உள்ளடக்கத்துக்குச் செல்

கபோய்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கபோய்ரா
Capoeira
கபோய்ரா சின்னம்
1825ம் ஆண்டு கபோய்ரா ஓவியம்
நோக்கம்உதைத்தல், குத்துதல், அறைதல், காலை வீசியடித்தல், முழங்கை/முழங்கால் தாக்குதல், கீழே வீழ்த்துதல்
தோன்றிய நாடுபிரேசில் பிரேசில்
ஒலிம்பிய
விளையாட்டு
இல்லை
Official websitehttp://www.capoeirabrasil.com/

கபோய்ரா என்பது நடனமும் இசையும் சேர்ந்த ஒரு பிரேசிலிய சண்டைக் கலையாகும். ஏறக்குறைய 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பிரேசிலிய சுதேச மக்கள் மற்றும் ஆபிரிக்காவிலிருந்து கொண்டு வரப்பட்ட அடிமை மக்களின் வாரிசுகளால் கபோய்ரா உருவாக்கப்பட்டது. விரைவு, சிக்கலான நகர்வு என்பவற்றால் இது பிரபல்யம் மிக்கது. காலை வீசியடிக்க பாவிக்கப்படும் நெம்பு கோல் செயற்பாட்டிற்காக சக்தியும் வேகமும் பாவிக்கப்படுகிறது.

கபோய்ரா எனும் சொல் பிரேசிலில் உள்ள டுபி எனும் மொழியிலிருந்து உருவாகியது.

வரலாறு[தொகு]

கபோய்ரா வரலாறு பிரேசிலுக்குள் ஆபிரிக்க அடிமைகள் உள்வாங்கலுடன் உருவாகியது. 16ம் நூற்றாண்டிலிருந்து போர்த்துக்கல் தன் காலணித்துவ நாடுகளுக்கு ஆபிரிக்காவிலிருந்து அடிமைகளை அனுப்பியது. 38.5 வீதமான அடிமைகள் பிரேசிலுக்கு அனுப்பப்பட்டனர்.

கபோய்ரா நீண்ட வரலாற்றைக் கொண்டது. ஆனாலும் இதன் ஆரம்பம், இடம், முறை பற்றிய விடயத்தில் குழப்பம் நிலவுகிறது.

மூலம்[தொகு]

Mestre Bimba group, 2022

ஆபிரிக்க அடிமைகள் மனித நேயமற்ற முறையில் நடத்தப்பட்டனர். ஆபிரிக்க அடிமைகளை எண்ணிக்கை போர்த்துக்கேயரைவிட அதிகமாக இருந்தாலும் ஆயுதங்களின் குறைவு, காலணித்துவ சட்டம், வேறுபட்ட ஆபிரிக்க கலாச்சாரங்கள் மற்றும் புதிய இடம் பற்றிய போதிய அறிவின்மை போன்ற காரணங்கள் புரட்சிக்கு அனுகூலமாக அமையவில்லை.

இக்காலகட்டத்தில்தான் கபோய்ரா உருவாக ஆரம்பித்தது. இது ஒரு சண்டை முறை என்பதைவிட உயிர்வாழ்வதற்கான நம்பிக்கையாக உருவாக்கப்பட்டது. எதுவித கருவிகளும் அற்று, தெரியாத இடத்தில் பிழைக்கவும், ஆயுதம் தரித்த காலணித்துவ முகவர்களின் தாக்குதல்களுக்குத் தப்பவும், தப்பித்த ஓர் அடிமையின் கருவியே இந்த கபோய்ரா.

குயிலோம்பஸ் (மறைந்த வாழ்க்கை வாழ்ந்தவர்கள்)[தொகு]

ஆபிரிக்க அடிமைகளும் சில காலணித்துவத்தை வெறுத்தவர்களும் (சுதேசிகளும், சிறுபான்மையினரும், ஐரோப்பியர்களும்) இலகுவில் அடைய முடியாத உயரமான இடங்களில் தஞ்சம் புகுந்தனர். அங்கிருந்த பல இனத்தவ சமூகத்தவர்களும் தொடர்ச்சியாக காலணித்துவ படைகளின் நெருக்குதலுக்கு உள்ளாயினர். இதிலிருந்து தப்பிப் பிழைக்க உதவிய கபோய்ரா போருக்கான ஒரு சண்டைக் கலையாகியது. மறைந்த வாழ்க்கை வாழ்ந்த குயிலோம்பஸ் 24 சிறு தாக்குதல்களையும், 18 பெரும் தாக்குதல்களையும் எதிர்த்தனர். நூதனமான நகர்வு சண்டை நுட்பத்தைக் கொண்டு தங்களைப் பாதுகாத்த குயிலோம்பஸ் வீரனைப் பிடிப்பது ஒரு குதிரை வீரனைப் பிடிப்பதிலும் கடினம் என போர்த்துக்கல் வீரர்கள் கூறினர். நெதர்லாந்து ஆக்கிரமிப்பாளர்களை தோற்கடிப்பதிலும் பார்க்க குயிலோம்பஸ்களை தோற்கடிப்பது கடினம் என மாகாண ஆளுனர் அறிவித்தார்.[1]

