உணர்வுசார் நுண்ணறிவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உணர்வுசார் நுண்ணறிவு (ஆங்கிலம்: Emotional intelligence [EI], சுருக்கமாக ஈஐ) என்பது ஒருவர் தமது உணர்ச்சிகளையோ, அல்லது மற்றவர்கள் அல்லது குழுக்களின் உணர்ச்சிகளையோ அடையாளம் கண்டு, மதிப்பிடு செய்து அதைத் திறம்பட மேலாண்மை செய்யும் ஆற்றல், திறமை, திறன், அல்லது ஒரு ஈஐ பண்புத்திற உருப்படிவத்தில், ஆற்றல் பற்றிய சுய மதிப்பீடு ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது.[1] ஈஐ என்பதை விளக்குவதற்கு பல எடுத்துக்காட்டுகள் முன்வைக்கப் பட்டுள்ளன. ஆயினும், இச்சொல்லை எப்படி உபயோகிப்பது என்பதில் கருத்து வேறுபாடு நிலவுகிறது.[2] இவ்வாறு அறிவுசார் கருத்து வேறுபாடுகள் இருப்பினும், ஆற்றல் ஈஐ மற்றும் பண்புத்திறம் ஈஐ (கலப்படமான உருப்படிவங்கள் அல்ல) ஆகியவை ஆராய்ச்சி நூல்களின், பல துறைகளிலும் பல்வேறு வகைகளில் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்படுகின்றன.

கருத்துருவின் துவக்கங்கள்[தொகு]

உயிர் வாழ்தல் மற்றும் இரண்டாம் முறை மாற்றியமைத்துக் கொள்ளுதல் ஆகியவற்றில் உணர்வுசார் நுண்ணறிவு எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அறிய வேண்டுமெனில் டார்வின் எழுதிய நூலில்தான் உணர்வுசார் நுண்ணறிவின் ஆரம்ப வேர்களைத் தேடிச் செல்ல வேண்டும்.[3] 1900களில், நுண்ணறிவு என்பதன் பாராம்பரியமான வரையறைகள் நினைவாற்றல் மற்றும் பிரச்சினைகளைத் தீர்த்தல் ஆகிய புரிதிறன் தொடர்பான அம்சங்களை அழுத்தமாகக் கொண்டிருந்தாலும், இந்த நுண்ணறிவாற்றல் ஆய்வுத் துறையில் செல்வாக்கான ஆராய்ச்சியாளர்கள் பலர் புரிதிறன் அல்லாத அம்சங்களின் முக்கியத்துவத்தையும் அங்கீகரிக்கத் துவங்கி விட்டனர். உதாரணமாக, 1920களின் தொடக்கத்திலேயே ஈ.எல்.தோர்ண்டைக் மற்றவர்களைப் புரிந்து கொண்டு மேலாண்மை செய்யும் ஆற்றலைக் குறிப்பதற்காக சமூக நுண்ணறிவு என்ற சொல்லைப் பயன்படுத்தினார்.[4] இதைப் போலவே, 1940வது வருடம் டேவிட் வெல்ஷர் நுண்ணறிவு நடத்தையின் பேரில் அறிவுக்குத் தொடர்பில்லாத காரணிகள் செலுத்தும் ஆதிக்கத்தை விவரித்தார். மேலும், அவர் நாம் நுண்ணறிவாக கருதும் உருப்படிவங்கள் இந்தக் காரணிகளைக் கருத்தில் கொள்ளாது முழுமை அடையாது என்றும் வாதிட்டார்.[3] 1983வது வருடம் ஹொவர்ட் கார்ட்னர் எழுதிய மனதின் கட்டுமானங்கள்: பன்முக நுண்ணறிவு என்னும் கருத்தாக்கம், மனிதர்களில் ஒருவருக்கொருவாருடனான நுண்ணறிவு (interpersonal) (மற்றவர்களின் நோக்கம், தூண்டுதல்கள் மற்றும் விருப்பங்களை புரிந்து கொள்ளும் ஆற்றல்) மற்றும் சுய உள்நோக்கு நுண்ணறிவு (intrapersonal) (ஒருவர் தம்மைப் புரிந்து கொண்டு, தமது உணர்வுகள், அச்சங்கள் மற்றும் தூண்டுதல்கள் ஆகியவற்றையும் மதிப்பிடும் ஆற்றல்) ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருந்தது.[5] கார்ட்னரின் கருத்துப்படி, பாராம்பரியமாகக் கருதப்படும் ஐக்யூ போன்ற நுண்ணறிவு வகைகள் புரிதிறன் ஆற்றலை முழுவதுமாக விளக்கத் தவறிவிடுகின்றன.[6] இவ்வாறு, இந்தக் கருத்துக்குக் கொடுக்கப்பட்ட பெயர்கள் வேறு வேறாக இருந்தாலும், செயல் திறன் வெளிப்பாட்டை முழுவதுமாக விளக்குவதற்கான ஆற்றல் நுண்ணறிவின் பாராம்பரிய வரையறைகளுக்கு இல்லை என்ற பொதுவான நம்பிக்கை இருந்தது.

