எவரெசுட்டு சிகரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Mountain name required

எவரெசுட்டு சிகரம் (அல்லது எவரெஸ்ட் சிகரம்) உலகிலேயே யாவற்றினும் மிக உயர்ந்த கொடுமுடியாகும். இது கடல் மட்டத்திலிருந்து 8,848 உயரம் மீட்டர் (29,029 அடி) ஆகும். மேலும், பூமியின் மையத்தில் இருந்து அளக்கப்பட்டால், 5 வது உயரமான மலை ஆகும். இது இமயமலையின் பிரிவில் அமைந்துள்ளது. சீனா மற்றும் நேபாளம் இடையே சர்வதேச எல்லையாக அமைந்துள்ளது.

இது நேபாள-திபெத்திய எல்லையில் அமைந்துள்ளது. இக்கொடுமுடியை 1953ஆம் ஆண்டு மே மாதம் 29ம் நாள் முதன் முதலாக எடுமண்டு இல்லரி என்னும் நியூசிலாந்துக்காரரும் டென்சிங் நார்கே என்னும் நேப்பாளத்து செர்ப்பாக்காரரும் ஏறி கொடி நாட்டி உலக சாதனை நிகழ்த்தினார்கள். இது உலகிலேயே ஒப்பரிய சாதனைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. நில உருண்டையின் உச்சிக்கோடுதனையே (கோடு = மலை உச்சி) மனிதன் வென்றுவிட்டான் என்று எண்ணி உலகம் பெருமைப்பட்டது.

மலையேற்றத்தில் மிகத்தேர்ந்தவர்கள் மட்டுமே எவரெசுட்டு உச்சியை எட்ட முடியும் என்றாலும் அண்மையில் இரு கால்களும் இல்லாதவரும், கண் பார்வை அற்றவர்களும் இக்கொடுமுடியை எட்டிப் புகழ் படைத்துள்ளனர்[மேற்கோள் தேவை]. எவரெசுட்டுக்கு பல பழம்பெயர்கள் வழக்கில் உள்ளன. தேவ'கிரி, தேவ'துர்கா என்று வடமொழியிலும், (அண்மைக்காலத்தில், சுமார் 1960ல் இருந்து சாகர்மாதா என்றும்), திபேத்திய மொழியில் கோமோலுங்குமா (= அண்டங்களின் தாய்) என்றும் அழைக்கப்படுகின்றது. இம்மலை ஆண்டொன்றுக்கு 4 மில்லி மீட்டர் உயரம் கூடுவதாக அறிஞர்கள் கண்டுள்ளனர்[மேற்கோள் தேவை]. இப்பெருமலைத்தொடர் எவ்வாறு உருவாகியது என்பதற்கு இமயமலை கட்டுரையைப் பார்க்கவும்.

உயர அளவீடும் பெயர் சூட்டும்[தொகு]

இராதானாத் சிக்தார் (1813-1870) என்னும் வங்காளத்து இந்தியரே முதன் முதலாக 1852 ஆம் ஆண்டில் இதன் உயரம் சுமார் 8,848 மீட்டர் என்று கண்டுபிடித்தார். அவர் சுமார் 240 கி.மீ தொலைவில் இருந்து கொண்டே தியோடலைட்டு என்னும் கருவியினால் முக்கோண முறையின் அடிப்படையில் இதன் உயரத்தைக் கணித்தார்.

இச்சிகரத்தை முறைப்படி அளவிடும் முன் இதனை கொடுமுடி-15 என்றுமட்டும்தான் குறித்து வைத்திருந்தார்கள். பின்னர் நில அளவை அணியின் தலைவராக இருந்த சியார்ச் எவரெசுட்டு (George Everest) என்பவரின் பெயரை இக்கொடுமுடிக்கு ஆங்கிலேயர் ஆண்ட்ரூ வாகு (Andrew Waugh) என்பவர் சூட்டினார். இச்சிகரம் கடல் மட்டத்திலிருந்து 28844 அடி உயரமுடையது.

எவரெசுட்டு மலை

எவரெசுட்டு சிகரத்தின் உயரமும், உருவாக்கமும்[தொகு]

எவரெசுட்டு சிகரம் பூமியின் இளம் சிகரங்களில் ஒன்றாகும். இது பெரும்பாலுமாக வலுவூட்டப்பட்ட படிவுக்கலன்கள் மற்றும் உருமாறி பாறைகளைக் கொண்டுள்ளன. நவீன டெக்டோனிக் கொள்கையின்படி இமயமலை இந்திய ஆஸ்திரேலிய தட்டு மற்றும் யூரேசியன் கண்டங்களிடையே நிகழ்ந்த மோதலால் உருவாகியது. இது தான் மடிப்பு மலை என்று கூறுகிறோம். இந்த மடிப்பு மலைகளில் எவரெசுட்டும் ஒன்று ஆகும்.

