கவலை


கவலை (Sadness) என்பது தவறான கணிப்பால் ஏற்படுகின்ற ஒரு மன நோய். உறுதியின்மை அல்லது ஏதேனும் அபாயத்தைச் சந்திக்க நேரிடும்போது நாம் உணரும் ஒருவகை சாதாரண உணர்ச்சிதான் கவலை. இது குறைபாடு, இழப்பு, விரக்தி, துக்கம், உதவியற்ற தன்மை, ஏமாற்றம் மற்றும் துக்கம் போன்ற உணர்வுகளுடன் தொடர்புடையது அல்லது வகைப்படுத்தப்படுகிறது.[1]:271–4[2] வேதாத்திரி மகரிசி கவலை என்பதை ‘கற்பனையான வலை’ என்று குறிப்பிடுகிறார்.
கவலை அல்லது துயரம் என்பது இழப்பு, உதவியற்ற நிலை, பயனற்ற நிலை போன்ற உணர்ச்சிகளை வெளிக்காட்டும் ஒரு மன உணர்வாகும். இந்நிலையில் மனிதர்கள் பொதுவாக அமைதியாகவும், ஆற்றலற்ற நிலையிலும், ஏனையோரிடமிருந்து விலகியும் இருக்கத் தலைப்படுவர். அத்துடன் அழுகை மூலமும் அவர்களது இந்த மனநிலை வெளிக்காட்டப்படும்.
மனநிலை தற்காலிகமாக பாதிக்கப்பட்டிருப்பின் அது கவலை எனவும், தொடர்ந்த, ஆழமான மனநிலை பாதிப்பு இருப்பதுடன், தமது வழக்கமான செயல்களை செய்யும் திறனை இழந்தும் இருப்பின் அது மனச்சோர்வு எனவும் கருதப்படும்.
போல் எக்மான் வகுத்துள்ள ஆறு அடிப்படை உணர்ச்சிகளான மகிழ்ச்சி, கவலை, கோபம், ஆச்சரியம், பயம் மற்றும் அருவருப்பு ஆகியவற்றில் கவலையும் அடங்கும்.[3].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Goleman, Daniel (1996). Emotional Intelligence. London, United Kingdom: Bloomsbury. ISBN 978-0747528302.
- ↑ Jellesma, F.C.; Vingerhoets, Ad J.J.M. (1 January 2012). "Crying in Middle Childhood: A Report on Gender Differences". Sex Roles 67 (7): 412–21. doi:10.1007/s11199-012-0136-4. பப்மெட்:22962516.
- ↑ Daniel Goleman, Emotional Intelligence (London 1996) p. 271