இராம ஜென்ம பூமி சமசரக் குழு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இராம ஜென்ம பூமி சமசரக் குழு, இந்திய உச்சநீதிமன்றம் 8 மார்ச் 2019 அன்று ராம ஜென்ம பூமி குறித்த பிணக்குகளை நீதிமன்றத்திற்கு வெளியே வைத்து சமரசம் செய்வதற்கு வசதியாக, மூன்று பேர் கொண்ட சமரசக் குழுவை 8 மார்ச் 2019 அன்று நியமித்துள்ளது. இச்சமரசக் குழுவின் தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதியரசர் பக்கீர் முகமது இப்ராகிம் கலிபுல்லா இருப்பர். இக்குழுவின் உறுப்பினர்களாக வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் சிறீராம் பஞ்சு ஆகியோர் இருப்பர்.

இச்சமரசக் குழு தனது சமரச நடவடிக்கைகளை பைசாபாத் மாவட்டத் தலைமையிடமான பைசாபாத் நகரத்தின் ஒரு இடத்தில் மேற்கொள்ள வேண்டும். சமரசம் தொடர்பான விடயங்களை எவ்வித ஊடகங்களும் வெளியிட நீதிமன்றம் தடைவித்துள்ளது. ராம ஜென்ம பூமி குறித்தான சமரசப் பேச்சு வார்த்தைகள் அறைக்குள் வைத்து பேசித் தீர்க்க வேண்டும். சமரசக் குழு எட்டு வாரங்களுக்குள் தங்கள் பரிந்துரைகளை அறிக்கையாக உச்சநீதிமன்றத்திற்கு சமப்ப்பிக்க வேண்டும்.[1][2][3]

இராம ஜென்ம பூமி - பாபர் மசூதி குறித்த தீர்ப்புகள்[தொகு]

அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பு[தொகு]

ராம ஜென்ம பூமிபாபர் மசூதி இடம் தொடர்பான பிணக்குகள் குறித்து 30 செப்டம்பர் 2010 இல் அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை மூன்று பகுதிகளாக பிரித்து, தற்போது குழந்தை பால ராமர் சிலை நிறுவப்பட்ட இடம் ஒரு பகுதியாகவும், சன்னி வக்ஃப்போர்டு அமைப்புக்கு மூன்றில் ஒரு பகுதி நிலத்தையும்[4], நிர்மோகி அக்காரா அமைப்புக்கு மீதி உள்ள நிலத்தையும் வழங்கி அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.[5]

உச்ச நீதிமன்ற தீர்ப்பு[தொகு]

27 ஜனவரி 2013-இல் இந்திய உச்ச நீதிமன்றம், சர்ச்சைக்குரிய பகுதிகளை ஏற்கனவே உள்ளது உள்ளபடி (status quo) மாநில அரசு நிர்வாகிக்க வேண்டும் என தீர்ப்பளித்தது. சர்ச்சைக்குரிய ராம ஜென்ம பூமி மற்றும் பாபர் மசூதி குறித்த அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பல வழக்குகள் நிலுவை உள்ளதால், உச்ச நீதிமன்றம் தனது இறுதித் தீர்ப்பைத் தள்ளி வைத்துள்ளது..[6] இந்நிலையில் 8 மார்ச் 2019 அன்று ராம ஜென்ம பூமி பிணக்குகள் குறித்து சமரசம் செய்து வைக்கும் முயற்சியில், உச்சநீதிமன்றம் முன்னாள் நீதியரசர் பக்கீர் முகமது இப்ராகிம் கலிபுல்லா தலைமையில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மற்றும் சிறீராம் பஞ்சு ஆகிய உறுப்பினர்கள் கொண்ட சமரசக் குழுவை நியமித்துள்ளது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. SC sends Ayodhya dispute for mediation in camera
  2. mediation for Ayodhya dispute
  3. அயோத்தி வழக்கில் நியமிக்கப்பட்ட மத்தியஸ்தர்கள்
  4. http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=40473 பரணிடப்பட்டது 2010-10-02 at the வந்தவழி இயந்திரம் நக்கீரன் இதழ்
  5. "Disputed Ayodhya site to be divided into 3 parts- TIMESNOW.tv – Latest Breaking News, Big News Stories, News Videos". Timesnow.Tv. Archived from the original on 11 மார்ச் 2012. பார்க்கப்பட்ட நாள் 6 March 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. "SC reiterates status quo on Ayodhya's Ram Janmabhoomi-Babri Masjid site". பார்க்கப்பட்ட நாள் 10 Oct 2013.

வெளி இணைப்புகள்[தொகு]