உள்ளடக்கத்துக்குச் செல்

நாதூ லா கணவாய்

ஆள்கூறுகள்: 27°23′11″N 88°49′52″E / 27.386448°N 88.831190°E / 27.386448; 88.831190
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாதூ லா
இந்தியப் பக்கத்து எல்லைக்கு இட்டுச் செல்லும் படிக்கட்டுகள்
ஏற்றம்4,310 மீ (14,140 அடி)
Traversed byபழைய பட்டுப்பாதை
அமைவிடம் இந்தியா (சிக்கிம்) –  சீனா (திபெத் தன்னாட்சிப் பகுதி)
மலைத் தொடர்இமயமலை
ஆள்கூறுகள்27°23′11″N 88°49′52″E / 27.386448°N 88.831190°E / 27.386448; 88.831190

நாதூ லா கணவாய் என்பது இமயமலையில் உள்ள ஒரு கணவாய். இது இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தையும் சீனாவின் திபெத் தன்னாட்சிப் பகுதியையும் இணைக்கிறது. இது கடல் மட்டத்தில் இருந்து 4,310 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இது பண்டைய பட்டுப்பாதையின் ஒரு பகுதி. திபெத்திய மொழியில் நாதூ என்றால் கேட்கும் காதுகள் என்றும் லா என்றால் கணவாய் என்றும் பொருள். இக்கணவாய் சிக்கிமின் தலைநகரான கேங்டாக்கில் இருந்து 54 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்தியர்கள் மட்டுமே இக்கணவாய்க்குச் செல்ல முடியும். அவர்களும் செல்வதற்கு முன்பு அனுமதிச்சீட்டு பெற்றே செல்ல வேண்டும்.[1]

நாதூ லா கணவாய் இந்தியாவிற்கும் சீனாவுக்கு இடையில் உள்ள மூன்று வணிகப்பாதைகளுள் ஒன்று. 1962-இல் இந்திய சீனப் போர் நடைபெற்ற பகுதிகளில் இதுவும் ஒன்றாகும். மேலும் 1967-இல் இப்பகுதியில் இந்திய-சீனப் படைகளுக்கும் இடையே நடந்த மோதலில் இந்தியப்படைகள் வென்றது.[2]

நாது லாவில் உள்ள இந்திய போர் நினைவுச் சின்னம்

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Nathula Pass
  2. Na Nathu La and Cho La clashes: Nathu La La and Cho La clashes: When India defeated China in 1967

3.Permit Formalities for Nathu La Pass, Sikkim

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாதூ_லா_கணவாய்&oldid=4002761" இலிருந்து மீள்விக்கப்பட்டது