சண்டைக் கலை[தொகு]

கிங்கா - முன்னும் பின்னும் நகரும் நகர்வு

கிங்கா என்று அழைக்கப்படும் முன்னும் பின்னும் நகரும் நகர்வானது கபோய்ராவின் அடிப்படை நகர்வாகும். இது பாதுகாப்பு மற்றும் தாக்கம் நோக்கம் கொண்டது. இது இரண்டு காரணங்களைக் கொண்டது. ஒன்று நிலையான இயக்கத்தில் வைத்திருந்து, இலகு இலக்காக எதிராளியிடமிருந்து தப்புவிப்பது. மற்றது திறந்த பதில் தாக்குதலை தவிர்த்தல், ஏமாற்றுதல் போன்ற காரணங்களாகும்.

சந்தர்ப்பம் அதிகரிக்கும் போது முகத்தில் தாக்குதல், நரம்பு மையங்களை தாக்குதல் அல்லது பலமாக வீழ்த்துதல் என்பன கபோய்ரா தாக்குதல்களாகும். அதிகமான தாக்குதல்கள் கால்கள் மூலமாகவே மேற்கொள்ளப்படுகின்றன. தலை தாக்குதலில் பதில் தாக்குதலில் நகர்வு மிக முக்கியமானது. முழங்கை தாக்குதல், குத்துகள் என்பனவும் பிரதானமானவை.

தடை ஏற்படுத்தாத கொள்கை பாதுகாப்பில் அடிப்படை. இதன் அர்த்தம் தாக்குதலை தடுக்காது நகர்வுகள் மூலம் தவிர்த்தல் ஆகும். தாக்குதலை தவிர்க்க இயலாதபோது தடுக்கலாம். விரைவான, ஊகிக்க முடியாத பதில் தாக்குதல், ஒன்றுக்கு மேற்பட்டவரை எதிர் கொள்ளும் திறன் மற்றும் வெற்றுக் கையுடன் ஆயுதமுள்ளவரை எதிர்த்தல் என்பனவற்றை வீரனின் தந்திரோபாயம் அனுமதிக்கிறது.

கபோய்ரா விளையாட்டு[தொகு]

கபோய்ரா ஆரம்பித்தலுக்கு முன் கைகுலுக்கிக் கொள்ளுதல்

கபோய்ரா விளையாட்டானது விளையாட்டாகவும், கபோய்ரா பயிற்சியாகவும் செய்யப்படுகையில் போலியான சண்டையாகவே இருக்கும். மிக மூர்க்கமான விளையாட்டாக இல்லாதவிடத்து, முழங்கை தாக்குதல்கள் அல்லது குத்துக்கள் தவிர்க்கப்படுகிறது.

இசை[தொகு]

கபோய்ரா இசையுடன் இணைந்தது. இது சந்தம் மற்றும் கபோய்ரா விளையாட்டை இணைக்கிறது. இசையானது பாடலுடன் இசைக் கருவிகளின் இசையையும் சேர்த்தது. தாளம் பெரிம்பா எனும் தனிச் சிறப்புமிக்க இசைக் கருவியால் கட்டுப்படுத்தப்பட்டு, மிக மெதுவாகவோ அல்லது மிக வேகமாகவோ காணப்படும்

மேற்கோள்கள்[தொகு]

  1. GOMES, Flávio - Mocambos de Palmares; histórias e fontes (séculos XVI-XIX) (2010), Editora 7 Letras, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-85-7577-641-4 (in Portuguese)

அச்சடிக்கப்பட்ட மேற்கோள்கள்[தொகு]

மேலதிக வாசிப்பு[தொகு]

முக்கிய ஊடகங்களில்[தொகு]

கபோய்ரா சில முன்னோடி ஊடகங்களில் இடம்பிடித்துள்ளது.

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கபோய்ரா&oldid=3768845" இலிருந்து மீள்விக்கப்பட்டது