உள்ளடக்கத்துக்குச் செல்

காபூலின் வீழ்ச்சி, 2021

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காபூலின் வீழ்ச்சி
Fall of Kabul
நாள் 15 ஆகத்து 2021
இடம் காபூல், ஆப்கானித்தான்
முடிவு தாலிபான் வெற்றி

ஆப்கானித்தான் தலைநகர் காபூல் 2021 ஆகத்து 15 அன்று தாலிபான் படையினரால் கைப்பற்றப்பட்டது. உள்ளூர் நேரப்படி இரவு 11:00 மணியளவில், அரசுத்தலைவர் அசரப் கனி தனது முகநூலில் "ஒரு இரத்தக்களரிப் போரைத் தவிர்ப்பதற்காகத் தாம் வெளியேறுவதாகவும், தாலிபான்கள் தங்கள் வாள்கள், துப்பாக்கிகளின் தீர்ப்பால் வெற்றி பெற்றனர்" என்றும் பதிவிட்டார்.[6] காபூலின் வீழ்ச்சி ஆப்கானித்தான் அரசுக்கு எதிராக 2021 மே மாதத்தில் தொடங்கிய இராணுவத் தாக்குதலின் உச்சம் ஆகும். அசரப் கனி நாட்டை விட்டு வெளியேறிய சில மணிநேரங்களுக்குப் பிறகு காபூல் நகரம் கைப்பற்றப்பட்டது. 2020 பெப்ரவரி 29 இல் தொடங்கிய அமெரிக்கப் படைகளின் வெளியேற்றத்தை அடுத்து ஆப்கானித்தானின் பெரும்பாலான மாகாணத் தலைநகரங்கள் அடுத்தடுத்து வீழ்ந்தன. அமெரிக்கப் படைகள் 2021 ஆகத்து 31 இற்குள் முழுமையாக வெளியேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.[7]

தாலிபான் பிரதிநிதிகளுக்கும் ஆப்கானித்தான் அரச அதிகாரிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகின்ற போதிலும், அரசாங்கத்தின் நிபந்தனையற்ற சரணடைதலுக்குக் குறைவான எந்த முடிவுக்கும் வர வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது.[8][9][10] அமைதியான அதிகாரப் பரிமாற்றமே தாலிபான்களால் கோரப்பட்டது,[10] அரசாங்கம் இதற்குத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது. அதே வேளையில், ஒரு இடைக்கால அரசாங்கத்திற்கு அதிகாரத்தை மாற்ற அது விரும்புவதாகவும் தெரிவிக்கப்பட்டது.[11] சில நேட்டோ படைகள் தங்களுடைய நாடுகளின் குடிமக்களை வெளியேற்றுவதற்கான பாதுகாப்பை வழங்கி வருகின்றன.[12]

மேற்கோள்கள்[தொகு]

 1. Colarossi, Natalie (15 August 2021). "Afghan President Ashraf Ghani Flees to Tajikistan Amid Taliban Entering Kabul". Newsweek. Archived from the original on 15 August 2021. பார்க்கப்பட்ட நாள் 15 August 2021. {{cite web}}: |archive-date= / |archive-url= timestamp mismatch (help)
 2. SEIR, AHMAD; FAIEZ, RAHIM; AKHGAR, TAMEEM; GAMBRELL, JON (15 August 2021). "Afghan president flees the country as Taliban move on Kabul". AP NEWS. Archived from the original on 15 August 2021. பார்க்கப்பட்ட நாள் 15 August 2021.
 3. "Afghan President Ghani leaves country – reports". BBC News. 15 August 2021. Archived from the original on 15 August 2021. பார்க்கப்பட்ட நாள் 15 August 2021.
 4. Hakim, Yalda. "An anti-Taliban coalition seems to be forming, including Vice President @AmrullahSaleh2 and Ahmad Massoud, son of Ahmad Shah Massoud – they are in Panjsher, about three hours drive from Kabul #Afghanistan". BBC News. Archived from the original on 17 August 2021. பார்க்கப்பட்ட நாள் 17 August 2021.
 5. "The Panjshir Valley: what is the main bastion of resistance against the Taliban advance in Afghanistan". Market Research Telecast. 17 August 2021. Archived from the original on 16 August 2021. பார்க்கப்பட்ட நாள் 17 August 2021.
 6. "Taliban has won, says Afghan President Ghani as militants enter Kabul". Deccan Herald (in ஆங்கிலம்). 2021-08-16. Archived from the original on 15 August 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-08-17.
 7. Missy Ryan; Karen DeYoung (13 April 2021). "Biden will withdraw all U.S. forces from Afghanistan by Sept. 11, 2021". The Washington Post (in English). Archived from the original on 16 August 2021. பார்க்கப்பட்ட நாள் 16 August 2021.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
 8. Mistlin, Alex; Sullivan, Helen; Harding, Luke; Harding, Luke; Borger, Julian; Mason, Rowena (15 August 2021). "Afghanistan: Kabul to shift power to 'transitional administration' after Taliban enter city – live updates". The Guardian இம் மூலத்தில் இருந்து 15 August 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210815103044/https://www.theguardian.com/world/live/2021/aug/15/afghanistan-taliban-close-in-on-kabul-as-last-government-stronghold-in-north-falls. 
 9. "Afghanistan: Heavy fighting ongoing on the outskirts of Kabul as of early Aug. 15; a total blackout reported in the city". Archived from the original on 15 August 2021. பார்க்கப்பட்ட நாள் 15 August 2021.
 10. 10.0 10.1 Seir, Ahmad; Faiez, Rahim; Akhgaf, Tameem; Gambrell, Jon (15 August 2021). "Taliban enter Kabul, await 'peaceful transfer' of power". AP NEWS. Archived from the original on 15 August 2021. பார்க்கப்பட்ட நாள் 15 August 2021.
 11. "Taliban officials: there will be no transitional government in Afghanistan". Reuters. 15 August 2021. Archived from the original on 15 August 2021. பார்க்கப்பட்ட நாள் 15 August 2021.
 12. "NATO says it is helping keep Kabul airport open for evacuations". Reuters. 15 August 2021 இம் மூலத்தில் இருந்து 15 August 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210815160948/https://www.reuters.com/world/asia-pacific/nato-maintains-diplomatic-presence-kabul-despite-taliban-advances-2021-08-15/. பார்த்த நாள்: 15 August 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=காபூலின்_வீழ்ச்சி,_2021&oldid=3247934" இலிருந்து மீள்விக்கப்பட்டது