சாங்கு ஏரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சாங்கு ஏரி
அமைவிடம்கிழக்கு சிக்கிம்
ஆள்கூறுகள்27°22′31″N 88°45′50″E / 27.37528°N 88.76389°E / 27.37528; 88.76389ஆள்கூறுகள்: 27°22′31″N 88°45′50″E / 27.37528°N 88.76389°E / 27.37528; 88.76389
வடிநில நாடுகள்இந்தியா
சராசரி ஆழம்15 மீ (50 அடி)
கடல்மட்டத்திலிருந்து உயரம்3,780 மீ (12,400 அடி)
உறைவுகுளிர் காலம்
Reflection of snow covered mountains in Changu Lake.jpg

சாங்கு ஏரி, சங்கு ஏரி அல்லது சோங்கோ ஏரி என்பது இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள ஓர் ஏரி. இந்த ஏரி சிக்கிம் மாநிலத்தின் தலைநகரான கேங்டாக் நகரத்தில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் 3,780 மீட்டர் (12, 400 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. இந்திய சீன எல்லையில் உள்ள நாதூ லா கணவாய்க்கு செல்லும் சாலை இந்த ஏரியின் வடக்குப் பகுதியில் செல்கிறது. காங்க்டாக் பகுதியிலிருந்து சாங்கு ஏரி மிகவும் பிரம்மாண்டமான நிலப்பரப்புகளில் ஒன்றாகும். இந்த ஏரியின் நினைவாக 2006 நவம்பர் ஆறாம் தேதி இந்திய அஞ்சல் துறை அஞ்சல்தலை ஒன்றும் வெளியிட்டுள்ளது.

இது கிழக்கு சிக்கிம் பகுதியில் உள்ள ஒரு குறிப்பிடத்தக்க சுற்றுலாத்தலம் ஆகும். இந்த நீள்வட்டவடிவ ஆழமான நீல ஏரியைப் புதிய பாபா மந்திர் செல்லும் வழியைக் கடந்து வந்த பின் அடையலாம். இங்கு யாக் எனப்படும் கவரிமா வலம் உண்டு. உணவு, குளிருக்கான ஆடைகள் வாடகைக்குத் தரும் சில கடைகளும் உள்ளன.

பகல் பொழுதில் மட்டுமே இங்கு சென்று இரசிக்க முடியும். சூரிய மறைவுக்கு முன்னரே திரும்பாவிடில் பனிப்பொழிவு உட்பட பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இந்த ஏரிக்கரையில் அமைந்துள்ள சிவாலயம் தன்னினிமை நிறைந்த அமைதியான சூழ்நிலை கொண்டது. [1]

புவியின் வடக்கு அரைக்கோளத்தில் இருந்து தெற்கே வலசை செல்லும் பறவைகளுக்கான முக்கியமான தங்குமிடமாகவும் இந்த ஏரி குறிப்பிடப்படுகிறது.

சிறப்புகள்[தொகு]

உள்ளூர் பெளத்தர்களாலும் இந்துக்களாலும் புனித ஏரியாக இந்த ஏரி மிகவும் மதிக்கப்படுகிறது. சுமார் 48 அடி உயரமும், 1 கிமீ நீளமும் கொண்டது. ஏரியைச் சுற்றியுள்ள மலைகளில் பனி உருகி நீர் உருவாவதால் வறட்சியில்லை. உண்மையில், சாங்கு ஏரி லுங்க்ட்சு சூ ஆற்றின் தோற்றப்பகுதியாகும். குளிர்காலத்தில் (ஏப்ரல் வரை) இந்த ஏரி நீல நிறத்துடன் முற்றிலும் உறைந்திருக்கும். வசந்த காலத்தின் துவக்கத்தில், இந்த ஏரி வனப்பகுதிகளின் பசுமையால் சூழப்பட்டிருக்கும். அங்கு பல நீர்வீழ்ச்சிகளையும் காணலாம்.

மேற்கோள்கள்[தொகு]

  1. கலைமகள்; நவம்பர் 2014; பக்கம் 10-12
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாங்கு_ஏரி&oldid=2559725" இருந்து மீள்விக்கப்பட்டது