எண் சோதிடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Pietro Bongo, Numerorum mysteria, 1591

எண் சோதிடம் (Numerology) என்பது எண்களுக்கும் வாழ்வின் நிகழ்வுகளுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறி, அதன் அடிப்படையில் வருங்காலத்தைக் கணிக்கும் சோதிடம் ஆகும்.[1] எண் சோதிடம் தற்கால அறிவியலாளர்களால் போலி அறிவியல் எனக் கருதப்படுகிறது[2]

எண் சோதிடமாகப் பயன்படுத்தாமல் எண்ணுருக்களைக் கொண்டு ஆயும் இடங்களிலும் இந்தப் பதம் பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக 1997 ஆம் ஆண்டில் அண்டர்வுட் டட்லி எனும் கணித அறிஞர் தான் எழுதிய எண்கணிதப் புத்தகத்தில் பங்குச் சந்தை ஆய்வுக்கு எலியட் அலைக் கோட்பாட்டைப் பயன்படுத்தியவர்கள் குறித்து விவாதிக்க இப்பதத்தைப் பயன்படுத்துகிறார்.

வரலாறு[தொகு]

நவீன எண்கணிதம் பழமையான கலாச்சாரத்தில் இருந்தும் மற்றும் பாபிலோனியா மற்றும் பித்தாகரஸ் போன்ற பழைய ஆசிரியர்களிடம் இருந்துமான அம்சங்களைக் கொண்டிருக்கிறது. பித்தாகரஸ் மற்றும் தத்துவ அறிஞர்கள் கணிதக் கோட்பாடுகள் இயற்பியல் கோட்பாடுகளை விட எளிமையாகவும் மற்றும் நடைமுறைக்கு உகந்ததாகவும் இருந்ததாகக் கருதினார்கள்.

”உண்மையை உறுதிப்படுத்தும் விதமாக தெய்வத்தால் மனிதர்களுக்கு வழங்கப்பட்ட உலகளாவிய மொழியே எண்கள்” என்று ஹிப்போவின் அகஸ்டீன் (கிபி 354-430) எழுதினார். பித்தாகரஸ் போல ஹிப்போவும் ஒவ்வொரு விடயத்திற்கும் எண் கணித தொடர்பு உள்ளது என நம்பினார். விடயத்தை ஆராய்ந்து எண் கணிதத் தொடர்பை காண்பது என்பது நம் மனதைப் பொறுத்த விடயம் என்றும் அல்லது தெய்வ அருளால் எண் கணித தொடர்பை அறிய முடியும் என்றும் அவர் கருதினார்.

கிபி 325 ஆம் ஆண்டில் நிகாவின் முதல் குழு கூடியதைத் தொடர்ந்து தேவாலய குழுவின் நம்பிக்கைக் கொள்கைகளில் இருந்து பிறழ்பவர்கள் உரோமைப் பேரரசுக்கு எதிரானவர்களாகக் கருதப்பட்டார்கள். எண் கணிதம் கிருத்தவ சமுதாயத்தின் ஆதரவைப் பெறத் தவறியது. மதம் சார்ந்த முடிவு இவ்வாறு இருந்த போதிலும் புனித எண்கள் எனும் கருத்து மறையவில்லை. பல எண்கள் குறிப்பாக "இயேசு எண்" என்பது பற்றி காசாவின் டொரதஸ் ஆராய்ந்தார்.[3][4]

1658 ஆம் ஆண்டு காலத்தைய தோமஸ் பிரோவ்னின் "சைரசின் தோட்டம்" (The Garden of Cyrus) என்னும் விளக்கவுரையில் எண் சோதிடம் தான் பிரதானமாக நிறைந்திருந்தது. ஐந்து என்கிற எண் மற்றும் அது தொடர்பான வடிவப் பாங்கினை கலை, வடிவமைப்பு மற்றும் இயற்கையில், குறிப்பாக தாவரவியலில், காணத்தக்கதாய் இருப்பதை பிதாகரஸின் எண்கணிதத்தைக் கொண்டு அவர் விளக்குகிறார்.

