உள்ளடக்கத்துக்குச் செல்

ஆப்கானித்தானில் சுற்றுலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆப்கானித்தானின் சில பிரபலமான நிலப்பரப்புகள், இடமிருந்து வலமாக: 1. பேண்ட்-இ அமீர் தேசியப் பூங்கா ; 2. பர்வான் மாகாணத்தில் சலங் கணவாய் ; 3. குனார் மாகாணத்தில் கோரங்கல் பள்ளத்தாக்கு ; மற்றும் 4. ஹெல்மண்ட் மாகாணத்தின் பள்ளத்தாக்கில் உள்ள கஜாக்கி அணை
காபூலில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், சி. 1940

ஆப்கானித்தானில் சுற்றுலா (Tourism in Afghanistan) 1970களின் முற்பகுதியில் அரசாங்க உதவியுடன் உருவாக்கப்பட்ட ஆப்கானித்தானின் சுற்றுலாத் துறை, பல ஆண்டு கால யுத்தத்திற்குப் பின்னர் படிப்படியாக புத்துயிர் பெறுகிறது. ஆப்கானித்தானுக்குள் நுழைவதற்கு நுழைவிசைவுடன் செல்லுபடியாகும் கடவுச் சீட்டு தேவை. 1999 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் சபை காபூலில் தங்குவதற்கான தினசரி செலவை $ 70 அமெரிக்க டாலராக மதிப்பிட்டுள்ளது.

ஆப்கானித்தான் தூதரகங்கள் ஆண்டுதோறும் 15,000 முதல் 20,000 சுற்றுலா நுழைவிசைவுகளை வழங்குகின்றன. [1] [2]

ஆப்கானித்தானில் அமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையம், மசார்-இ ஷெரீப் சர்வதேச விமான நிலையம், காந்தஹார் சர்வதேச விமான நிலையம், எராத் சர்வதேச விமான நிலையம் உள்ளிட்ட நான்கு சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன. இது நாடு முழுவதும் பல சிறிய விமான நிலையங்களையும் கொண்டுள்ளது. ஒவ்வொரு பெரிய ஆப்கான் நகரத்திலும் விருந்தினர் மாளிகைகள் மற்றும் விடுதிகள் காணப்படுகின்றன. காபூலில் உள்ள சில முக்கிய விடுதிகள் செரீனா ஹோட்டல், ஹோட்டல் இன்டர்-கான்டினென்டல் காபூல், சஃபி லேண்ட்மார்க் ஹோட்டல் .

ஆப்கானித்தானில் அதிகம் பார்வையிட வேண்டிய இடங்கள்[தொகு]

ஆப்கானிஸ்தானின் பாமியன் மாகாணத்தில் உள்ள பேண்ட்-இ அமீர் தேசியப் பூங்கா

பேண்ட்-இ அமீர் தேசிய பூங்கா[தொகு]

பேண்ட்-இ அமீர் தேசியப் பூங்கா ஆப்கானித்தானின் பாமியன் மாகாணத்தில் அமைந்துள்ளது. மாகாணத்தின் தலைநகரான பாமியனில் பல நவீன விடுதிகளும் உள்ளன. பாமியன் புத்தர் சிலைகளும் இந்த மாகாணத்தில் அமைந்துள்ளது. சிலர் பனிச்சறுக்கு பயணங்களுக்காக குளிர்காலத்தில் பாமியனுக்கு வருகிறார்கள். [3]

காபூல்[தொகு]

ஆர்கின் முன் வாயில் (ஆப்கானித்தானின் அதிபர் மாளிகை)

சுற்றுலாப் பயணிகள் காபூலில் உள்ள பல பூங்காக்கள் மற்றும் பிற இடங்களை பார்வையிடலாம். காசி அரங்கம் பெரும்பாலும் கால்பந்து போட்டிகளை நடத்துகிறது. மைதானத்திற்கு அடுத்து ஸ்கேடிஸ்தான் என்று அழைக்கப்படும் உட்புற பனிச் சறுக்கு மைதானம் உள்ளது. இரண்டு பந்துவீச்சு முனையங்கள் உள்ளன. ஒன்று பிராவோ பவுலிங் மற்றும் கஃபே என்றும் மற்றொன்று ஸ்ட்ரைக்கர் பவுலிங் என்றும் பெயரிடப்பட்டுள்ளது. நகரின் வெவ்வேறு பகுதிகளில் இரண்டு உட்புற நீர் பூங்காக்கள் மற்றும் பல மேடைக் கோற்பந்தாட்டம் மற்றும் பில்லியர்ட்ஸ் சங்கங்கள் உள்ளன.

அப்துல் ரகுமான் மசூதி[தொகு]

அண்மையில் கட்டப்பட்ட அப்துல் ரகுமான் மசூதி காபூலில் உள்ள மிகப்பெரிய மசூதிகளில் ஒன்றாகும். இது நகரின் வஜீர் அக்பர் கான் பிரிவில் உள்ள சர்னேகர் பூங்காவை ஒட்டியுள்ளது. இது செரீனா விடுதிக்கு வெகு அருகில் அமைந்துள்ளது.