வேயின் பேகனரின் "உணர்வு பற்றிய ஒரு ஆய்வு: 1985யிலிருந்து உணர்வுசார் நுண்ணறிவின் உருவாக்கம்" என்னும் ஆராய்ச்சிக் கட்டுரையில்தான் உணர்வுசார் நுண்ணறிவு என்ற சொற்றொடர் முதன் முதலாக உருவாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.[7] இருப்பினும், இதற்கும் முன்னதாகவே, லியூனரில், "உணர்வுசார் நுண்ணறிவு" என்னும் சொல் தோன்றியுள்ளது. க்ரீன்ஸ்பேன் (1989) கூட ஒரு ஈஐ உருப்படிவத்தை முன்வைத்தார். இவரை சால்வொயி மற்றும் மேயர் (1990) மற்றும் கோல்மேன் (1995) ஆகியோரும் பின் தொடர்ந்தனர். உணர்வுசார் நுண்ணறிவு பண்புத் திறம் மற்றும் உணர்வுசார் நுண்ணறிவு ஆற்றல் ஆகியவற்றிற்கு இடையிலான வேறுபாடு 2000வது வருடம் அறிமுகப்படுத்தப்பட்டது.[8] பணியின் வெளிப்பாடுகளில்[9] உணர்வுகளுக்கு இருக்கும் தொடர்பு மற்றும் முக்கியத்துவம் பற்றிய ஒப்புதலானது தொழில்முறையாளர்களிடம் வளர்ந்து வருவதன் விளைவாக, இந்த ஆய்வுக் கருத்தாக்கம் மேலும் உந்துதல் பெறலானது; இருப்பினும், டேனியல் கோல்மேன் எழுதிய, மிகவும் அதிக அளவில் விற்பனையான, "உணர்வுசார் நுண்ணறிவு" ஏன் இது ஐக்யூவை விட மேலாகக் கருதப்படுகிறது" என்னும் புத்தகம் வெளியானபோதுதான் இந்தச் சொற்றொடர் பரவலாகப் பிரபலம் அடைந்தது.[10] 1995வது வருடம் நான்சி கிப்ஸ்' டைம் பத்திரிகையில் எழுதிய கட்டுரை கோல்மேனின் புத்தகத்தை சிறப்புப் பகுதியாக வெளியிட்டது. ஜனரஞ்சகமான ஊடகம் ஈஐயில் ஆர்வம் கொள்ளத் தொடங்கியது இதற்குப் பிறகுதான்.

உணர்வுசார் நுண்ணறிவை வரையறுத்தல்[தொகு]

ஈஐ என்பதை வரையறுப்பதில் மிக அதிக அளவில் கருத்து வேறுபாடு நிலவுகிறது. இது துறைச்சொல் மற்றும் அந்தக் கருத்தைச் செயல்படுத்துதல் ஆகிய இரண்டைப் பொறுத்தும் உள்ளது. இந்த கருத்தாக்கத்தின் சரியான பொருள் என்ன என்பதைப் பற்றி மிக அதிகமான அளவில் குழப்பம் நிலவுகிறது. இதற்கான வரையறைகளும் வேறுபடுகின்றன. இந்தக் களம் மிகவும் வேகமாக வளர்ச்சி பெற்று வருவதால், ஆய்வாளர்கள் தாங்கள் வகுத்த வரையறைகளைத் தாங்களே திருத்தி வருகின்றனர். தற்போது ஈஐ என்பதற்கு பிரதானமாக மூன்று உருப்படிவங்கள் உள்ளன:

 • ஆற்றல் ஈஐ உருப்படிவங்கள்.
 • ஈஐயின் கலவையான உருப்படிவங்கள்.
 • ஈஐ பண்புத் திறம் உருப்படிவங்கள்.

ஆற்றல் அடிப்படையிலான உருப்படிவம்[தொகு]

சால்வொயி மற்றும் மேயர் ஆகியோரின் ஈஐ என்பதைப் பற்றிய கருத்தானது, அதை ஒரு புதிய நுண்ணறிவுக்கான பொது நிலைப்படுத்தப்பட்ட அளவுகோல்களுக்குட்படுத்தி வரையறுக்க முயல்கிறது. அவர்கள் முதலில் ஈஐ மீதான தொடர்ந்த ஆராய்ச்சியினூடே முதலில் தாங்கள் அறிவித்த வரையறுத்தலை தாங்களே இவ்வாறு மாற்றியமைத்தனர்: உணர்வு சார் நுண்ணறிவு என்பது, "உணர்வுகளை உணரும் ஆற்றல், சிந்தனையை ஊக்குவிக்கும் வண்ணம் உணர்வை ஒருங்கிணைத்தல், உணர்வுகளைப் புரிந்து கொள்ளுதல் மற்றும் தனிப்பட்ட நபரின் வளர்ச்சியை முன்னேற்றும் வகையில் அவற்றை சீரமைப்பது"

ஆற்றல் அடிப்படையிலான உருப்படிவம் என்பது உணர்வுகளை, பயனுள்ள தகவல்களைத் தரும் மூலங்களாகக் கருதுகிறது. இவை ஒருவர் சமூக சூழ்நிலையை உணர்ந்து அதனூடே பயணம் செல்ல உதவுகின்றன.[11] இந்த உருப்படிவம் முன்வைப்பது என்னவென்றால், உணர்வு தொடர்பான ஒரு தகவலைப் பதனிடுவதிலும் மற்றும் பரந்து பட்ட புரிதிறன் ஆற்றலுக்கு அந்தப் பதனடப்பட்ட உணர்வைப் பயன்படுத்தும் ஆற்றலிலும் தனி நபர்கள் ஒருவருக்கொருவர் வேறுபடுகின்றனர், என்பதுதான். இந்த ஆற்றலானது அனுசரித்துப் போகிற சில வகையான நடத்தைகளில் வெளிப்படுவதாக உள்ளது. ஈஐ என்பது நான்கு ஆற்றல்களை உள்ளடக்கியிருப்பதாக இந்த உருப்படிவம் கோருகிறது:

