தியோடலைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தியோடலைட்டு

தள மட்டக் கோணமானி அல்லது தியோடலைட்டு என்பது நில அளவைக்குப் பயன்படும் ஒரு நில அளவையியல் கருவியாகும். இதன் உதவியால் கற்பனையான முக்கோணங்களை உருவாக்கி முக்கோண வழி அளவீடு முறை மூலம் கோணங்களைத் துல்லியமாகப் அளக்கக்கலாம். இதன் மூலம் ஒரு பரப்பின் பல்வேறு பகுதிகளின் மட்டத்தை அறியலாம். இக்கருவியில் ஒன்றுக்கொன்று செங்குத்தான இரு தளங்களில் மேலும் கீழுமாகவும் இடவலமாகவும் நகர வல்ல ஒரு தொலை நோக்கி கருவி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இதில் தகடும் குமிழி மட்டமும்(Spirit level) உள்ளன. இவைகள் கோணங்களை அளவிட உதவுகின்றன. இது முக்கோண முறையில் நிலத்தின் அமைப்புகளை அளவிட மிகவும் பயனுடைய கருவி. இக்கருவியை முதன் முதலாக தாமசு டிக்சு (Thomas Digges) என்பவர் 1571 ஆம் ஆண்டு எழுதிய பான்ட்டோ மெட்ரியா (Pantometria) என்னும் நில அளவையியல் நூலில் விளக்கினார். இவருடைய தந்தையாகிய லியோனார்டு டிக்சு அவர்கள் தான் இக்கருவியக் கண்டு பிடித்ததாகக் கூறுவர். இந்த தள மட்டக் கோணமானி, பழைய அரேபிய முறையாகிய அல்-ஃஇடேடு முறையைப் பின்பற்றியது. அரேபிய மொழியில் அல்-இடாட என்றால் அளவுகோல் என்று பொருள்.

செங்குத்தான இரு தளங்களில் நகர் முறை
தற்கால மின் தியோடலைட்டு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தியோடலைட்டு&oldid=3200292" இலிருந்து மீள்விக்கப்பட்டது