தன்விழிப்புணர்வு
Appearance
தன்மெய்யியலில், தன்விழிப்புணர்வு அல்லது சுயவிழிப்புணர்வு (self-awareness) என்பது தனது சொந்த ஆளுமை அல்லது தனித்துவத்தின் அனுபவமாகும்.[1][2] இது தன்மையங்கள் (qualia) என்று பொருள்படும் உணர்வுநிலையுடன் வேறுபடுத்திப் பார்க்கப்படவேண்டிய ஒன்றாகும். உணர்வுநிலை அல்லது நனவு என்பது தனது சூழல், உடல், வாழ்க்கை முறை ஆகியவை பற்றிய விழிப்புணர்வு எனப்படுகையில், தன்விழிப்புணர்வு என்பது அந்த விழிப்புணர்வை பற்றி அறிந்த நிலையாகும்.[3] தன்விழிப்புணர்வு என்பது ஒரு நபர் தனது சொந்த குணாதிசயங்கள், உணர்வுகள், நோக்கங்கள், ஆசைகள் ஆகியவற்றை எவ்வாறு நனவு ரீதியாக அறிந்தும் புரிந்தும் கொள்கிறார் என்பதைக் குறிக்கிறது. தன்விழிப்புணர்வில் இரண்டு பரந்த பிரிவுகள் உள்ளன: அக தன்விழிப்புணர்வு மற்றும் புற தன்விழிப்புணர்வு.[4]
இவற்றையும் பார்க்க
[தொகு]உசாத்துணை
[தொகு]- ↑ Google def: Self-awareness is the ability to focus on yourself and how your actions, thoughts, or emotions do or don't align with your internal standards. If you're highly self-aware, you can objectively evaluate yourself, manage your emotions, align your behavior with your values, and understand correctly how others perceive you.May 11, 2018
- ↑ "Self-awareness - Definition of Self-awareness by Merriam-Webster".
- ↑ Jabr, Ferris (2012). "Self-Awareness with a Simple Brain". Scientific American Mind 23 (5): 28–29. doi:10.1038/scientificamericanmind1112-28.
- ↑ "What Self-Awareness Really Is (and How to Cultivate It)". Harvard Business Review. 2018-01-04. https://hbr.org/2018/01/what-self-awareness-really-is-and-how-to-cultivate-it.