உள்ளடக்கத்துக்குச் செல்

ஹாமூன் ஏரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஹாமூன் ஏரி (பாரசீக மொழி: دریاچه هامونDaryācheh-ye Hāmūn, Lake Hāmūn) என்னும் நீர்த்தடம், ஈரானை ஒட்டிய ஆப்கானித்தான் எல்லையில் உள்ளது. ஹாமூன் என்ற சொல் ஆழம் குறைந்த ஏரியைக் குறிக்கும்.[1] இந்த ஏரியுடன் பல ஆறுகள் கலக்கின்றன. அவற்றுள் முக்கியமானது ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் மலையில் இருந்து பாயும் வற்றாத எல்மாந்து ஆறு.

புவியியல்[தொகு]

இந்த ஏரி 4,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த ஏரிப்பகுதியில் வலசை செல்லும் பறவைகள் தங்கிச் செல்கின்றன. முற்காலத்தில் இங்கு காட்டு விலங்குகளும் வசித்தன.[2][3]

தொன்மையான இடங்கள்[தொகு]

இந்த ஏரிப் பகுதியில் தொன்மையான இடங்களும் உள்ளன. அகாமனிசியப் பேரரசின் நகரமான தகான்-ஈ=கோலாமான், ஏரிக்கு அருகில் உள்ளது.31°30′31″N 61°45′13″E / 31.508625°N 61.753551°E / 31.508625; 61.753551.

1975ஆம் ஆண்டில், உலகளவில் முக்கியத்துவம் பெற்ற நீர்த்தடங்களில் ஒன்றாக இந்த ஏரியும் தேர்வானது.[4]

நீர்ப்பாசனம்[தொகு]

இந்த ஏரிக்கு அருகில் அருகில் வாழ்ந்த மக்கள் நீளமான படகுகளின் மூலம் ஏரியைக் கடந்தனர். அவர்கள் வேட்டையாடியும், மீன்பிடித்தும், உழுதும் உணவு சேகரிப்பர். இந்த ஏரிநீர் சுற்றியுள்ள பகுதிகளுக்கு இறைக்கப் பயன்படுகிறது.[2]

பஞ்சம்[தொகு]

ஹெல்மண்டு ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்காலும், பஞ்சத்தாலும் ஏரி பாதிக்கப்பட்டிருக்கிறது. ஏரியின் மேற்பரப்பு வெள்ளப்பாங்காகவும், சில நேரங்களில் ஏரி வறண்டு போயும் உள்ளது. லாண்ட்சட் துணைக்கோள் ஏரியை படமெடுத்தது. அந்த படங்களில் பனிபடர்ந்த பகுதியின் பரப்பளவு குறைந்து காணப்பட்டது. 2001ஆம் ஆண்டில், ஈரானிலும், ஆப்கானிஸ்தானிலும் தொடர்ந்து மூன்றாண்டுகளுக்கு பஞ்சம் நிலவியது.[3] ஆப்கானிஸ்தானில் போரால் பாதிக்கப்பட்ட அகதிகள் வந்து குடியேறியதால் நீர்ப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நீர்ப்பாசன வழித்தடங்கள் வற்றிப் போயிருந்தன. நீரைத் தேடி மக்கள் பிற இடங்களுக்கு குடிபெயர்ந்தும் உள்ளனர்.[3]

முன்னர் ஏரிநீரால் குளிரேறிய காற்று, தற்போது ஏரிப்படுகைளில் இருந்த உப்புத்துகள்களை அருகில் இருக்கும் பகுதிகளுக்கும் பரப்புகிறது. பயிர் விளைச்சலும் குறைந்தது. மீன்பிடித்தொழிலும் பாதிக்கப்பட்டது. பஞ்சக் காலத்தில் வலசை செல்லும் பறவைகள் வருவதில்லை[2][3]

படங்கள்[தொகு]

மேலும் பார்க்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. Geonames website
  2. 2.0 2.1 2.2 Weier 2002
  3. 3.0 3.1 3.2 3.3 Partov 1998
  4. "Ramsar sites database". Archived from the original on 2012-04-27. பார்க்கப்பட்ட நாள் 2015-11-10.

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹாமூன்_ஏரி&oldid=3814711" இலிருந்து மீள்விக்கப்பட்டது