 1. உணர்வுகளை உணர்தல் - முகங்கள், சித்திரங்கள், குரல்கள் மற்றும் கலாசாரப் பொருட்கள் ஆகியவற்றில் பொதிந்திருக்கும் உணர்வுகளைப் புலனுணர்ந்து அவற்றின் பொருளை அறிந்து கொள்ளும் ஆற்றல். இது, ஒருவர் தன் சொந்த உணர்வுகளை அடையாளம் காண்பதையும் உள்ளிட்டதாகும். உணர்வுசார் நுண்ணறிவில் உணர்வுகளை உணர்வது என்பது அடிப்படையான ஒரு அம்சம். ஏனெனில், உணர்வுசார் தகவல்களை செயல் முறைப்படுத்துதலை இதுவே சாத்தியமாக்குகிறது.
 2. உணர்வுகளைப் பயன்படுத்துதல் - சிந்தனை மற்றும் பிரச்சினைகளைத் தீர்த்தல் போன்ற பல்வேறு புரிதிறன் செயல்பாடுகளுக்கு ஊக்கமளிக்க உணர்வுகளுக்கு சேணமிடும் ஆற்றல். உணர்வு ரீதியாக நுண்ணறிவு கொண்ட ஒருவர், தன் கைவசமிருக்கும் பணியை திறம்படச் செய்து முடிக்கும் வண்ணம் தனது மன நிலைகளை மிகச் சரியான அளவில் அமைத்துக் கொண்டு அவற்றையே தமது மூதலீடாக்கிக் கொள்ள முடியும்.
 3. உணர்வுகளைப் புரிந்து கொள்ளுதல் - உணர்வின் மொழியைப் புரிந்து கொள்வது மற்றும் பல்வேறு உணர்வுகளுக்கு இடையில் உள்ள சிக்கலான உறவுகளைப் புரிந்து கொள்வது ஆகியவற்றை உட்கொண்ட ஆற்றல். உதாரணமாக, உணர்வுகளைப் புரிந்து கொள்வது என்பதானது, மிகக் குறைவான வேறுபாடுகளே உடைய உணர்வுகளுக்கும் மிகுவுணர்வு கொண்டிருப்பதை உள்ளடக்கும். மேலும், உணர்வுகள் காலப்போக்கில் எவ்வாறு உருவாகி, வெளிப்படுகின்றன என்பதை அடையாளம் கண்டு விவரிக்கும் ஆற்றலையும் உட்படுத்தும்.
 4. உணர்வுகளைக் கையாளுதல்: நம்மிலும் பிறரிலும் காணப்படும் உணர்வுகளை ஒழுங்குபடுத்திச் சீரமைக்கும் ஆற்றல். எனவே, உணர்வு ரீதியாக நுண்ணறிவு கொண்ட ஒருவரால், தமது இலக்காக உள்ளவற்றை அடைவதற்கு, எதிர்மறையானவற்றையும் உள்ளிட்ட உணர்வுகளுக்குச் சேணமிட்டு அவற்றை ஒழுங்குபடுத்திக் கையாள இயலும். இந்த ஆற்றல் அடிப்படையிலான உருப்படிவம், பணியிடத்தில் முகப்பு மற்றும் முன்னறியப்படக் கூடிய செல்லுமை ஆகியவை இல்லாதிருப்பதாக ஆராய்ச்சியில் விமர்சிக்கப்படுகிறது.[12]

ஆற்றல்-அடிப்படையிலான உருப்படிவத்தை அளவீடு[தொகு]

ஈஐ பற்றியதான பல உருப்படிவங்கள் இந்தக் கருத்தாக்கத்தை மதிப்பீடு செய்வதற்கான பல கருவிகளின் உருவாக்கத்திற்கு வழி வகுத்துள்ளது. இவற்றில் சில ஒன்றின்மேல் ஒன்று கவிந்துள்ளனவையாக இருப்பினும், அவை வேறுபட்ட கருத்தாக்கங்களைத் தொட்டுச் செல்வதாக அநேக ஆராய்ச்சியாளர்கள் ஒப்புக் கொள்கின்றனர். தற்போதுள்ள மேயர் மற்றும் சால்வொயியின் ஈஐ அளவீட்டு உருப்படிவ சோதனை (எம்எஸ்சிஈஐடி), உணர்வின் அடிப்படையிலான-பிரச்சினைகளை- தீர்க்கும் உருப்படிகளின் தொடர் அடிப்படையிலானது.[11] இந்த உருப்படிவம், ஈஐ என்பது நுண்ணறிவின் ஒரு கூறு என்று தான் கோருவதற்கு ஒப்பாக, இதற்கான சோதனை ஆற்றலின் அடிப்படையிலான ஐக்யூ சோதனைகள் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. உணர்வுசார் நுண்ணறிவின் நான்கு பிரிவுகளிலும் ஒருவரின் ஆற்றலைச் சோதிப்பதன் மூலம், இது ஒவ்வொரு பிரிவுக்குமாகவும், மொத்தமாகவும் மதிப்பெண்களை உருவாக்குகிறது. இந்த நான்கு-பிரிவு உருப்படிவம் ஈஐ என்பது சமூக விதிமுறைகளுக்கு இசைவாக இருத்தல் வேண்டும் என்னும் கருத்தை மையமாகக் கொண்டுள்ளது. எனவே,எம்எஸ்சிஈஐடி ஒரு ஒருமித்த பாணியில் மதிப்பீடு செய்யப்படுகிறது. இதில் அதிக மதிப்பெண்கள் பெறுவது என்பது ஒரு தனி நபர் அளிக்கும் பதில்கள், உலகெங்கும் உள்ள மக்களிடமிருந்து பெறப்பட்ட மாதிரிகளை அவை ஒத்திருக்கும் அளவின்பாற்பட்டதாகும். எம்எஸ்சிஈஐடி என்பது நிபுண-மதிப்பீடும் பெறலாம். இதில் ஒரு தனி நபர் அளிக்கும் பதில்களுக்கும், 21 உணர்வு ஆராய்ச்சியாளர்கள் அடங்கிய ஒரு குழுவின் பதில்களுக்கும் உள்ள ஒப்புமையின் பேரில் மதிப்பிடப்படுகிறது.[11] ஆற்றலுக்கான ஒரு சோதனையாக எம்எஸ்சிஈஐடி உயர்வடைந்திருந்தாலும், இது புறப்பொருள் நோக்குடைய சரியான பதிலிறுப்புக்களைக் கைக்கொள்ளாததால், தர நிலைப்படுத்தப்பட்ட ஐக்யூ சோதனையாக இருப்பது என்பது சாத்தியமல்லாதது. இதில் உள்ள பல்வேறு பிரச்சினைகளில் ஒன்று, ஒருமித்த கருத்தின் அடிப்படையில் மதிப்பெண் இடுவது என்பது. இதற்கு மிகச் சிறுபான்மையினரே பதிலளிக்கக் கூடிய உருப்படிகளை (கேள்விகளை) வடிவமைப்பது என்பது அசாத்தியம் என்று பொருளாகிறது; காரணம், இந்த முறைமையின் வரையறுத்தலின்படி, பெரும்பான்மையோர் அளித்த மாதிரிகளின் அடிப்படையில்தான், ஒரு தனி நபரின் பதிலிறுப்புகள் உணர்வுசார் 'நுண்ணறிவாக' ஒப்புக்கொள்ளப்படுகிறது. இதுவும் இதையொத்த மற்றப் பிரச்சினைகளும், ஈஐ என்பது மெய்யான நுண்ணறிவு என்ற வரையறுத்தலை புரிதிறன் ஆற்றல் நிபுணர்கள் கேள்வி எழுப்புவதற்கு வழி வகுத்து விட்டது.

