ஆப்கானித்தான் இடைக்கால அரசு (2021)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

15 ஆகஸ்டு 2021 அன்று ஆப்கானித்தானை கைப்பற்றிய தாலிபான்களின் ஆப்கானித்தான் இசுலாமிய அமீரகத்தின் இடைக்கால அரசின் பிரதம அமைச்சராக 7 செப்டம்பர் 2021 அன்று முகமது அசன் அகுந்து மற்றும் துணைப் பிரதமர்களாக அப்துல் கனி பராதர் மற்றும் மௌலவி ஹனாபி தேர்வு செய்யப்பட்டதாகவும், மேலும் அமைச்சரவையில் 19 கேபினெட் அமைச்சர்களும், 11 துணை அமைச்சர்களும், இயக்குநர்களும் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தாலிபான்களின் செய்தித் தொடர்பாளர் சஃபியுல்லா முஜாகிதின் அறிவித்துள்ளார்.[1][2][3][4] ஆ தாலிபான்களின் அரசியல் செயலகம் தற்காலிகமாக கத்தார் நாட்டின் தோகா நகரத்தில் செயல்படும்.

முல்லா ஓமர் தலைமையில் 1996 - 2001 ஆண்டுகளில் நடைபெற்ற தாலிபான்களின் முதல் அரசுக்குப் பின், 20 ஆண்டுகளுக்குப் பின்னர் இத் தாலிபான்களால் மீண்டும் தற்போது நிறுவப்படும் இரண்டாவது அரசாகும்.

இடைக்கால அமைச்சரவைக் குழு உறுப்பினர்கள்[தொகு]

காபினேட் அமைச்சர்கள்[தொகு]

 1. உள்துறை: அக்கானித் தலைவர் சிராஜிதியுன் ஹக்கானி
 2. பாதுகாப்புத்துறை: முகமது உமரின் மகன் முகமது யாகூப்
 3. வெளியுறவுத்துறை:அமீர் கான் முட்டாக்கி
 4. நிதித்துறை: முல்லா ஹிதாயத் பத்ரி
 5. நீதித்துறை: அப்துல் ஹக்கீம் இஷாக்ஸி
 6. தகவல் துறை: கைருல்லா சயீத் வாலி கெய்ர்க்வா
 7. கல்வித் துறை: மௌலவி நூருல்லா முனீர்
 8. தகவல் மற்றும் பண்பாட்டுத் துறை: முல்லா கைருல்லா கைர்காக்
 9. பொருளாதாரத்துறை: குவாரி தீன் ஹனீப்
 10. ஹஜ் துறை: மௌலவி நூர் முகமது சாகிப்
 11. எல்லை மற்றும் பழங்குடி மக்கள் விவகாரம்: முல்லா நூருல் நூரி
 12. கிராமப்புற மறுகட்டமைப்பு & மேம்பாடு: முல்லா முகமது யுனூஸ் அகுந்த்சாதா
 13. பொதுப்பணித் துறை:முல்லா அப்துல் மனான் ஓமரி
 14. கனிம வளம் & பெட்ரோலியம்: முல்லா முகமது ஈசாஅ அகுந்த்
 15. நீர் & எரிசக்தி: முல்லா அப்துல் லத்தீப் மன்சூர்
 16. விமானப் போக்குவரத்து & சாலைப் போக்குவரத்து:முல்லா ஹமிதுல்லா அகுந்த்சாதா
 17. உயர் கல்வித்துறை: அப்துல் பாகி ஹக்கானி
 18. தொலைத்தொடர்பு; நஜிபுல்லா ஹக்கானி
 19. அகதிகள் மறுவாழ்வு: கலீலுர் ரக்மான் ஹக்கானி

துணை அமைச்சர்களும், இயக்குநர்களும்[தொகு]

 1. உளவுத் துறை இயக்குநர்: அப்துல் ஹக் வாசிக்
 2. மத்திய வங்கியின் இயக்குநர்: ஹாஜி முகமது இதிரீஸ்
 3. அதிபர் அலுவலக தலைமை நிர்வாகி: அகமத் ஜான் அகமதி
 4. துணைப் பாதுகாப்புத் துறை அமைச்சர்: முல்லா முகமது பாசில்
 5. இராணுவத் தலைவர்: குவாரி பசியுத்தீன்
 6. துணை வெளியுறவுத் துறை அமைச்சர்: செர் முகம்மது அப்பாஸ் ஸ்தானிக்சாய்
 7. துணை உள்துறை அமைச்சர்: மௌலவி நூர் ஜலால்
 8. துணைத் தகவல் & பண்பாட்டு அமைச்சர்: சபியுல்லா முஜாகித்
 9. முதல் துணை உளவுத்துறை அமைச்சர்: முல்லா தஜ்மீர் ஜாவேத்
 10. உளவுத் துறை நிர்வாகத் துணை அமைச்சர்: முல்லா ரகமத்துல்லா நஜீப்
 11. போதைப் பொருள் தடுப்பு உள்துறை அமைச்சர்: முல்லா அப்துல்லா அகுந்த்

மேற்கோள்கள்[தொகு]

 1. Taliban Announces Head of State, Acting Ministers
 2. Hardliners get key posts in new Taliban government
 3. "Profile: Mohammad Hasan Akhund, the head of Taliban government". Al Jazeera. 7 September 2021. https://www.aljazeera.com/news/2021/9/7/profile-mohammad-hassan-akhund-the-head-of-taliban-government. 
 4. Taliban announce new government for Afghanistan