அக்கோன்காகுவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Mountain name required

அக்கோன்காகுவா (Aconcagua) தென் அமெரிக்காவில் உள்ள அர்ஜென்டினா நாட்டில், அதன் மேற்கே உள்ள மெண்டோசா மாநிலத்தில், உள்ள பெரு மலையாகும். இதுதான் மேற்கு உலக நாடுகளிலேயே உள்ள மிக உயர்ந்த மலை. இதன் உயரம் கடல் மட்டத்திலிருந்து 6,962 மீ. ஆண்டீய மலைத்தொடரில் உள்ள இம்மலை ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, வட அமெரிக்கா ஆகிய எல்லாவிடங்களிலும் உள்ள மலைகள் யாவற்றினும் மிகப் பெரியது. இந்திய வட எல்லையில் உள்ள இமய மலைத்தொடரில் மட்டும் தான் இதனினும் மிக உயர்ந்த மலை முகடுகளும் கொடுமுடிகளும் உள்ளன. இமய மலையிலே 7000 மீ உயரத்தையும் தாண்டிய ஓங்கிய கொடுமுடிகள் (சிகரங்கள்) 100க்கும் மேலாக உள்ளன.

மெண்டோசா மாநிலம்

அக்கோன்காகுவா மலை உலகில் ஏழு கொடுமுடிகள் என்று மலையேறும் வல்லுநர்கள் சிறப்பித்துச் சொல்லும் கொடுமுடிகளில் ஒன்று. அக்கோன்காகுவா என்னும் பெயர் அந்நாட்டில் வாழும் பழங்குடிகளாகிய கெச்சுவா மொழியில் கூறும் அக்கோன் காஃஉஅக் (பொருள்: கல் காப்பு மதில்) என்பதில் இருந்தோ அல்லது அங்கு வாழும் ஆராஉக்கா மக்கள் தங்கள் மொழியில் கூறும் அக்கோன்கா-ஃஉஅ என்னும் சொல்லிலிருந்தோ வந்திருக்க வேண்டும் என்று கருதுகிறார்கள்.

இம்மலையில் பல உறைபனிப் பையாறுகள் பல உள்ளன. அவற்றுள் போலந்தார் உறைபனிப் பையாறு புகழ் பெற்றது. 1934ல் போலந்து நாட்டினர் வழி கண்டு ஏறியதன் நினைவாக இப்பெயர் ஏற்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்கோன்காகுவா&oldid=1946986" இருந்து மீள்விக்கப்பட்டது