ஃபோலெஸ்டல்[13] நடத்திய ஒரு ஆய்வில், 111 வணிகப் பெரும் புள்ளிகளின் எம்எஸ்சிஈஐடி சோதனை முடிவுகள், அவர்களின் பணியாட்கள் தங்கள் தலைவரை எவ்வாறு வர்ணிக்கின்றனர் என்பதுடன் ஒப்பிடப்பட்டது. இதில், மற்றவரின் உணர்வைப் புரிந்து கொள்வது, செயலூக்கத் தூண்டுதல்கள் அளிப்பது மற்றும் பயன் விளைக்கும் தலைமைப் பண்பு ஆகியவற்றில், ஒரு தலைவரது சோதனை முடிவுகளுக்கும், அவர் எவ்வாறு தமது பணியாளர்களால மதிப்பிடப்பட்டார் என்பதற்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என்பதைக் கண்டறிந்தது. எம்எஸ்சிஈஐடி சோதனைகளை நடத்திய, மல்டி ஹெல்த் சிஸ்டம்ஸ் என்னும் கனடா நாட்டு நிறுவனமும் ஃபோலெஸ்டல்லின் விமர்சனத்திற்கு ஆளானது. இந்தச் சோதனையில் 141 கேள்விகள் இருந்தன. ஆனால், இந்த சோதனை பிரசுரிக்கப்பட்டதற்குப் பிறகு, இதில் 19 கேள்விகள் எதிர்பார்க்கப்படும் விடைகளை அளிக்கவில்லை என்று கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் மதிப்பெண்கள் வழங்கப்படுவதற்கு முன்பாக மல்டி-ஹெல்த் சிஸ்டம்ஸ், அதிகாரபூர்வமாக அறிவிக்காமலேயே, இந்தக் கேள்விகளுக்கான பதில்களை நீக்கும்படியானது

ஈஐயின் கலவையான உருப்படிவங்கள்[தொகு]

உணர்வுசார் தகுதிகள் (கோல்மேன்) உருப்படிவம்[தொகு]

டேனியல் கோல்மேன்[14] அறிமுகப்படுத்திய உருப்படிவம், ஈஐ என்பதை தலைமைப்பண்புச் செயல்திறனை முடுக்கி விடுகின்ற பல்வேறு ஆற்றல்கள் மற்றும் திறன்களை உள்ளிட்ட ஒரு அடுக்கு வரிசையில் கவனம் செலுத்துகிறது.

கோல்மேன் அளித்த உருப்படிவம் நான்கு பிரதான ஈஐ கருத்தாக்கங்களை வரையறுக்கிறது:[1]

 1. சுய-விழிப்புணர்வு - ஒருவர் தமது சொந்த உணர்வுகளைப் புரிந்து கொண்டு அவற்றை அடையாளம் கண்டுணரும் ஆற்றல் மற்றும் தமது உள்ளீடான உணர்வுகள் துணை கொண்டு முடிவெடுப்பதில் அவை ஏற்படுத்தக்கூடிய பாதிப்பை அறியும் ஆற்றல்.
 2. சுய-மேலாண்மை- ஒருவர் தமது உணர்வுகளையும் திடீரென உருவாகும் உந்துதல்களையும் கட்டுப்படுத்தி, மாறிவரும் சூழ்நிலைகளுக்குத் தக்கவாறு அனுசரித்துச் செல்வதை இது ஈடுபடுத்துகிறது.
 3. சமூக விழிப்புணர்வு - ஒரு சமூக ரீதியான ஊடாடுதல்களின்போது மற்றவர்களின் உணர்வுகளை உணர்ந்து கொள்வது, அவற்றைப் புரிந்து கொள்வது மற்றும் அவற்றிற்கு பதிலிறுப்பது ஆகியவற்றிற்கான ஆற்றல்.
 4. உறவு முறைகளின் மேலாண்மை - மற்றவர்களுக்கு ஊக்கமளிப்பது, அவர்கள் மேல் செல்வாக்கு செலுத்துவது மற்றும் முரண்பாடுகளைக் கையாண்டு அவர்களை மேம்படுத்துவது ஆகியவற்றிற்கான ஆற்றல்.

