பட்டிமன்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழர் சிந்தனை கலை வெளிபாட்டு வடிவங்களில் சிறப்பான ஒரு வடிவம் பட்டிமன்றம் ஆகும். முரண்பாடான பலநோக்கங்ளை உடைய கருத்துக்களை விபரிக்க, விவாதிக்க, பரப்புரைக்க பட்டிமன்றங்கள் உதவுகின்றன. வன்முறையற்ற, பண்பட்ட முறையில், கருத்துக்களையும் பேச்சுத் திறனையும் முன்வைத்து, சிக்கலான பிரச்சினைகளை அலச பட்டிமன்றங்கள் உதவுகின்றன.

பொதுவாக ஆங்கில அல்லது மேற்கத்தைய விவாதங்களின் போது ஒரு விடயத்தை இரு துருவங்களில் இருந்தே வாதிப்பர். அதாவது சார்பு, எதிர்ப்பு. தமிழ்ப்பட்டிமன்றங்களில் மும்முனை அல்லது பல்முனை விவாதங்கள் வழக்கமாக அமைகின்றன.

தமிழ்த் தொலைக்காட்சியில் பட்டிமன்றங்கள்[தொகு]

புத்தாண்டு, பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை நாட்களில் சிறப்பு நிகழ்ச்சியாக தமிழ்த் தொலைக்காட்சிகளில் பட்டிமன்ற நிகழ்வுகள் இடம் பெறுகின்றன. இப்பட்டிமன்றங்கள் பண்டிகை நாட்களுக்கு சில நாட்களுக்கு முன்பு நடத்தப் பெற்று, ஒளிப்பதிவு செய்யப்பட்டு பண்டிகை நாட்களில் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.

கீழே குறிப்பிட்ட பட்டிமன்றப் பேச்சாளர்கள் தலைமையிலான பட்டிமன்றங்கள் தமிழ்த் தொலைக்காட்சிகளில் அதிகமாக இடம் பெறுகின்றனர்.

மேற்கோள்கள்[தொகு]

பட்டி என்றால் தமிழில் குரைப்பது என்று எடுத்துக்காட்டாக பட்டி என்றால், தமிழிலும் மலையாள மொழியிலும் நாய் அல்லது காலபைரவர் என்று பொருள். மன்றத்தில் ஒருவரின்கருத்தை எதிரணியினர் எதிர்ப்பதும்

எள்ளிநகையாடுவதும் இறுதியில் நடுவர் இருவரது் கருத்துக்களையும் அலசி ஆராய்ந்து அதிலும் நகைச்சுவை சொட்டசொட்ட தீர்ப்ப வழங்குவது பட்டிமன்றம் என வழங்கப்படும் இரு அணியினரின் தமிழ் மொழி நகைச்சுவையுடனும் குறைகாணும் வழிமுறகள் கலைநயம் மிக்கதாக இருக்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்டிமன்றம்&oldid=3772712" இலிருந்து மீள்விக்கப்பட்டது