வடக்கு நோக்கி நகர்ந்த இந்திய-ஆஸ்திரேலிய தகடுக்கும் யுரேசியன் தகடுக்கும் 7 கோடி ஆண்டுகள் முன்பு இந்த மோதல் தொடங்கியது . 5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு, இந்த வேகமாக நகரும் இந்திய ஆஸ்திரேலிய தகடு முழுமையாக தெதைஸ் பெருங்கடலை மூடிவிட்டது, இதன் இருப்பு அங்குள்ள படிவ பாறைகள் மற்றும் எரிமலைகள் மூலம் அறியப்படுகின்றது. இந்த படிவுகள் அடர்த்தி குறைவாக இருந்ததால் அவை கடலின் கீழே போகாமல் ஒன்று சேர்ந்து மலையை உருவாக்கின. இந்திய ஆஸ்திரேலிய தட்டு கிடைமட்டமாக நகர்வதால் திபெத்திய பீடபூமி உயர்ந்து வருகிறது. மியான்மரில் உள்ள அரகான் யோமா உயர்நிலங்கள் மற்றும் வங்காள விரிகுடா பகுதியில் உள்ள அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் இந்த மோதலால் உருவாகியது.

இன்னும் இந்திய ஆஸ்திரேலிய தட்டு வருடத்திற்கு 67 மிமீ நகர்ந்து வருகிறது, மற்றும் அடுத்த 10 மில்லியன் ஆண்டுகளில் இது ஆசியாவினுள் 1,500 கிமீ நகரும். இந்திய-ஆசிய குவிதல் ஆண்டிற்கு 20 மிமீ தெற்கு இமாலய முகப்பின் அழுத்தத்தால் உறிஞ்சப்படுகிறது. இதனால் இமயமலை ஆண்டிற்கு 5 மிமீ உயர்கிறது. இந்தியத் தகடு, ஆசியத் தகடுகள் நுழைவதால் இப் பகுதியில் அடிக்கடி நில நடுக்கம் ஏற்படுகின்றது

உயரம் பற்றிய கருத்துவேறுபாடு[தொகு]

நேபாளம் இதன் உயரத்தை 8848மீ என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ஆனால் சீனா இதன் உயரம் 8844மீ என்கிறது. சீனா அரசு எவரெசுட்டின் உயரத்தை அளக்க அதன் சிகரத்தை அளவுகோலாக கொள்ளவேண்டும் என்கிறது. நேபாளம் சிகரத்தில் உள்ள பனிக்கட்டியையும் கணக்கில் கொள்ளலாம் என்கிறது. உலகின் மற்ற கொடுமுடிகளின் உயரம் அதன் உச்சியில் உள்ள பனியை கணக்கில் கொண்டுதான் அளக்கப்படுகிறது என்று நேபாளம் கூறுகிறது. உயரம் தொடர்பாக நேபாளத்திற்கும் சீனாவிற்கும் நடந்த பேச்சில் இறுதியான உடன்பாடு எட்டப்படவில்லை. 1999 மே மாதத்தில் அமெரிக்க குழு புவியிடங்காட்டி கொண்டு எவரெசுட்டின் உயரம் 8850மீ என்று கணித்தது, ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வத் துறை 8850மீ என்பதையே பயன்படுத்துகிறது. இதை நேபாளம் ஏற்கவில்லை.[1]

குறிப்பிடத்தக்க எவரெசுட்டு ஏறிய பதிவுகள்[தொகு]

2010 ஏறும் பருவத்தின் முடிவில், 3,142 தனிநபர்கள் உச்சி தொட்டுள்ளனர்.

மின் பகதூர் செர்ஷன் தனது முதல் முயற்சியிலேயே உச்சியை அடைந்த போது அவருக்கு கிட்டத்தட்ட 77 வயது

அப செர்ப்பா உச்சியை 21 முறை அடைந்துள்ளார்.

1922 - ஜார்ஜ் பின்ச் மற்றும் கேப்டன் சி ஜெஃப்ரி புரூஸ் 8,000 மீட்டர் (26,247 அடி) முதல் ஏறு,

1952 - 1952 சுவிஸ் எவரெஸ்ட் பயணம் மூலம் தென் கோல், முதல் ஏறு

1953 - 1953 பிரிட்டிஷ் எவரெஸ்ட் பயணமாக நார்கே மற்றும் எட்மண்ட் ஹிலாரி டென்சிங் முதல் ஏற்றம்

1975 - ஜுங்கோ, முதல் பெண் ஏற்றம்,

1978 - ரீன்ஹோல்ட் மெஸ்னர் மற்றும் பீட்டர் ஹபெலெர் ஆக்சிஜனை இல்லாமல் முதல் ஏற்றம்

1980 - ரீன்ஹோல்ட் மெஸ்னர் , முதல் தனி ஏற்றம்

1988 - ஜீன் மார்க் பொய்வின், மிதப்பான் மூலம் முதல் ஏற்றம்

1995 - அலிசன் ஹார்க்ரீவஸ் ,ஆக்சிஜன் இல்லாமல் முதல் பெண் ஏற்றம்

1998 -. வேகமான 20 மணி நேரத்தில் ,ஆக்சிஜனை இல்லாமல், முதல் ஏற்றம்

2000 - Davo Karničar மூலம் ஸ்கை முதல் வம்சாவளியை

2001 - எரிக் வெய்ன்மேயர், ஒரு பார்வையற்றவர் முதல் ஏற்றம்

2004 - செர்ப்பா, 8 மணி நேரம், 10 நிமிடங்களில் முதல் ஏற்றம்

மேற்கோள்கள்[தொகு]

  1. எவரைசுட்டு உயரத்தை அளந்து அது குறித்த சர்ச்சைக்கு முற்றுபுள்ளி வைக்க நேபாளம் முயற்சி

ஆங்கில விக்கி தளத்தின் மொழிப்பெயர்ப்பு.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எவரெசுட்டு_சிகரம்&oldid=1851230" இருந்து மீள்விக்கப்பட்டது