ஈஐயின் ஒவ்வொரு கருத்தாக்கத்தினுள்ளும் ஒரு வரிசையிலான உணர்வுத் தகுதிகளை கோல்மேன் கொண்டுள்ளது.உணர்வுத் தகுதிகள் என்பவை உள்ளார்ந்த ஆற்றல்கள் அல்ல, மாறாக, கற்றறியப்பட்ட ஆற்றல்களாகும். பெருமளவு வெற்றியடையும் வகையிலான செயல்திறனைப் பெறுவதற்கு, இவற்றை மேலும் ஈடுபடுத்தி மேம்படுத்த வேண்டும்.[1] தனி நபர்கள் ஒரு பொதுவான உணர்வுசார் நுண்ணறிவுடன் பிறக்கிறார்கள் என்றும் அது அவர்களது உணர்வுத் தகுதி கற்கும் திறனுக்கான சாத்தியத்தை நிர்ணயிப்பதானது என்றும் கோல்மேன் கூறுகிறார்.[15] கோல்மேனின் ஈஐ மாடல் வெறும் "பாப் சைக்காலஜி" என்று ஆராய்ச்சி நூல்களில் விமர்சிக்கப்பட்டுள்ளது.(மேயர், ராபர்ட்ஸ் & பார்ஸேட், 2008)

உணர்வுசார் தகுதிகள் (கோல்மேன்) உருப்படிவத்தின் அளவீடு[தொகு]

கோல்மேன் உருப்படிவத்தின் அடிப்படையில் இரண்டு அளவீட்டு முறைமைகள் உள்ளன:

உணர்வுத் தகுதி பொருண்மைக் கூறு (இமோஷனல் கம்பீடன்சி இன்வெண்டரி- ஈசிஐ) என்பது 1999ஆம் வருடமும் மற்றும் உணர்வு மற்றும் சமூகத் தகுதி பொருண்மைக் கூறு (இமோஷனல் அண்ட் சோஷியல் கம்பீடன்சி இன்வெண்டரி-ஈஎஸ்சிஐ) என்பது 2007வது வருடமும் உருவாக்கப்பட்டன.

2001வது வருடம் உருவாக்கப்பட்ட உணர்வுசார் நுண்ணறிவு தரமதிப்பீட்டை ஒரு சுய-மதிப்பறிக்கையாகவோ அல்லது 360-டிகிரி கோண மதிப்பீடாகவோ கொள்ளலாம்.[16]

உணர்வுசார்-சமுதாயம்சார் நுண்ணறிவிற்கான (ஈஎஸ்ஐ) பார்-ஆன் உருப்படிவம்[தொகு]

உணர்வுசார் நுண்ணறிவு என்பது ஒருவர் தன்னைப் பற்றியும், பிறரைப் பற்றியும் திறனுடன் புரிந்து கொள்வது தொடர்பானது என்று பார்-ஆன்[3] வரையறுக்கிறார். இது சூழ்நிலைகள் சுமத்தும் தேவைகளை[17] மேலும் வெற்றிகரமாகக் கையாளுவதற்காக, உடனடி சூழலைப் புரிந்து கொள்வது, அதற்கு ஏற்றார்போல அனுசரிப்பது மற்றும் அதை எதிர்த்துச் சமாளிப்பது ஆகியவற்றை உள்ளடக்கும். ஈஐ என்பது காலப்போக்கில் மேம்படுவது என்றும் இதைப் பயிற்சி, நிரல் மற்றும் சிகிச்சை ஆகியவற்றின் மூலம் மேம்படுத்தப்படலாம் என்றும் பார்-ஆன் கூறகிறார்.[3] சராசரிக்கும் அதிகமான ஈக்யூ கொண்ட நபர்கள், சூழ்நிலையின் தேவைகள் மற்றும் அழுத்தங்களைச் சந்திப்பதில் பொதுவாக அதிக வெற்றியடைபவர்களாக இருப்பதாக பார்-ஆன் கருத்து தெரிவிக்கிறார். மேலும் ஈஐயில் இருக்கும் குறைபாடு வெற்றியின்மையையும், உணர்வு ரீதியான பிரச்சினைகள் இருப்பதையும் குறிக்கக் கூடும் என்றும் அவர் குறிப்பிடுகிறார். நிதர்சன சோதனை, பிரச்சினைகளைத் தீர்ப்பது, அழுத்தத்திற்கான தாங்கு திறன் மற்றும் திடீர் என்று எழும் உந்துதல்களைக் கட்டுப்படுத்துவது ஆகியவற்றின் துணை அளவுகோல்கள் குறைவாக இருக்கும் தனி நபர்களிடம், சூழ்நிலையை எதிர்த்து சமாளிப்பதில் தோன்றும் பிரச்சினைகள், குறிப்பிடும் வண்ணம் அதிக அளவில் பொதுவாக, இருக்கும் என்று பார்-ஆன் கருதுகிறார். பொதுவாக, உணர்வுசார் நுண்ணறிவு மற்றும் புரிதிறன் நுண்ணறிவு ஆகிய இரண்டுமே சம அளவில் ஒருவரது பொது நுண்ணறிவுக்குப் பங்களிப்பதாக பார்-ஆன் கருதுகிறார்.இந்தப் பொது நுண்ணறிவே ஒருவர் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான சாத்தியத்தின் குறியீட்டை அளிப்பதாகும்.[3] இருப்பினும், ஆராய்ச்சி நூல்களில், இந்த உருப்படிவம் பற்றி (குறிப்பாக சுய- மதிப்பறிக்கை உணர்வுசார் நுண்ணறிவைச் சுட்டும் அளவை என்பதன் செல்லுமை பற்றி) சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன. அறிவியல் சூழல்களில் இதன் இடம்,கீழே விவாதிக்கப்படும், பண்புத்திற ஈஐ உருப்படிவத்தினால் நிரப்பப்படுகிறது.[18]

