பேச்சு:தற்காப்புக் கலைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Wikipedia-logo-v2-bw.svg தற்காப்புக் கலைகள் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

போர்க் கலை என்பதைவிட சண்டைக் கலைகள் எனும் தலைப்பு மிக பொருத்தமாக இருப்பதாகத் தோன்றுகிறது. சண்டைக் கலை பயிலுபவர் போர் புரிவதில்லை. ஆனால் போர் புரிபவர் சண்டைக் கலை பயிலலாம். சண்டை விளையாட்டு (Combat sport) என்பது போல் சண்டைக் கலைகள் என தலைப்பை மாற்றலாமா? --Anton (பேச்சு) 01:53, 14 ஏப்ரல் 2012 (UTC)

Martial arts என்பது தற்காப்புக் கலை என விக்சனரி சொல்கிறது.--Kanags \உரையாடுக 02:06, 14 ஏப்ரல் 2012 (UTC)
சண்டைக் கலையின் ஒரு பகுதியாகத்தான் தற்காப்பு en:Self-defense இருக்க வேண்டும் என நினைக்கிறேன். சண்டைக் கலைகளில் ஒன்றான நிஞ்சா தற்காப்பு கலையாகத் தெரியவில்லை. --Anton (பேச்சு) 02:47, 14 ஏப்ரல் 2012 (UTC)
இதனையும் கவனிக்கவும் போர்க் கலை (நூல்) en:The Art of War --Anton (பேச்சு) 04:14, 14 ஏப்ரல் 2012 (UTC)

தற்காப்புக்கலையில் முடிந்தளவு தன்னைக் காத்துக் கொள்வதே நோக்கம். உதாரணம் ஜாக்கி சான். முடிந்தளவு ஓடித்தப்பித்து எஸ்ஸாகவே பார்பார். வேறு வழியே இல்லை என்றால் தான் சிங்கம் கல்ம் இறங்கும். போர்க்கலை என்பது புருசுலீ போல ஒரே அடியில் காலி செய்வது. ஹூஊஊஊஊஊஊஊஊஉவாஆஆஆஆ--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:00, 6 சூன் 2013 (UTC)

ஆன்டன்! உங்கள் நோக்கும் ஈர்ப்பாகத்தான் இருக்கிறது. அதனைக் கருதும் போது, பாதுகாப்புக் கலைகள் எனலாம். எனினும், தற்காப்புக் கலை என்ற சொல் பலராலும், பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. அவர்கள் அத்தகையைச் சொற்களால் தான் கூகுள் போன்ற கருவி மூலம் தேடும் போது, இக்கட்டுரை பலரை சென்றடைய வாய்ப்புண்டு என்றே எண்ணுகிறேன். எப்படி மாற்றலாம்?--≈ உழவன் ( கூறுக ) 03:13, 26 சூலை 2013 (UTC)

தற்காப்புக் கலைகள் எனலாமா? --Anton (பேச்சு) 03:37, 26 சூலை 2013 (UTC)