாகாணம், தென்மேற்கில் சர் ஈ போல் மாகாணம், மேற்கில் ஜௌஸ்ஜான் மாகாணம் ஆகியன உள்ளன. மாகாணத்தின் மொத்தப் பரப்பளவு 16,840 km2. மாகாணத்தின் பரப்பளவில் ஏறக்குறைய பாதியளவு மலைகள் (48.7%) மீதி பாதி பரப்பளவு (50.2%) சமதள நிலமாகும்.[5]
வரலாறு
[தொகு]பழங்கால வரலாறு
[தொகு]பாக்டிரியா-மர்கியானா தொல்பொருள் வளாகம் (BMAC, "ஓக்சஸ் நாகரிகம்" என்றும் அழைக்கப்படுகிறது) என்பது நடு ஆசியாவின் வெண்கலக் காலத்தின் ஒரு உன்னதமான இடத்தை வகிக்கிறது. கி.மு 2200–1700 காலகட்டத்தில் தற்போதைய துருக்மெனிஸ்தான், வட ஆப்கானிஸ்தான், தெற்கு உசுபெக்கிசுத்தான் மற்றும் மேற்கு தஜிகிஸ்தான், மேல் ஆமூ தாரியா (ஓக்சஸ்) ஆகியவற்றிற்கு இடைப்பட்ட பகுதிகள், பழங்கால பாக்திரியாவுக்கு. உட்பட்ட பகுதியாக இருந்த்து. இந்த தொல்லியல் களங்களை சோவியத் தொல்லியலாளரான விக்டர் சரியண்டி என்பவரால் (1976) கண்டறியப்பட்டு, பெயரிடப்பட்டது. பாக்டிரியா என்பது (தற்போதைய பால்க்) என்பதைக் குறிக்கும் கிரேக்கப் பெயராகும்.
நவீன வரலாறு
[தொகு]அரசியல் மற்றும் ஆட்சி
[தொகு]மாகாணத்தின் தற்போதைய ஆளுநர் அட்டா முகமது நூர் என்பவராவார். மாகாணத்தின் தலைநகராக மசார் ஈ சரீப் உள்ளது. மாநிலம் முழுவதும் அனைத்து சட்ட அமலாக்க நடவடிக்கைகளும் ஆப்கானிய தேசிய காவல்துறை (ஏஎன்பி) மூலம் கையாளப்படுகிறது. பக்லான் மாகாணத்தை ஒட்டியுள்ள உஸ்பெஸ்கிஸ்தான் எல்லைப் பகுதியை ஆப்கான் எல்லை காவல்துறை (ANP) பராமரித்து வருகிறது. மாகாண காவல்துறைத் தலைவர் காபூல் உள்துறை அமைச்சகத்தின் பிரதிநிதியாக உள்ளார். ஏஎன்பி உட்பட, மற்ற ஆப்கான் தேசிய பாதுகாப்பு படை (ANSF) போன்றவற்றிற்கு நேட்டோ தலைமையிலான படைகளின் ஆதரவு உள்ளது.
உடல் நலம்
[தொகு]இந்த மாகாணத்தில் தூய்மையான குடிநீர் கிடைக்கக்கூடிய மக்களின் எண்ணிக்கை 2005 ஆம் ஆண்டு 8% என்ற விகிதத்தில் இருந்தது, இது 2011 ஆண்டு 15% என உயர்ந்துள்ளது.[6] திறமையான பிரசவ உதவியாளர் மூலமாக பிரசவம் பார்க்கும் மக்களின் விழுக்காடு 2005 ஆண்டில் 0 % என்ற எண்ணிக்கையில் இருந்து 2011 ஆண்டு 20 % என உயர்ந்தது.[6]
கல்வி
[தொகு]மொத்த கல்வியறிவு விகிதம் (6+ வயதுக்கு மேற்பட்டவர்களில்) 2005 ஆண்டு 12% என்று இருந்தது. 2011 இல் இது 23% என உயர்ந்துள்ளது.[6] ஒட்டுமொத்த நிகர சேர்க்கை விகிதம் (6 முதல் 13 வயது வரை) 2005 இல் 22% என இருந்து, 2011 ஆம் ஆண்டில் 46% என உயர்ந்துள்ளது.[6]
மக்கள் வகைப்பாடு
[தொகு]மாகாணத்தின் மொத்த மக்கள் தொகை 1,509,183,[7] இது பல்வகையான இன மக்கள் வாழும் பகுதியாகவும், பெரும்பாலும் பாரசீக மொழி பேசுவோர் நிறைந்ததாகவும் உள்ளது.
அமெரிக்க கடற்படை முதுகலை பள்ளியின் கூற்றின்படி:[8]
பால்க் மாகாணத்தில் பல இனமக்கள் வாழ்கின்றனர், இனங்கள் பின்வறுமாறு தாஜிக், கசாரா மக்கள், பஷ்தூன் மக்கள், அரபிகள், உஸ்பெக், துர்க்மெனியர், சுன்னி ஹசாரா (கவாஷி).