ஈஎஸ்ஐ உருப்படிவத்தின் அளவீடு[தொகு]

பார்-ஆன் இமோஷன் கோஷண்ட் இன்வெண்டரி (ஈக்யூ-ஐ) என்பது உணர்வு மற்றும் சமூகத் தகுதி வாய்ந்த நடத்தையின் ஒரு அளவாக மேம்படுத்தப்பட்ட சுய-மதிப்பறிக்கை முறை. அது ஒருவர் தன் உணர்வு மற்றும் சமூக நுண்ணறிவு பற்றி கொண்டுள்ள கணிப்பை உள்ளடக்கியது. ஈக்யூ-ஐ என்பது தனி நபர் தனிமனிதரின் பண்புத் திறங்களையோ அல்லது புரிதிறனையோ அளவிடுவதல்ல; மாறாக, இது சூழ்நிலையின் தேவைகள் மற்றும் அழுத்தங்கள் ஆகியவற்றை வெற்றிகரமாக எதிர்த்துச் சமாளிக்கத் தேவையான மன ஆற்றலை அளவிடுவதாகும்.[3] மொத்தமான ஈக்யூவை (Total Emotional Quotient) பெறுவதற்கும், பார்-ஆன் உருப்படிவத்தின் பிரதானமான ஐந்து உள்ளீடுகளுக்கும் ஏற்புடையதான ஐந்து கலவை அளவுகோல் மதிப்பெண்களை உருவாக்கவும், 113 உருப்படிகள் (கேள்விகள் அல்லது காரணிகள்) பயன்படுகின்றன. இந்த உருப்படிவத்தில் உள்ள ஒரு குறைபாடு என்னவென்றால், இது சுய-மதிப்பறிக்கை உருப்படிகள் மூலம் சில வகையான ஆற்றல்களை அளவிடுவதாகக் கோருவதுதான் (இதன் மீதான விவாதத்திற்கு பார்க்க: மேத்யூஸ், ஜெயிட்னர் % ராபர்ட்ஸ், 2007) ஈக்யூ-ஐ போலியாக அமைந்து விடுவதற்கு இது மிகவும் ஏதுவாக உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது (டே & கரோல், 2008; க்ரப் & மெக்டேனியல், 2007)

பண்புத்திற ஈஐ மாதிரிப்படிவம்[தொகு]

பெட்ரிடெஸ் மற்றும் அவருடன் பணிபுரிந்தவர்கள்[19] (பெட்ரிடெஸ், 2009 என்பதையும் காணவும்). ஆற்றல் அடிப்படையிலான உருப்படிவத்திற்கும் மற்றும் பண்புத்திறம் அடிப்படையிலான உருப்படிவத்திற்கும் கருத்து பூர்வமாக உள்ள வேறுபாட்டை முன்வைத்தனர்.[8] பண்புத்திற ஈஐ என்பது, "தனிமனிதப் பண்பியலின் கீழ்நிலைகளில் குடி கொண்டிருக்கும் உணர்வு சார்ந்த சுய மதிப்பீடுகளின் குழுமம்" எளிமையாகக் கூறுவதானால், ஈஐ என்பது ஒரு தனிப்பட்ட நபர் தமது உணர்வுசார் ஆற்றல்களைச் சுயமாக மதிப்பிடுவது என்பதாகும். ஈஐயின் இந்த வரையறுத்தலானது, உண்மையான ஆற்றல்களைக் குறிப்பிடுவதும் மற்றும் அறிவியல் ரீதியான சோதனைகளுக்கு சிறந்த அளவில் தாங்குதிறன் கொண்டதாக நிரூபிக்கப்பட்டதுமான ஆற்றல் அடிப்படையிலான உருப்படிவத்திற்கு மாறாக, நடத்தை வகைத்தமைத்தல் மற்றும் சுயமாக உணரப்பட்ட ஆற்றல்கள் ஆகியவற்றைக் கொண்டு, சுய-மதிப்பறிக்கையால் அளவிடப்படுகிறது. பண்புத்திற ஈஐ ஒரு தனிமனிதப் பண்பியல் வகையமைப்புக்குள் ஆராயப்பட வேண்டும்.[20] இதே கருத்தாக்கத்தின் மற்றொரு பெயர் உணர்வுசார் சுயத்திறன் பண்புத் திறம் என்பதாகும்.

