காணும் பொங்கல்
காணும் பொங்கல் | |
---|---|
கடைபிடிப்போர் | தமிழர் |
முக்கியத்துவம் | தமிழர்களின், இயற்கைக்கு நன்றி. |
நாள் | தமிழ் நாட்காட்டி: தை 3 |
காணும் பொங்கல் என்பது பொங்கல் கொண்டாட்டங்களில் நான்காவது நாள் இடம்பெறும் விழா ஆகும். காணும் பொங்கலைக் கன்னிப் பொங்கல் அல்லது கணுப் பண்டிகை என்றும் அழைப்பர். இப்பண்டிகையின் நிகழ்வுகளில் உற்றார், உறவினர், நண்பர்களைக் காணுதல் மற்றும் பெரியோர் ஆசி பெறுதல் என்பன அடங்கும். பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், பட்டிமன்றம், உறி அடித்தல், வழுக்கு மரம் ஏறல் போன்ற வீர சாகசப் போட்டிகள் உட்படப் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெறும்.
இது பெண்களுக்கு முக்கியமான பண்டிகை ஆகும். பொங்கல் பானை வைக்கும்போது அதில் புது மஞ்சள்கொத்தினை கட்டி அதனை எடுத்து முதிய தீர்க்க சுமங்கலிகள் ஐவர் கையில் கொடுத்து ஆசி பெற்று அதனை கல்லில் இழைத்து பாதத்தில் முகத்தில் பூசிக்கொள்வார்கள்.[1][2][3]
கணுப்பிடி
[தொகு]கணுப்பிடி இந்நாளின் சிறப்பு. இது ஒருவகை நோன்பு. உடன்பிறந்த சகோதரர்களுக்காக பெண்கள் செய்யும் நோன்பு. உடன்பிறந்த சகோதரர்கள் நலமும் வளமுமாய் வாழ சகோதரிகள் பிரார்த்திப்பது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழகம் முழுவதும் களைக்கட்டும் காணும் பொங்கல் கொண்டாட்டம்..!". News18 Tamil. 2021-01-16. பார்க்கப்பட்ட நாள் 2020-01-17.
- ↑ "Kaanum Pongal 2020 ,Kaanum Pongal 2020 Date ,Karinaal or Thiruvalluvar Day 2020 Date". www.astroved.com. பார்க்கப்பட்ட நாள் 2020-01-17.
- ↑ "Thiruvalluvar Day - Kanum Pongal, Fourth Day of Pongal". www.pongalfestival.org. பார்க்கப்பட்ட நாள் 2020-01-17.