பால்க் மாகாண மக்களில் ஏறக்குறைய 66% மக்கள் ஊரக மாவட்டப் பகுதிகளில் வாழ்கின்றனர், நகர்புரங்களில் 34% பேர் வாழ்கின்றனர். மக்கள் தொகையில் ஏறக்குறைய 51 % பேர் ஆண்கள், 49% பேர் பெண்கள். பால்க் மாகாணத்தில் பல இனக்குழுவினர் வாழ்கின்றனர் அந்த மக்கள் பின்வறுமாறு தாஜிக்குகள், பஷ்துன்கள், உஸ்பெக்குகள், ஹசாரார், துர்க்மெனியர்கள், அரபுகள், பலூச் இனமக்களாவர். மக்கள் தொகையில் பாரசீக மொழி பேசுபவர்கள் 50% இவர்களில் 58% மக்கள் கிராமப்பகுதிகளில் வாழ்கின்றனர். இரண்டாவதாக மிகுதியான மக்களால் பேசப்படும் மொழி பஷ்து, இந்த மொழி 266 கிராமங்களில் பெரும்பான்மையாக பேசப்படுகிறது, மக்கள் தொகையில் 27% இடத்தை வகிக்கிறது. பேசப்படும் பிற மொழிகள் துர்க்மெனி (11.9%), உஸ்பெக்கி (10.7%) ஆகும். பால்க் மாகாணத்தில் நாடோடி மக்களான குச்சி எனும் மக்கள் வாழ்கின்றனர், இவர்களின் எண்ணிக்கை பருவகாலம் பொருத்து மாகாணத்தில் மாறுபடுகிறது. இம்மக்கள் மாகாணத்தில் குளிர் காலத்தில் 52,929 மக்கள் அல்லது 2.2% என்ற எண்ணிக்கையில் வாழ்கின்றனர்.
மாவட்டங்கள்
[தொகு]பால்க் மாகாணம் 15 மாவட்டங்ஙளாக பிரிக்கப்பட்டுள்ளது.[2]
மாவட்டம் |
தலை நகரம் | மக்கள் தொகை |
பரப்பு[9] | குறிப்பு |
---|---|---|---|---|
பால்க் | 97,055 | |||
சார்போலக் | 69,975 | |||
சார்கிண்ட் | 32,306 | |||
சிம்டல் | 81,311 | |||
தௌலதாபாத் | 79,638 | |||
தித்தாதி | 66,009 | |||
கலதர் | 17,932 | |||
குல்ம் | 49,207 | |||
கிஷிந்தி | 49,083 | 2005 இல் துணையாக பிரிக்கப்பட்டது | ||
மர்முல் | 9,510 | |||
மசார் ஈ சரீப் | 375,181 | |||
நஹரி ஷஹாய் | 38,791 | |||
ஷோல்கரா | 120,600 | |||
ஷோர்டிபா | 30,314 | |||
ஜாரி | 42,367 | 2005 இல் கிஷ்ண்டி மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டது. |
விளையாட்டு
[தொகு]உள்ளூர் பால்க் மாகாண மக்கள் தங்களது விளையாட்டு வரலாறு மற்றும் பண்பாடு குறித்தும் பெருமிதமுடையவர்களாக உள்ளனர். ஒவ்வொரு நவ்ரூஸ் (பாரசீக புத்தாண்டு) நாளின்போதும் இங்கு பல விளையாட்டு நிகழ்வுகள் நடக்கின்றன. இந்த மாகாணத்தில் புஸ்காஷி என்னும் பாரம்பரிய குதிரை ஏற்ற விளையாட்டு மிகவும் பிரபலமாக உள்ளது. பெஹல்வானி என்னும் விளையாட்டும் மாகாணத்தின் ஒரு பிரபலமான விளையாட்டாக இருக்கிறது. என்றாலும் ஏறக்குறைய 50 ஆண்டுகளாக சங்கக் கால்பந்து, விளையாட்டு மிகப்பிரபலமாக மாகாணத்தில் விளையாடப்படுகிறது.[10]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Area and Administrative and Population". Islamic Republic of Afghanistan. 2013. Archived from the original on 2014-01-17. பார்க்கப்பட்ட நாள் 2014-02-03.
- ↑ 2.0 2.1 2.2 "Settled Population of Balkh province by Civil Division, Urban, Rural and Sex-2012-13" (PDF). Islamic Republic of Afghanistan, Central Statistics Organization. Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2013-09-07.
- ↑ "The U.S. Board on Geographic Name". U.S. Department of the Interior. பார்க்கப்பட்ட நாள் 2014-02-14.
- ↑ "Khurasan", The Encyclopaedia of Islam, page 55. Brill. பார்க்கப்பட்ட நாள் 2010-10-22.
- ↑ 5.0 5.1 "Balkh".
- ↑ 6.0 6.1 6.2 6.3 Archive, Civil Military Fusion Centre, https://www.cimicweb.org/AfghanistanProvincialMap/Pages/SarePul.aspx பரணிடப்பட்டது 2014-05-31 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "Estimated Population of Afghanistan 2020-21" (PDF). Islamic Republic of Afghanistan, National Statistics and Information Authority. Archived from the original (PDF) on 3 July 2020. பார்க்கப்பட்ட நாள் 6 June 2021.
- ↑ "Balkh Province".
- ↑ Afghanistan Geographic & Thematic Layers
- ↑ "Simorgh Alborz".