பண்புத்திற ஈஐ உருப்படிவம் பொதுப்படையாகவும், மேலே கூறப்பட்ட கோல்மேன் மற்றும் பார்-ஆன் உருப்படிவங்களை உட்படுத்துவதாகவும் உள்ளது. ஈஐ என்பதை ஒரு தனிமனிதப் பண்பாக உருவகப்படுத்துவது மனித புரிதிறன் ஆற்றலுக்கு அப்பாற்பட்ட தொகுப்பு முறைக் கூற்றில் இருக்கக் கூடிய கருத்தாக்கத்திற்குக் கொண்டு செலவதாகும். இது கருத்தாக்கம் மற்றும் நிகழ்வு சார் விளக்கங்கள் ஆகியவற்றின்மேலும், அவற்றைச் செயலாக்குவதிலும் நேரடி பாதிப்பு கொண்டுள்ளதால், மிகவும் முக்கியமான ஒரு வேறுபாடாக உள்ளது.[8]

பண்புத் திற ஈஐ படிவத்தின் அளவீடு[தொகு]

ஈஐ என்பதற்கு நிறைய சுய-மதிப்பறிக்கை அளவீடுகள் உள்ளன. இதில் டெட், பாக்ஸ் மற்றும் வாங்க் (2005) ஆகியோர் நிர்மாணித்த அளவீடுகளான, ஈக்யூஐ, ஸ்வைன்பர்ன் யூனிவர்சிடி இமோஷனல் இண்டெலிஜென்ஸ் டெஸ்ட் (எஸ்யூஈஐடி), தி ஸ்கூட் செல்ஃப்-ப்ரெபோர்ட் இமோஷனல் இண்டெலிஜென்ஸ் டெஸ்ட் (எஸ் எஸ்ஈஐடி) ஆகியவை அடங்கும். ஈஐ பண்புத்திறம் உருப்படிவத்தின் பார்வையிலிருந்து பாக்கும்போது, இவற்றில் எதுவுமே, அவற்றின் படைப்பாளிகள் கோருவதைப் போல, நுண்ணறிவு, ஆற்றல்கள் அல்லது திறன்கள் ஆகியவற்றை மதிப்பிடுவதில்லை; மாறாக, இவை தமது உணர்வுசார் நுண்ணறிவு பண்புத்திற அளவீடு மதிப்பீடுகளில் குறைபாடுள்ளனவாய் உள்ளன. (பெட்ரிடெஸ், ஃப்ர்ன்ஹாம் & மாவ்ரொவ்லி, 2007). உணர்வுசார் நுண்ணறிவு பண்புத் திற வினாவரிசை (டிஈஐக்யூ) ஒரு திறந்த-அணுகல் கொண்ட மதிப்பீடு. இது கருத்தாக்கத்தின் முழுமையான கட்டமைப்பை மதிப்பிடுவதற்காகக் குறிப்பாக வடிவமைக்கப்பட்டது மற்றும் தற்போது 15 மொழிகளில் கிடைக்கப் பெறுகிறது.

டிஈஐக்யூக்கள் பெட்ரிடெஸ் மற்றும் அவருடன் பணியாற்றியவர்கள் அளித்த உருப்படிவத்தை செயலாக்கும் முறையை அளிக்கிறது. இது ஒருவரது தனிமனிதப் பண்பியலின் அடிப்படையில் அவரது ஈஐயை கருத்தாக்கம் செய்கிறது.[21] இந்த சோதனையானது நான்கு காரணிகளின் கீழ் 15 துணை அளவுகோல்களைக் கொண்டிருக்கிறது: நலமாயிருத்தல், சுயக் கட்டுப்பாடு, உணர்வு வயப்படுதல் மற்றும் சமூகத்துடன் இருத்தல். டிஈஐக்யூவின் சைக்கோமெட்ரிக் பண்புகள் ஃபிரென்சு மொழி பேசும் மக்களிடையே நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், புலனாய்வு செய்யப்பட்டது. இதில் டிஈஐக்யூ உலகம் முழுதும் இயல்பான முறையில் பகிரப்பட்டிருப்பதாகவும் மற்றும் நம்பகத்தன்மை கொண்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.[22]

டிஈஐக்யூ மதிப்பெண்கள் எழுத்துரு அல்லாத தர்க்கவியலான ரேவனின் மேட்ரிசஸ் என்பவனவற்றுடன் தொடர்பில்லாது இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். இது ஈஐயின் ஒரு தனி மனிதப் பண்புத் திறத்திற்கான ஆதரவு (அதாவது நுண்ணறிவின் ஒரு வடிவம் என்பதற்கு மாறாக) என்று அவர்கள் இதற்கு மேல் விளக்கம் அளித்தனர். எதிர்பார்த்தவண்ணமே, டிஈஐக்யூ மதிப்பெண்கள் ஐந்து பெரும் தனிமனிதப் பண்பியல், வெளிப்படையான பாங்கு, ஒத்துப்போதல், திறந்த நோக்குடைமை மற்றும் செயலை அறிவுபூர்வமாக அறிந்திருத்தல் ஆகியவற்றில் சிலவற்றுடன் நேர்மறையாக தொடர்புற்றிருந்தன. மேலும் இவை அலெக்சிதிமியா மற்றும் நியூரோடிசிஸம் என்னும் உளவழி நரம்பு நோயின் நிலை ஆகியவற்றுடன் தலைகீழாகத் தொடர்புற்றிருந்தன. பண்புத்திற ஈஐ உருப்படிவத்திற்குள்ளாகவே பல அளவுசார்ந்த மரபியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த அனைத்து ஈஐ மதிப்பெண்களிலும், குறிப்பிடத்தக்க அளவுகளில் மரபியல் விளைவுகள் மற்றும் பெற்றோரிடமிருந்து பெறப்படுபவை ஆகியவை இருப்பதை இவை வெளிப்படுத்தியுள்ளன.[23] .