நவீன எண் சோதிடம் பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது. 18 ஆம் நூற்றாண்டு ஆண்டு முடிந்து 19 ஆம் நூற்றாண்டு துவங்கும் சமயத்தில் திருமதி. எல். டொவ் பலியெட் பித்தாகரஸ் எழுத்துகளை ஆதார குறிப்புகளுடன் தொகுத்ததாக ரூத் எ. டிரேயர் தனது "எண் சோதிடம், எண்களில் வல்லமை" (Numerology, The Power in Numbers) எனும் புத்தகத்தில் குறிப்பிடுகிறார். அதன் பிறகு அக்டோபர் 23, 1972 அன்று பல்லியட்டின் மாணவரான ஜுனோ ஜோர்டான் எண் கணிதத்தை மேலும் மாற்றி, இன்று புழக்கத்தில் இருக்கும் எண் கணிதமாக பித்தகோரியன் எனும் தலைப்பு கொடுத்து மாற்றினார்.

முறைகள்[தொகு]

எண்களைப் பற்றி வரையறுப்பு விளக்கம்[தொகு]

குறிப்பிட்ட தசம எண்களுக்கு திட்டவட்டமான வரையறுப்பு விளக்கம் இல்லை. என்றாலும் பொதுவான உதாரணங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன:[5]

 1. தனியாள், மூர்க்கமானவர்
 2. சமநிலை, இணைவு, செவிமடுக்கும் தன்மை
 3. பரிவர்த்தனை/பரிமாற்றம், நடுநிலை
 4. உருவாக்கம்
 5. இயக்கம், அமைதியின்மை
 6. எதிர்வினை, பொறுப்பு
 7. சிந்தனை/விழிப்பு
 8. சக்தி/தியாகம்
 9. மாற்றத்தின் உச்சம்
 10. மறு பிறப்பு

எழுத்துக்கள் முறை[தொகு]

அடிப்படை எபிரேய, கிரேக்க ஜெமாட்ரியா அட்டவணை

பல எண் கணித முறைகள் எழுத்துகளுக்கு மாறுபட்ட மதிப்பு முறைகள் கொண்டுள்ளன. யூத முறைப்படி வார்த்தைகளுக்கு எண்மதிப்பு அளிக்கும் முறை ஜெமாட்ரியா என்று அழைக்கப்படுகிறது.

எடுத்துக்காட்டாக, பின்வருமாறு எழுத்துக்கள் எண்களுக்கு வழங்கப்பட்டுள்ளன:

 • 1 = a, j, s
 • 2 = b, k, t,
 • 3 = c, l, u,
 • 4 = d, m, v,
 • 5 = e, n, w,
 • 6 = f, o, x,
 • 7 = g, p, y,
 • 8 = h, q, z,
 • 9 = i, r,

எடுத்துகாட்டுகள்:

 • 3,489 → 3 + 4 + 8 + 9 = 24 → 2 + 4 = 6
 • Hello → 8 + 5 + 3 + 3 + 6 = 25 → 2 + 5 = 7

விரைவான முறையில் இந்தக் கூட்டுத் தொகைக்கு வர 9 என்கிற எண்ணின் இடத்தில் நாம் 0 கொண்டு பதிலீடு செய்யலாம்.

சால்டியன், பிதாகோரியன், கிப்ரைக் , கெலன் கிட்காக் முறை, ஒலியியல், ஜப்பானிய முறை, அரபி முறை மற்றும் இந்திய முறை ஆகியவை மற்ற எண்சோதிட முறைகளாகும்.

மேல் சொன்ன உதாரணங்கள் பத்தை அடிப்படையாகக் கொண்ட தசம முறையில் கணக்கிடப்படுகிறது. இரும, அட்ட, ஈரட்ட தசம அடிப்படைகளைக் கொண்ட எண் சோதிட முறைகளும் உள்ளன.

மேற்குறிப்பிட்ட எண்ணை அட்ட முறைப்படி கூட்டும் போது கீழ்க்கண்ட மதிப்பைத் தருகிறது.

 • 3,48910 = 66418 → 6 + 6 + 4 + 1 = 218 → 2 + 1 = 38 = 310

பிதகோரிய முறை[தொகு]

ஒரு சில எண் சோதிட கணிப்புகளின்படி ஆராயும் போது, ஒரு நபரின் பெயரும் பிறந்த தேதியும் அவர்களின் குணங்களை அறிந்து கொள்ள உதவுகிறது. எந்த வகையான பிதாகரசின் எண் கணித முறையைப் பின்பற்றுகிறார்கள் என்பதைப் பொருத்து கணிப்பு மாறும்.[6][7]

சீன எண்கணிதம்[தொகு]

சில சீனர்கள் வெவ்வேறு வகையான அர்த்தங்களை எண்களுக்கு வழங்குகின்றனர் மற்றும் ஒரு சில குறிப்பிட்ட எண்களின் சேர்க்கையை அவர்கள் நன்மை எனக் கருதுகின்றனர். பொதுவாக இரட்டை எண்கள் நன்மை என கருதப்படுகின்றது ஏனென்றால் நல்ல நன்மை சோடிகளின் மூலம் வருகின்றது என அவர்கள் நம்புகின்றனர்.

