வெட்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வெட்கம் (Shyness or diffidence) அல்லது வெட்கப்படுதல் என்பது ஒருவர் சாதாரணமாக இருக்க இயலாத சூழ்நிலையில் எவ்வாறு நடப்பார் என்ற உணர்வாகும். தனக்கு அறிமுகமில்லாத மனிதர்கள் நெருங்கும் போதோ, அல்லது தனக்கு சங்கோஜமளிக்கும் நிகழ்வுகளில் பங்கேற்கும் போதோ அசௌகரியமாக உணர்தலே வெட்கமாகும்.

வித்துக்கள்[தொகு]

ஒருவர் தன் மரபணுவின் தாக்கத்தாலோ அல்லது தனது இளமைகாலத்தில் கண்ட மற்றும் உட்படுத்தப்பட்ட நிகழ்வுகளினாலோ எந்த அளவிற்கு வெட்கப்படுவார் என்பது நிர்ணயமாகும். இது ஒரு மனநிலையாகவோ அல்லது வளரும் போது உண்டாகும் மாற்றங்களாகவோ பிள்ளைகளிடம் காண இயலும். பொதுவாகத் தான் செய்யும் செயலுக்கு எதிர்மறையான விமர்சனங்கள் வந்து விடுமோ, அல்லது தன் சமூகம் தன்னை ஏற்றுக்கொள்ளாதோ என்ற எண்ணம் தோன்றிவிட்டால் அச்செயல்களையும் அவ்வாறான சூழல்களையும் மனம் தவிர்க்கும் என்பது இயல்பே[1].

இருபாலருக்கும் பொருந்தும்[தொகு]

சமுதாய கட்டுப்பாடுகள் காரணமாகவும் வெட்கம் என்பது தோன்றும். எ-டு: பெண்மைக்கான இலக்கணத்தில் வெட்கம் என்பது இயல்பென உரைத்துள்ளனர். இது போல் போரில் புறமுதுகிட்டு ஓடிய ஆண்மகன் வெட்கித்தலை கவிழ வேண்டும் என்று புறப்பொருள் இலக்கணம் உரைக்கும்.

கலாச்சார கோட்பாடுகள்[தொகு]

ஒருவர் குழந்தையாக வாழும் சூழல் எவ்வாறான வெட்கம் பட வேண்டும் என்பதனை நிர்ணயிக்கிறது. உதாரணமாக அமைதியாக இருக்கும் அல்லது வெட்கப்படும் ஒருவர் சீனாவில் பாராட்டுக்குள்ளாகும் அதே வேளையில் அமெரிக்காவில் பயந்தாங்கொள்ளியாக விமர்சிக்கப்படுவார்[2].

உசாத்துணை[தொகு]

  1. Royal College of Psychiatrists.(2012). Shyness and social phobia. Retrieved from http://www.rcpsych.ac.uk/mentalhealthinfo/problems/anxietyphobias/shynessandsocialphobia.aspx
  2. Retrieved from Social Anxiety to Social Phobia: Multiple Perspectives, Stefan G. Hoffman (2001)
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெட்கம்&oldid=2918262" இருந்து மீள்விக்கப்பட்டது