குருதோங்மார் ஏரி

ஆள்கூறுகள்: 28°01′N 88°43′E / 28.02°N 88.71°E / 28.02; 88.71
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குருதோங்மார் ஏரி
அமைவிடம்வடக்கு சிக்கிம், சிக்கிம், இந்தியா
ஆள்கூறுகள்28°01′N 88°43′E / 28.02°N 88.71°E / 28.02; 88.71
வடிநில நாடுகள்இந்தியா
கடல்மட்டத்திலிருந்து உயரம்17,150 ft (5,230 m)
குடியேற்றங்கள்மாங்கன், வடக்கு சிக்கிம் 56 கிமீ. லாச்செனில் இருந்து ஏறத்தாழ 200 கிமீ.
குருதோங்மார் ஏரி - மே மாதத்தில்
ஏரிக்கு அருகில் உள்ள கோவில்
மார்ச்சு மாதம் பகுதி உறைந்த நிலையில்

குருதோங்மார் ஏரி அல்லது குருதோக்மார் ஏரி என்பது இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் உள்ள ஒரு புனித ஏரியாகும். இது உலகின் உயரமான இடத்தில் அமைந்துள்ள ஏரிகளுள் ஒன்று. இது கடல் மட்டத்தில் இருந்து 17, 100 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இது சிக்கிம் மாநிலத்தின் வடக்குப் பகுதியில் உள்ளது. இந்த ஏரி தீட்தா ஆற்றின் மூலங்களில் ஒன்றாகக் கூறப்படுகிறது.

இந்த மேட்டு நிலத்தின் பெரும்பகுதியில் இந்திய இராணுவம் தனது நிலைகளை அமைத்துள்ளதால் இந்தியர்களுக்கு மட்டுமே இந்த ஏரிக்குச் செல்ல அனுமதி உண்டு. இது அதிக உயரத்தில் அமைந்திருப்பதால் இங்கு ஆக்சிசன் குறைவாக இருக்கும். இதனால் சில சுற்றுலாப் பயணிகளுக்கு மூச்சு விடுவது கடினமாக இருக்கலாம்.

பெயர்க் காரணம்[தொகு]

எட்டாம் நூற்றாண்டில் திபெத்திய புத்த மதத்தைத் தோற்றுவித்த குரு பத்மசாம்பவர் என்பவர் இவ்விடத்திற்கு வந்து சென்றதால் இந்த ஏரிக்கு குருதோங்மார் என்று பெயரிடப்பட்டது. [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Lakes Of The Sacred Land Demojong, Sikkim". Department of Ecclesiastical Affairs, Government of Sikkim.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குருதோங்மார்_ஏரி&oldid=2645693" இருந்து மீள்விக்கப்பட்டது