உள்ளடக்கத்துக்குச் செல்

தாப்லேஜங் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நேபாளத்தின் நேபாள மாநில எண் 1-இல் தாப்லேஜுங் மாவட்டத்தின் அமைவிடம்

தாப்லேஜங் மாவட்டம் (Taplejung District) (நேபாளி: ताप्लेजुङ जिल्ला Listen வட கிழக்கு நேபாளத்தின் மாநில எண் 1-இல், லிம்புவான் கிழக்குப் பிராந்தியத்தில், மேச்சி மண்டலத்தில் இமயமலையில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் தாப்லேஜங் நகரம் ஆகும்.

தாப்லேஜங் மாவட்டத்தின் மொத்தப் பரப்பளவு 3646 சதுர கிலோ மீட்டராகும். 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மொத்த மக்கள் தொகை 1,27,461 ஆகும். [1] லிம்பு மொழி, நேபாளி மொழிகள் இங்கு பேசப்படுகிறது. இம்மாவட்டத்தின் வடக்கு பகுதிகள் திபெத் தன்னாட்சிப் பகுதியுடன் எல்லையாக கொண்டது.

புவியியல் தட்ப வெப்பம்

[தொகு]
நேபாளப் புவியியல் மற்றும் தட்ப வெப்பம்[2] உயரம் பரப்பளவு  %
Upper Tropical climate 300 - 1,000 மீட்டர்கள்
1,000 - 3,300 அடிகள்.
 2.4%
Subtropics 1,000 - 2,000 மீட்டர்கள்
3,300 - 6,600 அடி.
14.8%
Temperate climate 2,000 - 3,000 மீட்டர்கள்
6,400 to 9,800 அடி.
19.5%
மான்ட்டேன் 3,000 - 4,000 மீட்டர்கள்
9,800 to 13,100 அடி.
16.8%
மான்ட்டேன்#Alpine grasslands and tundra 4,000 - 5,000 மீட்டர்கள்
13,100 - 16,400 அடி.
38.8%
பனி படர்ந்த பகுதிகள் 5,000 மீட்டருக்கும் மேல்  7.7%

தாப்லேஜுங் மாவட்டம் நேபாள மாநில எண் 1-இல் வட கிழக்கில் அமைந்துள்ளது. தமூர் ஆறு தாப்லேஜுங் மாவட்டத்தில் பாய்கிறது. உலகின் உயரமான மலைகளில் ஒன்றான கஞ்சஞ்சங்கா மலை இம்மாவட்டத்தில் அமைந்துள்ளது. 3794 மீட்டர் உயரத்தில் அமைந்த லிம்பு மக்களின் பதிபாரா தேவி கோயில், இந்து மற்றும் பௌத்தர்களின் புனித தலமாக உள்ளது.

நகராட்சிகளும், கிராம வளர்ச்சி குழுக்களும்

[தொகு]
தாப்லேஜுங் மாவட்ட்ட கிராம வளர்ச்சிக் குழுக்களின் வரைபடம்
ரொடொடெண்டிரோன்
கஞ்சஞ்சங்கா மலையின் கொடுமுடி

தாப்லேஜுங் மாவட்டத்தில் 59 கிராம வளர்ச்சி குழுக்கள், கிராமப்புறங்களை நிர்வகிக்கிறது. தாப்லேஜுங் நகராட்சி மாவட்ட நிர்வாகத் தலைமையிடமாக உள்ளது.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Household and population by districts, Central Bureau of Statistics (CBS) Nepal" (PDF). Archived from the original (PDF) on 2015-02-13. பார்க்கப்பட்ட நாள் 2017-01-04.
  2. The Map of Potential Vegetation of Nepal - a forestry/agroecological/biodiversity classification system (PDF), 2005, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 87-7903-210-9, பார்க்கப்பட்ட நாள் Nov 22, 2013
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாப்லேஜங்_மாவட்டம்&oldid=4123903" இலிருந்து மீள்விக்கப்பட்டது