சீன எண்களின் விளக்கங்கள்[தொகு]

சீன வகையிலான பொதுவான வரையறுப்பு கீழே வழங்கப்பட்டுள்ளது. பிற சீன மொழிகளில் இது வேறுபடலாம்.

 1. -(யட்) — நிச்சயம்
 2. =(யீ) — எளிமையான
 3. (சாம்) — உயிரான (/சாங் )
 4. (சீ) - நன்மையற்றதாகக் கருதப்படுகின்றது. ஏனெனில் 4 என்பது சாவு அல்லது துன்பம் என்கிற வார்த்தையின் அதே எழுத்து மற்றும் உச்சரிப்பு தொனியைக் கொண்டுள்ளது.
 5. (ங்) — தனது, தனக்கு, நானே (/என்ஜி) ஒன்றுமில்லை, எப்பொழுதும் இல்லை. (/என்ஜி, எம்)
 6. (லுக்) -முழுதும் எளிமையாகவும் மற்றும் தொய்வின்றியும்
 7. (சாட்) - ஒரு நாகரிகமற்ற வார்த்தை
 8. (பாட்)- திடீர் நன்மை, வளமை
 9. (கௌவ்) நெடிய காலம்

நன்மையான எண் இணைகளாகக் கூறப்படும் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 • 99 — இரண்டு மடங்கு ஆயுள் அதிகம் உள்ளது. ஆகையால் நிரந்தரமானது; புகழ் பெற்ற சீன-அமெரிக்க பல்பொருள் அங்காடியான 99 ராஞ்ச் சந்தையின் பெயரில் இடம்பெற்றுள்ளது.
 • 168 - செல்வ செழிப்பைக் குறிக்கும் எண். செல்வத்தைத் தக்கவைக்கும். சீனாவில் உள்ள மதிப்புகூடிய தொலைபேசி எண்களில் பலவும் இந்த எண்ணில் தொடங்குகிறது. சீனாவில் உள்ள ஒரு விடுதிச் சங்கிலி இந்த எண்ணின் பெயரில் அமைந்துள்ளது.
 • 518 - செல்வம் பெறுவேன்; இதில் சில நீட்சிகளும் உண்டு: 5189 (நெடுங்காலத்துக்கு செல்வம் கொழிக்கும்), 516289 (நெடுங்காலத்துக்கு தங்கு தடங்கலின்றி செல்வம் கொழிக்கும்) மற்றும் 5918 (வெகுசீக்கிரம் செல்வம் கொழிக்கும்).
 • 814 – 168 போன்று இந்த எண்ணுக்கு அர்த்தம் "வாழ்க்கை முழுவதும் செல்வச் செழிப்போடு" என்பதாகும். 148 என்ற மற்றொரு எண்ணும் "வாழ்க்கை முழுதும் செல்வ செழிப்போடு இருப்பதை"க் குறிக்கிறது.
 • 888 - மூன்று மடங்கு செல்வம் என்பது இதன் பொருள்.
 • 1314 — முழு வாழ்க்கை காலத்தையும் பெற்றிருத்தல்.
 • 289 - எளிதாக நன்மையைக் கண்டறியலாம், அது வெகுகாலம் தங்கியிருக்கும். (2 என்பது எளிதாக கிடைப்பதைக் குறிக்கும், 8 என்பது அதிர்ஷ்டத்தைக் குறிக்கும், 9 என்பது நெடுங்காலத்தைக் குறிக்கும்).

பிற துறைத் தொடர்பு[தொகு]

எண் கணிதமும் சோதிடமும்[தொகு]

0 முதல் 9 வரை ஒவ்வொரு எண்ணும் சூரிய குடும்பத்தில் உள்ள ஒரு அங்கத்தால் ஆளப்படுகின்றது என்று சில சோதிடர்கள் நம்புகிறார்கள்.

