உள்ளடக்கத்துக்குச் செல்

ஆவணி மூலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆவணி மூலம் என்பது ஆவணி மாதத்து மூல நட்சத்திரத்திலே சிவபெருமானைப் போற்றி எடுக்கப்படும் விழாவாகும்.

ஆவணி மூல நாளிலே மதுரையில் கோயில் கொண்டிருக்கும் சொக்கநாதப் பெருமான் ஆடிய திருவிளையாடல் மக்களை மிகவும் கவர்வதாகும். செம்மனச் செல்விக்கான வரம்புப் பங்கினைத் தாம் அடைப்பதாக அவரிடம் பிட்டினைக் கூலியாகப் பெற்று, கூலிக்குரிய வேலையைச் செய்யாது நின்று சொக்கன் பிரம்படிபட்ட திருவிளையாடல் ஆவணி மூலத்திற்குரியது.

மதுரையிலே இவ்விழா விமரிசையாகக் கொண்டாடப்படும். பிட்டுத் திருவிழா என்றும் அங்கு இதனைக் கூறுவர். சுந்தரேசர் பொற்கூடையுடனும் பொன் மண்வெட்டியுடனும் இந்த விழா நாளில் வைகை ஆற்றிலிருந்து பக்தர் சூழ கோயிலுக்கு எழுந்தருளுவர்.

சிவபெருமான் மாணிக்கவாசகருக்காக நரிகளைப் பரிகளாக்கித் திருவிளையாடல் புரிந்ததும் இந்த ஆவணி மூல நட்சத்திரத்திலே ஆகும்.

மூல நட்சத்திரத்தின் அதி தேவதை நிருதி என்னும் அசுரன் என்றும் அதனால் அசுர சக்தியின் செல்வாக்கினை சொக்கனின் மேல் ஏற்படும் பக்தி உணர்ச்சியின் மூலம் ஒழிக்க வேண்டும் என்று சைவர்கள் கருதுவர். தெய்வ பக்தியை வற்புறுத்துவதாகத் திருவிளையாடல் அமைதல் குறிப்பிடத்தக்கது.

இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]


வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆவணி_மூலம்&oldid=1832454" இலிருந்து மீள்விக்கப்பட்டது