உள்ளடக்கத்துக்குச் செல்

ஆப்கானித்தானின் பொருளாதாரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆப்கானிஸ்தான் உலகில் மிகவறுமையான, பின்தங்கிய அபிவிருத்தி அடையாகளின் ஒன்று. மூன்றில் இரண்டு பகுதி மக்கள் ஒரு நாளைக்கு 2 அமெரிக்க டொலருக்கும் குறைவாகவே சம்பாதிக்கின்றனர். பொருளாதாரம் 1979 தொடக்கம் இருந்த அரசில் ஸ்திரமின்மையால் பலமாகப் பாதிக்கப்பட்டது.

நாட்டில் பெருளாதார ரீதியாக செயல்லூக்கத்துடன் 11 மில்லியன் (மொத்தம் 29 மில்லியன் மக்கள் உள்ளனர்) மக்கள் உள்ளதாக 2002 இல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்புகள் சொல்லுகின்றன. ஆயினும் வேலையில்லா வீதம் பற்றிய உத்தியோக பூர்வமான தகவல்கள் எதுவும் இதுவரை இல்லை, ஆயினும் இது மிக உயர்வு என்பதே உண்மை. தொலிழ் சார் பயிற்சி இல்லாத இளம் சமுதாயம் கிட்டத்தட்ட 3 மில்லியன் உள்ளதாகக் கூறப்படுகின்றது. இது ஒவ்வொரு ஆண்டும் சுமார் 300,000 ஆக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆப்கானியப் மொத்த தேசிய உற்பத்தியில் மூன்றில் ஒரு பகுதி ஓபியம், மோபைன், ஹாசிஸ் போன்ற போதைப் பொருள் மூலமே கிடைக்கின்றது.

மறுபக்கம் சர்வதேச சமூகம் ஆப்கானிஸ்தானை கட்டி எழுப்புவதில் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றது. ஆப்கானிய இடைக்கால அரசு ஜேர்மன் பொன் நகரில் டிசம்பர் 2001 ல் உருவாகியபின் டோக்கியோ உதவி வழங்கும் நாடுகளின் மாநாட்டில் 4.5 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி உறுதியளிக்கப்பட்டது. இதைவிட 10.5 பில்லியன் அமெரிக் டொலர்கள் லண்டன் மாநாட்டின் மூலம் 2006 ல் ஆப்கானுக்கு கிடைத்தது. அபிவிருத்தியில் கல்வி, சுகாதாரம், நிர்வாகத் திறன் மேம்பாடு, பயர்ச்செய்கைத் துறை மேம்பாடு, வீதிகள் மீளாக்கம், சக்தி மற்றும் தொலைத் தொர்பு இணைப்புகள் என்பவற்றிற்கு முன்னுரிமை வழங்கப்பட்டது.

2004 ம் ஆண்டுக்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் அறிக்கையின் படி, தற்போதைய அபிவிருத்திகள் இரண்டு பிரதான கிளைகளைக் கொண்டது. இதன்படி முதலில் அவசிய உட்கட்டுமான வசதிகளை அபிவிருத்தி செய்தலும் இரண்டாவதாக நவீன பொது கட்டமைப்பை (Modern Public Sector) ஏற்படுத்துவது. 2006 ல் இரண்டு அமெரிக்க கம்பனிகள் 1.4 பில்லியன் பெறுமதியான வீதிகளை மீளமைத்தல், சக்தி இணைப்புகள், நீர் வழங்கல் போன்ற செயற்பாட்டிற்காக தொழில் ஒப்பந்தம் ஒன்றைப் பெற்றுக்கொண்டன.

தற்போதைய பொருளாதார மீட்சிக்கு முக்கிய காரணம் அண்டைய நாடுகளிலும், மேற்கிலும் இருந்து மீண்டு வந்த 4 மில்லியன் அகதிகளாவர். இவர்கள் தம்முடன் புதிய சக்தி, தொழில்களை ஆரம்பித்தமை என்பனவாகும். அத்துடன் சுமார் 2-3 பில்லியன் வரையான சர்வதேச உதவிகள் ஆண்டுதோறும் கிடைத்து வருவதும் பொருளாதாரத்திற்கு சக்தி வழங்குவதாக உள்ளது. தனியார் துறையும் தற்போது புத்தாக்கம் பெற்றுள்ளதைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். டுபாயில் வசித்துவரும் அப்கானிய குடும்பம் ஒன்று அப்கானில் ஒரு கொக்க – கோலா போத்தல் நிரப்பும் நிலையத்தை 25 மில்லியன் செலவில் நிர்மாணித்துள்ளதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.

நாட்டின் திறைசேரி பெரும்பாலும் வெளிநாட்டு உதவிகளை நம்பியெ உள்ளது. சிறிய பகுதியான 15% வரையே உள்ளுர் அரசினால் வரவுசெலவு திட்டத்தில் உள்ளடக்கப்படுகின்றது. மீதி ஐக்கிய நாடுகள் சபையின் மூலமும் சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களாலும் வழங்கப்படுகின்றது. அரசு 2003 ல் $350 மில்லியன் வரவு செலவுத் திட்டமும், 2004 ல் $550 மில்லியன் அளவிலான வரவு செலவுத் திட்டமும் போட்டது. அந்நியச் செலாவணி $500 மில்லியன் அளவாகும், இது பெரும்பாலும் சுங்க வரிமூலமே அறவிடப் படுகின்றது.

2002 தொடக்கம் பணவீக்கம் பெரும் பிரைச்சனையாக உள்ளது. இருந்தாலும், பழைய 1000 ஆப்கானிக்குப் பதிலாக ஒரு புதிய ஆப்கானி என்ற பண முறைமையை அமுல் படுத்தியதன் மூலம் ஓரளவு நிலையான தன்மை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் பின்னர் குறிகாட்டிகள் நிலையான தன்மையைக் காட்டியதுடன், 2003 ல் சிறிதளவான வளர்ச்சியையும் காட்டியது.

ஆப்கானிய அரசும், சர்வதேச உதவி வழங்குவோரும் அடிப்படைத் தேவைகள், உட்கட்டுமான அபிவிருத்தி, கல்வி, வீடு, மற்றும் பொருளாதார மீளமைப்பு என்பவற்றில் அதிகளவு அக்கறை காட்டிவருகின்றனர். நிதியியல் துறையைக் கட்டி யெழுப்புவதற்கான முயற்சிகள் இது வரை சிறப்பாகவே நடைபெற்றுவருகின்றன. பணமானது நாட்டினுள்ளேயும் வெளியேயும் உத்தியோக பூர்வ வங்கிகள் மூலம் பரிமாற்றக் கூடியதாக உள்ளது. 2003 க்குப்பின்னர் சுமார் பதின்நான்கு புதிய வங்கிகள் இங்கே திறக்கப்பட்டுள்ளன. இதில் ஸ்டான்டர்ட் சார்ட்டட் வங்கி, ஏஐபி வங்கி, காபூல் வங்கி, அசீசீ வங்கி என்பன அடங்கும். தனியார் முதலீட்டை ஊக்குவிக்கும் வண்ணம் வரி சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.