முகமது அசன் அகுந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முல்லா
முகமது அசன் அகுந்து
ملا محمد حسن اخوند
2021-இல் முல்லா முகமது அசன் அகுந்து
ஆப்கானித்தான் இசுலாமிய அமீரகத்தின் இடைக்கால அரசின் பிரதம அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
7 செப்டம்பர் 2021
Deputyஅப்துல் கனி பராதர், அப்துல் சலாம் அனாஃபி
தலைவர்இப்துல்லா அகுந்த்சாதா
முன்னையவர்அப்துல் கபீர் (2001)
துணை பிரதம அமைச்சர்கள்
பதவியில்
27 செப்டம்பர் 1996 – 13 நவம்பர் 2001
பிரதமர்முகமது ரப்பானி
அப்துல் கபீர்
முன்னையவர்புதிய பதவி
பின்னவர்அப்துல் கனி பராதர் (2021)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புகந்தகார் மாகாணம், ஆப்கானித்தான் இராச்சியம்
அரசியல் கட்சி தாலிபான்

முல்லா முகமது ஹசன் அகுந்த் (Mullah Mohammad Hasan Akhund) 15 ஆகஸ்டு 2021 அன்று ஆப்கானித்தானை கைப்பற்றிய தாலிபான்களின் ஆப்கானித்தான் இசுலாமிய அமீரகத்தின் இடைக்கால அரசில் பிரதம அமைச்சராக 7 செப்டம்பர் 2021 அன்று தேர்வு செய்யப்பட்டதாக தாலிபான்களின் செய்தித் தொடர்பாளர் சஃபியுல்லா முஜாகிதின் அறிவித்துள்ளார்.[1][2][3] மேலும் துணைப் பிரதமராக அப்துல் கனி பராதர், உள்துறை அமைச்சராக அக்கானி பிணையத் தலைவர் சிராஜிதியுன் ஹக்கானி, பாதுகாப்புத்துறை அமைச்சராக முகமது உமரின் மகன் முகமது யாகூப், வெளியுறவுத்துறை அமைச்சராக அமீர் கான் முட்டாக்கி மற்றும் துணை வெளியுறவுத் துறை அமைச்சராக செர் முகம்மது அப்பாஸ் ஸ்தானிக்சாய் நியமிக்கப்பட்டுள்ளனர்.[4][5][6]

பின்னணி[தொகு]

முகமது அசன் அகுந்து 1996 முதல் 2001 வரை முகம்மது உமர் தலைமையிலான தாலிபான்களின் முதலாவது அரசில் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தவர். தாலிபான்களின் ஆயுத குழுவின் தலைவர் என்பதை விட தாலிபன்களால் போற்றக்கூடிய சமயத் தலைவராகவே ஹசன் அகுந்தை தாலிபான்கள் கருதினர். இவர் கந்தகார் மாகாணம், ஸ்பின் போல்தாக் மாவட்டத்தில் உள்ள மியால் பகுதியில் நூர்சாய் பழங்குடியில் பிறந்தவர். முல்லா முகமது ஹசன் அகுந்த், ஐக்கிய நாடுகள் அவை மற்றும் புலன் விசாரணை கூட்டாட்சிப் பணியகம் ஆகியவற்றால் தேடப்படும் பயங்கரவாதிகள் பட்டியலில் இருப்பவர். [7] இவர் ஆப்கானித்தான் இசுலாமியத் தலைவரான மௌலவி இப்துல்லா அகுந்த்சாதாவிற்கு மிகவும் நெருக்கமான்வர். இவர் 2001-ஆம் ஆண்டில் பாமியான் புத்தர் சிலைகள் தகர்ப்புக்கு ஆணையிட்டவர்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முகமது_அசன்_அகுந்து&oldid=3704698" இலிருந்து மீள்விக்கப்பட்டது