வடக்கு சிக்கிம் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வடக்கு சிக்கிம்
उत्तरी सिक्किम
மாவட்டம்
Sunset om Kangchengyao in North Sikkim.jpg
சிக்கிமில் வடக்கு சிக்கிமின் அமைவிடம்
சிக்கிமில் வடக்கு சிக்கிமின் அமைவிடம்
மாநிலம்சிக்கிம்
நாடுஇந்தியா
தொகுதிமங்கன்
பரப்பளவு
 • மொத்தம்4,226 km2 (1,632 sq mi)
ஏற்றம்610 m (2,000 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்43,354
 • அடர்த்தி10/km2 (27/sq mi)
நேர வலயம்இசீநே (ஒசநே+05:30)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுIN-SK-NS
இணையதளம்http://nsikkim.gov.in

வடக்கு சிக்கிம் மாவட்டம் இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இதன் தலைநகரம் மங்கன். இம்மாவட்டம் முழுவதும் மலைப்பகுதியில் உள்ளதால் மக்கள் தொகை குறைவு. இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் மக்கள் தொகை குறைவானவற்றுள் ஏழாவதாக உள்ளது. பரப்பளவைப் பொறுத்தவரை வடக்கு சிக்கிம் சிக்கிமின் மிகப்பெரிய மாவட்டமாகும்.

புவியியல்[தொகு]

சிக்கிம் மாநிலத்தில் உள்ள நான்கு மாவட்டங்களில் இதுவே மிகப்பெரியதாகும். இம் மாவட்டம் அடர்த்தியான காடுகள் நிறைந்த செங்குத்தான மலைப் பகுதிகளைக்கொண்டுள்ளது. செங்குத்தான மலைப்பகுதிகள் நிறைந்திருப்பதால் இங்கு நிலச்சரிவுகள் அடிக்கடி நிகழ்கின்றன. மலை உச்சிகளில் உள்ள பனி உருகுவதாலும் மழையினால் ஏற்படும் மண் அரிப்பின் காரணமாகவும் நிலச்சரிவுகள் ஏற்படுகின்றன.

வடக்கு சிக்கிம் மாவட்டத்தில் உள்ள காட்டுப்பூக்கள்
ச்ட்ரீம் பள்ளத்தாக்கில் காணப்படும் பூ மரங்கள்

தேசிய பாதுகாக்கப் பட்ட பகுதி[தொகு]

கஞ்சன்சங்கா தேசிய பூங்கா

பொருளாதாரம்[தொகு]

உலக அளவில் ஏலக்காய் உற்பத்தியில் மங்கன் முதலிடம் வகிக்கிறது. மங்கன் உலகின் ஏலக்காய் தலைநகரம் என்றும் அறியப்படுகிறது. இதன் நில அமைப்பும் மழை அளவும் பல்வேறு வகை ஏலக்காய் விளைவதற்கு சாதகமாய் அமைந்துள்ளது. இங்கு பல மின்னுற்பத்தி நிலையங்கள் நிறுவப்பட்டிருப்பதால் இங்கு மின்வெட்டு என்பதே இல்லை. செங்குத்தான மலைப்பகுதிகளும் பல்வேறு ஏரிகளும் புனல் மின்திட்டங்களை நிறுவ வசதியாக உள்ளன.

சுற்றுலா[தொகு]

சீன நாட்டின் எல்லைக்கு அருகில் அமைந்திருப்பதால் இம்மாவட்டத்தின் பல பகுதிகளைச் சுற்றிப்பார்க்க அரசாங்க அனுமதி பெறவேண்டும். இருந்தாலும் இப்பகுதியின் இயற்கை அழகை ரசிக்க மக்கள் வந்து குவிகின்றனர்.

போக்குவரத்து[தொகு]

அடிக்கடி ஏற்படும் நிலச்சரிவுகளின் காரணமாக சாலைகள் மோசமான நிலையில் உள்ளன.

மேலும் பார்க்க[தொகு]