கஜாக்கி அணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கஜாக்கி அணை
Kajaki Dam
AfghanistanHelmandKajakaiDamm.jpg
கஜாக்கி அணையை மேலிருந்து எடுத்த படம்
நாடுஆப்கானித்தான்
அமைவிடம்கஜக்கி மாவட்டம், ஹெல்மண்டு மாகாணம்
புவியியல் ஆள்கூற்று32°19′19″N 65°7′8″E / 32.32194°N 65.11889°E / 32.32194; 65.11889ஆள்கூற்று: 32°19′19″N 65°7′8″E / 32.32194°N 65.11889°E / 32.32194; 65.11889
நோக்கம்நீர்ப்பாசனம், மின்சாரம்
நிலைOperational
கட்டத் தொடங்கியது1951
திறந்தது1953
உரிமையாளர்(கள்)நீருக்கும் ஆற்றலுக்குமான துறை, ஆப்கானிஸ்தான் அரசு
அணையும் வழிகாலும்
Impoundsஹெல்மண்டு ஆறு
உயரம்100 m (328 ft)
நீளம்270 m (886 ft)
மொத்தம் capacity1,715,000,000 m3 (1,390,373 acre⋅ft)
Active capacity1,134,000,000 m3 (919,349 acre⋅ft)
மின் நிலையம்
Operator(s)ஹெல்மண்டு மற்றும் ஆர்கந்தாப் பள்ளத்தாக்கு ஆணையம்
Commission date1975
சுழலிகள்2 x 16.5 மெகாவாட்[1]
பெறப்படும் கொள்ளளவு33 MW

கஜாக்கி அணை, ஆப்கானிஸ்தானின் ஹெல்மண்டு மாகாணத்தில் உள்ள நீர் மின் ஆற்றல் அணையாகும். இது ஹெல்மண்டு ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ளது. இந்த அணை கந்தகாரில் இருந்து 100 மைல் (161 கி.மீ) தொலைவில் அமைந்துள்ளது. இது நீர்ப்பாசனத்திற்கும், மின்னாற்றலுக்கும் பயன்படுகிறது. இதன் மூலம் 650,000 ஏக்கர் பரப்பளவிலான நிலத்துக்கு நீர் கிடைக்கிறது. இது 33 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது.[2]

100 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த அணை 270 மீட்டர் நீளமுடையது. இது சிஸ்தன் பகுதிக்கு செல்லும் நீரை கட்டுப்படுத்துகிறது.

வரலாறு[தொகு]

இந்த அணைக்கான கட்டிடப் பணிகள் 1951ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, 1953ஆம் ஆண்டில் முடிக்கப்பட்டது.[3]

1975, 16.5 மெகாவாட் திறன் கொண்ட இரு நிலையங்கள் அணையோரத்தில் நிறுவப்பட்டன.[3]

2012இல் எடுக்கப்பட்ட படம்

2001ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானை தாக்கிய ஐக்கிய அமெரிக்க வான்படை இந்த அணையையில் உள்ள மின் சேகரிப்பு நிலையத்தையும் குறிவைத்தது.[4]

உலக வங்கியிடமும் பிறரிடமும் இருந்து பெற்ற பணத்தில் இரண்டு மின் நிலையங்களும் மறுசீரமைக்கப்பட்டன. தற்போது 33 மெகாவாட் உற்பத்தி செய்யும் திறனை பெற்றுள்ளன.[5] செப்டம்பர் 2005 முதல் முதல் நிலையமும், அக்டோபர் 2009 முதல் அடுத்த மின்நிலையமும் இயங்கத் தொடங்கின.[6]

இங்கு 2007 பிப்பிரவரி மாதத்தில் நேட்டோவுக்கும், தாலிபானுக்கும் இடையில் சண்டை நடைபெற்றது.[7] தாலிபான் இயக்கத்தைச் சேர்ந்தோர் இந்த அணையை சீர்குலைக்க முயன்றனர்[8]

கஜாக்கி மின்நிலையம்

2008 ஆகஸ்டு மாத இறுதியில், கந்தகாரில் இருந்து மூன்றாவது டர்பைன் கொண்டுவரப்பட்டது. இதற்கு பிரித்தானிய அரசு முன்னின்று உதவியது[9] ஏழு ஆண்டுகள் முடிவுற்ற நிலையிலும், இன்னும் அது நிறுவப்படவில்லை. இதற்கு 700 டன் சிமெண்ட் தேவைப்படும்.[10]

இதைப் பற்றி பிபிபி ஓர் அறிக்கையை வெளியிட்டது.[11] புதிய டர்பைனும் இயங்கத் தொடங்கினால் மொத்தமாக 51 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும்.[12]

நீர் வழங்கல் ஒப்பந்தம்[தொகு]

1972ஆம் ஆண்டில் ஈரானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி, 910 cubic feet per second (26 m3/s) அளவு நீரையாவது தருவதாக ஆப்கானிஸ்தான் ஒப்புக்கொண்டது. 1998ஆம் ஆண்டில், நீரை ஈரானுக்கு அனுப்பாமல் தாலிபான்கள் தடைசெய்து, நீரை வேறுபக்கமாக திருபிவிட்டனர். இதனல் ஹெல்மண்டு பள்ளத்தாக்கு வற்றியது. பல உயிரினங்கள் நீராதாரம் இன்றி மடிந்தன,[13]

சான்றுகள்[தொகு]

  1. "Hydroelectric Power Plants in Afghanistan". IndustCards. பார்த்த நாள் 7 February 2012.
  2. Boone, Jon (13 December 2009). "Taliban stalls key hydroelectric turbine project in Afghanistan". The Guardian. http://www.guardian.co.uk/world/2009/dec/13/afghanistan-turbine-taliban-british-army. பார்த்த நாள்: 14 December 2009. 
  3. 3.0 3.1 "Kajakai Hydroelectric Project Condition Assessment Dam Safety Assessment Repor". Amherst, New York: Acres International Corporation (April 2004). பார்த்த நாள் 7 February 2012.
  4. Kajakai list as October 31, 2002 aerial bombing location
  5. "Afghanistan: Infrastructure". USAID. July 2007. http://www.usaid.gov/locations/asia_near_east/documents/countries/afghanistan/afgh_infrastructure_jul2007.pdf. பார்த்த நாள்: 2008-10-07. 
  6. "Kajakai Dam Powerhouse Boosts Power to 33 MW, Benefitting Thousands in SW Afghanistan". Afghanistan IRP (Louis Berger Group, Inc.) (24 October 2009). பார்த்த நாள் 7 February 2012.
  7. Taliban flee battle using children as shields - NATO, February 14, 2007
  8. Hundreds of Taliban massing to attack dam - official
  9. British Troops Complete Operation to Deliver Turbine
  10. The Guardian *with Additional reporting by Rauf Mehrpoor (2015-09-18). "British engineers evacuated from key Afghan dam as Taliban approach". The Guardian. http://www.theguardian.com/world/2015/sep/18/british-engineers-evacuated-key-afghan-dam-taliban-approach-kajaki. பார்த்த நாள்: 2015-09-18. 
  11. "What went wrong with Afghanistan Kajaki power project?". BBC News report by Mark Urban. http://www.bbc.co.uk/news/13925886. பார்த்த நாள்: 2011-06-28. 
  12. UK Troops in Huge Turbine Mission
  13. Hirmand River's water to flow into Iran again, soon: Afghan source, December 12, 2002

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கஜாக்கி_அணை&oldid=2399212" இருந்து மீள்விக்கப்பட்டது