எண் கணிதமும் இரசவாதமும்[தொகு]

பல இரசவாதத் தத்துவங்கள் எண் கணிதத்தோடு நெருங்கிய தொடர்பு கொண்டவை. இன்றும் பயன்படுத்தப்படுகிற பல வேதிமுறைகளைக் கண்டுபிடித்தவரான ஜபீர் இபின் ஹயன் என்னும் பெர்சிய இரசவாத அறிஞர் தன்னுடைய பரிசோதனைகளை அரபி மொழிப் பெயர்களின் அடிப்படையிலான ஒரு விரிவான எண் கணிதக் கட்டமைப்புக்குள் கொணர்ந்தார்.

அறிவியலில் எண்கணிதம்[தொகு]

அறிவியல் கவனிப்புகளை விட எண் அமைவு முறைகளை தங்களது அடிப்படையாகக் கொள்ளும் சில அறிவியல் தத்துவங்களும் "எண் கணிதம்" என அழைக்கப்படுகின்றன. சந்தேகத்திற்குரியதான அறிவியல் என்று கூறி ஒரு தத்துவத்தை நிராகரிக்கும் சமயத்தில், அறிவியல் அறிஞர்கள் தங்களது பேச்சு வழக்கில் இந்த வார்த்தையைப் பெருவாரியாகப் பயன்படுத்துகின்றனர்.

அறிவியலின் மிகப் பெரும் சில பேரெண்கள் தற்செயலாய் ஒத்தமைந்திருப்பது இயற்பியல் அறிஞர் பால் டிராக், கணித அறிஞர் ஹெர்மேன் வேய்ல் மற்றும் வானவியல் அறிஞர் ஆர்தர் ஸ்டான்லி எடிங்டன் போன்ற புகழ்மிகு அறிவியலாளர்களையே குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது. விஞ்ஞானத்தில் எண்கணிதத்தின் பாதிப்பிற்கு இது ஒரு சிறந்த உதாரணம். பிரபஞ்சத்தின் வயதுக்கும் காலத்தின் அணு அலகுக்கும் இடையிலான விகிதம், பிரபஞ்சத்தில் இருக்கும் எலெக்ட்ரான்களின் எண்ணிக்கை போன்ற பேரெண்களே அவர்களை இத்தகைய குழப்பத்தில் ஆழ்த்தியது.[8][9] 137 உள்ளிட்ட சில குறிப்பிட்ட எண்கள் இயற்பியலில் எட்டியிருக்கும் இடத்தைக் கண்டு வூல்ஃப்கேங் பவுலியும் ஆச்சரியமுற்றார்.[10]

வெகுசனக் கலாச்சாரம்[தொகு]

கற்பனைக் கதைகளில் எண்கணிதம் முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறது. ஜிம் கேரி நடித்த த நம்பர் 23 என்னும் திரைப்படம் 23 என்ற எண்ணின் மர்மத்தை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டிருந்தது.

குறிப்புகள்[தொகு]

 1. "The Skeptic's Dictionary: numerology". Skepdic.com. 2012-08-31 அன்று பார்க்கப்பட்டது.
 2. Webb, John (2001). "Feminist Numerology". Science in Africa. 28 டிசம்பர் 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 27 May 2013 அன்று பார்க்கப்பட்டது.
 3. "Η Ελληνική γλώσσα, ο Πλάτων, ο Αριστοτέλης και η Ορθοδοξία" (Greek). Acrobase.gr. 2012-08-31 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: Unrecognized language (link)
 4. "Αγαπητέ Πέτρο, Χρόνια Πολλά και ευλογημένα από Τον Κύριο Ημών Ιησού Χριστό" (Greek). Users.otenet.gr. 2009-02-11 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-08-31 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: Unrecognized language (link)
 5. ஒப்பீடு எண் கணிதம்: எண் ஒன்றிலிருந்து பத்து வரை அடிப்படைவைகளாக கொண்டவை
 6. [1]
 7. [2][தொடர்பிழந்த இணைப்பு]
 8. "கொலோரோடோ பல்கலைகழகம்" (PDF). 2012-07-16 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2009-07-14 அன்று பார்க்கப்பட்டது.
 9. fine-structure- constant.org
 10. ic-numbers-pauli-and-jungs-love-of-numerology.html

புற இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Numerology
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எண்_சோதிடம்&oldid=3545687" இருந்து மீள்விக்கப்பட்டது