சிஹில் சுதுன்[தொகு]

பாக்-இ பாபர்[தொகு]

பாபரின் தோட்டங்கள்

பாபரின் தோட்டங்கள் காபூலில் உள்ள ஒரு வரலாற்று பூங்காவாகும். இது முதல் முகலாய பேரரசர் பாபரின் கடைசி ஓய்வு இடமாக திகழ்கிறது. கி.பி 1528 ஆம் ஆண்டில் (935 ஏஎச்) இந்த தோட்டங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டதாக கருதப்படுகிறது. காபூலில் ஒரு தோட்டத்தை நிர்மாணிப்பதற்கான உத்தரவுகளை பாபர் வழங்கியபோது, அவரது நினைவுக் குறிப்புகளான பாபர்னாமாவில் சில விவரங்களை விவரித்தார். லோன்லி பிளானட் என்ற இதழ் இந்த பூங்காவை "காபூலின் மிக அழகான இடம்" என்று விவரிக்கிறது. [4]

காபூல் உயிரியல் பூங்கா[தொகு]

காபூல் உயிரியல் பூங்காவில் சுமார் 280 விலங்குகள் உள்ளன. இதில் 45 வகையான பறவைகளும், பாலூட்டிகளும், 36 வகையான மீன்களும் உள்ளன. [5] விலங்குகளில் இரண்டு சிங்கங்கள் மற்றும் ஒரு கான்சிர் ( பன்றி ) உள்ளன. இது ஆப்கானித்தானில் மிகவும் அரிதானது. வார இறுதி நாட்களில் மிருகக்காட்சிசாலையை 5,000 பேர் பார்வையிடுகின்றனர்.

ஆப்கானித்தானின் தேசிய அருங்காட்சியகம்[தொகு]

ஆப்கானித்தானின் தேசிய அருங்காட்சியகம் நகரின் தென்கிழக்கு பகுதியில் தாருல் அமன் அரண்மனைக்கு அடுத்ததாக அமைந்திருக்கிறது. இந்த அருங்காட்சியகத்தின் சேகரிப்பு முன்னர் மத்திய ஆசியாவில் மிக முக்கியமான ஒன்றாகும். [6] 100,000 க்கும் மேற்பட்ட பொருட்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையவை. 1992 இல் உள்நாட்டுப் போர் தொடங்கியவுடன், அருங்காட்சியகம் பல முறை கொள்ளையடிக்கப்பட்டது. இதன் விளைவாக காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த 100,000 பொருட்களில் 70% இழப்பு ஏற்பட்டது. [7] 2007 முதல், பல சர்வதேச நிறுவனங்கள் 8,000 க்கும் மேற்பட்ட கலைப்பொருட்களை மீட்டெடுக்க உதவியுள்ளன. மிகச் சமீபத்தியது ஜெர்மனியில் இருந்து ஒரு சுண்ணாம்பு சிற்பம். [8] புகழ்பெற்ற 1 ஆம் நூற்றாண்டு பாக்ராம் தந்தங்கள் உட்பட 2012 ஆம் ஆண்டில் சுமார் 843 கலைப்பொருட்கள் ஐக்கிய இராச்சியம் திரும்பின. [9]

பாதுகாப்பும் கலாச்சார பிரச்சினைகளும்[தொகு]

ஆப்கானிஸ்தான் முற்றிலும் இசுலாமிய நாடாகும். இசுலாத்தில், ஒரு சுற்றுலா அல்லது ஒரு பயணி முசாஃபிர் என்று அழைக்கப்படுகிறார். அத்தகைய நபர் பொதுவாக ஒரு இராஜதந்திரி என்று கருதப்படுகிறார் , ஆப்கானித்தான் சட்டத்திற்கு அல்லது ஆப்கானிஸ்தான் கலாச்சாரத்திற்கு அவர் கீழ்ப்படியாவிட்டாலும் கூட, ஆப்கானித்தான் கலாச்சாரத்தின் கீழ் பாதுகாக்கப்பட வேண்டும். ஒவ்வொரு மசூதியும் பொதுவான குற்றவாளிகளுக்கு எதிரான இறுதி பாதுகாப்பின் இடமாகும். பொதுவாக ஆப்கானியர்கள் சுற்றுலாப் பயணிகளுடன் மிகவும் நட்பாக இருந்தாலும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கடத்தப்பட்டு சில சமயங்களில் கொல்லப்பட்டதால் இந்த நாடு மிகவும் பாதுகாப்பானது அல்ல. நேர்மையான மற்றும் நம்பகமான சுற்றுலா வழிகாட்டியைக் கண்டுபிடிப்பது ஆப்கானித்தானில் பாதுகாப்பிற்கான முக்கியமாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Despite Taliban Threat, Afghanistan Manages to Entice Some Tourists
  2. "20,000 foreign tourists visit Afghanistan annually". Pajhwok Afghan News (PAN). September 27, 2016. http://www.pajhwok.com/en/2016/09/27/20000-foreign-tourists-visit-afghanistan-annually. பார்த்த நாள்: 2017-05-15. 
  3. யூடியூபில் Afghan youth started ski camps in Bamiyan, Jan. 14, 2019, VOA Dari.
  4. http://www.lonelyplanet.com/afghanistan/kabul/sights/parks-gardens/babur-s-gardens
  5. Kumar, Ruchi (October 12, 2016). "Beasts of a Nation: Rebuilding the Kabul Zoo in a Time of War". Pacific Standard. பார்க்கப்பட்ட நாள் 2019-03-26.
  6. Girardet, Edward, ed. (1998). Afghanistan. Geneva: CROSSLINES Communications, Ltd. p. 291.
  7. News, Alastair Lawson BBC. "Afghan gold: How the country's heritage was saved". BBC News. பார்க்கப்பட்ட நாள் 2015-10-30. {{cite web}}: |last= has generic name (help)
  8. (31 January 2012) Germany returns Afghan sculpture bbc.co.uk/news/
  9. (19 July 2012) Looted art returned to Afghanistan, bbc.co.uk

வெளி இணைப்புகள்[தொகு]