அக்கானி பிணையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அக்கானி பிணையம் அல்லது ஹக்கானி வலைச்சமூகம் (Haqqani Network) ஆப்கானித்தானில் தலிபான்களுடன் ஒருங்கிணைந்து இயங்கும் ஓர் தனித்த தீவிரவாதக் குழு ஆகும்.[1] ஆப்கானித்தான் - பாக்கித்தான் எல்லையில் அமைந்துள்ள இந்த அக்கானி பிணையத்திற்கு மௌல்வி சலாலுதீன் அக்கானி தனது மகன் சிராஜுதீன் அக்கானியுடன் தலைமை யேற்றுள்ளார். அமெரிக்க படைத்துறை தலைவர்கள் கூற்றுப்படி இக்குழுவே "ஆப்கானித்தானில் மிகவும் மீண்டெழக்கூடிய எதிரிப் பிணையமாக" அறியப்படுகிறது.[2] மேலும் ஆப்கானித்தானில் போர்நிமித்தம் குடிகொண்டுள்ள நேட்டோ மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் பன்னாட்டு பாதுகாப்பு துணைப்படைகளுக்கு மிகபெரும் அச்சுறுத்தலாக உள்ளது.[3]

சில கவனிக்கத்தக்க அமெரிக்க அதிகாரிகள் பாக்கித்தான்|பாக்கித்தானின் சேவைகளிடை உளவுத்துறை (ஐஎஸ்ஐ) இந்தப் பிணையத்திற்குத் துணை நிற்பதாக குற்றம் சாட்டியுள்ளனர்.[4] பாக்கித்தான் தனக்கு அக்கானி பிணையத்துடன் எந்த தொடர்பும் இல்லையென்றும் ஆப்கானித்தானில் தனது மாற்றுப்படையாக பயன்படுத்தவில்லை என்றும் மறுத்துள்ளது. மேலும் இதன்காரணமாக அமெரிக்கப்படைகள் பாக்கித்தானில் உள்நுழைந்தால் பாக்கித்தான் பொறுத்துக்கொண்டிராது என்று பாக்கிதானிய உள்துறை அமைச்சர் எச்சரித்துள்ளார். இது போர் மையத்தை நகர்த்திட அமெரிக்கா செய்யும் "மனவழுத்தத் தந்திரங்கள்" என்று பாக்கித்தானின் உளவு அதிகாரியொருவர் கூறியுள்ளார்.[5]

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்கானி_பிணையம்&oldid=3746336" இருந்து மீள்விக்கப்பட்டது