பங்குனித் திங்கள்
Jump to navigation
Jump to search
பங்குனித் திங்கள் விரதம் பெண்களால் கடைப்பிடிக்கப்படுவது வழக்கம். இந்நாளில் அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபடுவர். சிறப்பாகக் கண்ணகை அம்மன் ஆலயங்களில் பங்குனித் திங்களில் பொங்கல் வழிபாடு நடைபெறுவது வழக்கம்.
பெண்கள் அன்று நோன்பிருந்து அபிராமி அந்தாதி முதலிய பக்திப் பாடல்களை படித்து மறுநாள் உதயத்திற்கு முன் பராயணம் செய்வர். இப்படிச் செய்வதால் சகல சம்பத்தும் பெற்று வாழ்வர்.
உசாத்துணைகள்[தொகு]
- விரத விதிகள் - திருக்கேதீச்சரத் திருக்கோயில் மகாசிவராத்திரி மட பரிபாலன சபை, மன்னார். இலங்கை
---