எல்மந்து மாகாணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எல்மந்து
Helmand

هلمند
மாகாணம்
அர்காந்தாப் ஆற்றுப் பள்ளத்தாக்கு
அர்காந்தாப் ஆற்றுப் பள்ளத்தாக்கு
எல்மந்து மாகாணம் தனித்துக் காட்டப்பட்டுள்ள ஆப்கானிஸ்தான் வரைபடம்
எல்மந்து மாகாணம் தனித்துக் காட்டப்பட்டுள்ள ஆப்கானிஸ்தான் வரைபடம்
நாடு ஆப்கானித்தான்
தலைநகரம்லஷ்கர் கா
அரசு
 • ஆளுநர்மிர்சா கான் ரஹீமி[1]
பரப்பளவு
 • மொத்தம்58,584 km2 (22,619 sq mi)
மக்கள்தொகை (2013)[2]
 • மொத்தம்8,79,500
 • அடர்த்தி15/km2 (39/sq mi)
நேர வலயம்UTC+4:30
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுAF-HEL
மொழிகள்பஷ்தூ மொழி

எல்மந்து அல்லது ஹில்மந்து அல்லது ஹெல்மந்து என்னும் மாகாணம், ஆப்கானிஸ்தானில் உள்ளது. இது பரப்பளவில் பெரிய மாகாணமாகும். இது 58,584 சதுர கிலோமீட்டர்கள் (20,000 sq mi) பரப்பளவைக் கொண்டுள்ளது. இந்த மாகாணம் 13 மாவட்டங்களைக் கொண்டுள்ளது. மொத்தமாக ஆயிரக்கும் அதிகமான கிராமங்கள் உள்ளன. இங்கு 879,500 மக்கள் குடியிருக்கின்றனர்.[2] இதன் தலைநகரம் லஷ்கர் கா ஆகும்.

இந்த மாகாணத்தில் பாயும் எல்மாந்து ஆறு, நீர்ப்பாசனத்திற்கு உதவுகிறது. கஜாக்கி மாவட்டத்தில் உள்ள கஜாக்கி அணையில் மின் உற்பத்தித் திறன் கொண்டநிலையங்கள் உள்ளன.

இங்கு புகையிலை, பருத்தி, எள், கோதுமை, சோளம், சூர்யகாந்தி, உருளை, தக்காளி, காளிபிளவர், திராட்சை, தர்பூசணி ஆகிய பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன.[3]

அரசியல்[தொகு]

இந்த மாகாணத்தின் ஆளுநராக மிர்சா கான் ரஹீமீ தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இந்த மாகாணத்திலுள்ள லஷ்கர் கா, இதன் தலைநகரமாகும். இங்கு சட்ட ஒழுங்கை காப்பாற்றும் பொறுப்பு ஆப்கானிஸ்தான் தேசிய காவல்படையைச் ஏரும். எல்லையோரத்தில் ஆப்கான் எல்லைக் காவல் படையினர் பாதுகாக்கின்றனர்.

மக்கள்[தொகு]

2013ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, இங்கு 879,500 மக்கள் வாழ்கின்றனர்.[2] இங்குள்ள மக்களில் பலர் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார். இவர்களில் பஷ்தூன் மக்கள் பெரும்பான்மையினர் ஆவார். பலூச் மக்கள், தஜிக் மக்கள், கசாரா மக்கள் ஆகியோரும் பூர்வ குடியினர் ஆவர்.[4][3] இங்குள்ள அனைவரும் சுன்னி இசுலாம் சமயத்தை பின்பற்றுகின்றனர். சிலர் சியா இசுலாம் பிரிவை சேர்ந்தவர்கள் ஆவர்.

மாவட்டங்கள்[தொகு]

ஹெல்மண்டு மாகாணத்திலுள்ள் மாவட்டங்கள்

இந்த மாகாணத்தில் கீழ்க்காணும் மாவட்டங்கள் உள்ளன.[5]

மேலும் பார்க்க[தொகு]

படங்கள்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 http://www.pajhwok.com/en/2015/08/30/300-casualties-inflicted-rebels-musa-qala-governor
  2. 2.0 2.1 2.2 "Settled Population of Helmand province by Civil Division, Urban, Rural and Sex-2012-13" (PDF). Islamic Republic of Afghanistan: Central Statistics Organization. Archived from the original (PDF) on 2014-02-26. பார்க்கப்பட்ட நாள் 2012-12-27.
  3. 3.0 3.1 "Helmand" (PDF). Program for Culture & Conflict Studies. May 1, 2010. பார்க்கப்பட்ட நாள் 2012-12-28.
  4. NPS.edu
  5. "Hillmand Province". Government of Afghanistan and United Nations Development Programme (UNDP). Ministry of Rural Rehabilitation and Development. பார்க்கப்பட்ட நாள் 2012-12-27.

இணைப்புகள்[தொகு]



"https://ta.wikipedia.org/w/index.php?title=எல்மந்து_மாகாணம்&oldid=3579193" இலிருந்து மீள்விக்கப்பட்டது