அலெக்சிதிமியாவும் ஈஐயும்[தொகு]

அலெக்சிதிமியா (Alexithymia) என்பது கிரேக்க சொற்களான λέξις மற்றும் θυμός (அப்படியே சொல்வதானால் இதன் பொருள், 'உணர்வுகளை விளக்க வார்த்தைகள் இல்லை' என்பதாகும்) ஆகியவற்றிலிருந்து 1973வது வருடம்[24] பீட்டர் சிஃபெனியோஸ்[25] உருவாக்கிய ஒரு சொற்றொடர். இது உணர்வுகளைப் புரிந்து கொள்ளுதல், செயல்படுத்துதல் அல்லது விவரித்தல் ஆகியவற்றில் குறைபாடு உள்ளவர்களைப் பற்றி விவரிப்பதாகும்.

ஈஐயின் மிக அதிகமான மற்றும் மிகக் குறைவான அளவுகளுக்கு இடைப்பட்டு உள்ளதாக அறியப்படும் அலெக்சிதிமியா ஈஐ கருத்தாக்கத்திற்கு தீவிரமாகவும், தலைகீழாகவும் தொடர்புற்றிருக்கிறது, அதாவது அதன் கீழ்நிலையைப் பிரதிபலிப்பதாக உள்ளது.[26] ஒரு தனி நபரின் அலெக்சிதிமியாவை, அவர் சுய மதிப்பிட்ட வினாவரிசை, அதாவது டோரெண்டோ அலெக்சிதிமியா அளவு கோல்(டிஏஎஸ்-20) அல்லது பெர்மாண்ட்-வோர்ஸ்ட் அலெக்சிதிமியா வினாவரிசை (பிவிஏக்யூ)[27] அல்லது பார்வையாளர் மதிப்பீடு முறைகளான பார்வையாளர் அலெக்சிதிமியா அளவுகோல் (ஓஏக்கள்), ஆகியவற்றின் மூலம் அளவிடலாம்.

ஈஐ கோட்பாட்டின் அடிப்படை பற்றிய விமர்சனம்[தொகு]

ஈஐ என்பது மிகவும் பொதுப்படையாக வரையறுக்கப்பட்டுள்ளது மற்றும் அந்த வரையறுத்தல்கள் நிலையானவையாக இல்லை.[தொகு]

இந்தக் கோட்பாட்டின் கருத்தியல் பூர்வமான பழுதின்மையைக் குறித்து எழுந்துள்ள விமர்சனங்களில் ஒன்று, தொடர்ந்து மாறுதலுக்கு உட்பட்டும் மற்றும் விரிவடைந்தவாறும் இருக்கும் வரையறை பற்றியதாகும். பல தொடர்பற்ற தனிமங்களையும் உள்ளடக்கும் அளவுக்கு விரிவடைந்து விட்டதால், இது அறிவுக்குப் புலனாகாத கருத்துப் படிவமாகி விட்டது. ஈஐ என்பது செல்லுமையற்ற ஒரு கருத்துப் படிவம் என்று வாதிட்ட லாக் (2005) எழுப்பிய வினா: "உணர்வுகளைக் குறித்த உள் நோக்கிய பார்வை, உணர்வுகளின் வெளிப்பாடு, மற்றவர்களுடன் எழுத்துருவற்ற தொடர்பு, பச்சாதாபம், சுயக்-கட்டுப்பாடு, திட்டமிடுதல், ஆக்கபூர்வமான சிந்தனை மற்றும் கவனம் செலுத்தப்படும் திசை ஆகிய பலவற்றையும் உள்ளடக்கியிருக்கும் ஒரு கருத்துப் படிவத்தில் பொதுவான அல்லது ஒருங்கிணைக்கும் தனிமம் என்பது எது?" இதற்கு அவரே பதிலும் கூறினார்: "எதுவும் இல்லை." [28] இந்த வரையறையில் உள்ளடக்கப்பட்ட பல்வேறு காரணிகளைப் பற்றி விமர்சிக்கையில், லாக் கேட்டார்: "ஈஐ எதை உள்ளடக்காமல் இருக்கிறது?" [28] கருத்துப் படிவங்கள் மற்றும் அளவுகோல் கருவிகள் ஆகியவற்றை ஸ்திரப்படுத்தாமல், முழுமையான பகுப்பாய்வுகள் செயல்படுத்தப்படுவது மிகவும் கடினமானது என்றும், இந்த நிலையுற்ற தன்மையினால், இக்கருத்துப் படிவத்தின் கூட்டிசைவு பாதிக்கப்படலாம் என்றும் மற்ற விமர்சகர்கள்[29] கூறுகின்றனர்.

ஈஐ என்பதை நுண்ணறிவின் ஒரு வடிவமாக ஏற்க முடியாது.[தொகு]

ஈஐ என்பது நுண்ணறிவின் ஒரு வகை என்று துவக்கத்திலேயே அனுமானம் செய்து கொண்டு விட்டதாக கோல்மேனின் ஆரம்பகாலப் பணி விமர்சிக்கப்பட்டுள்ளது. கோல்மேன் ஈஐ பற்றி விவரித்துள்ளது, நுண்ணறிவைப் பற்றிய பொதுவான அனுமானங்களைக் கொண்டுள்ளது என்றும், நுண்ணறிவின் வகைகளைப் பற்றி ஆயும்போது, ஆராய்ச்சியாளர்கள் எதிர்பார்ப்பவைகளுக்கு மாறாகக் கூட அது உள்ளது என்றும் ஐஸ்னெக்வார்ப்புரு:Ref harvard எழுதுகிறார்:

"எந்த ஒரு நடத்தையையும் ஒரு 'நுண்ணறிவு' என்று பாகுபடுத்தும் போக்கின் அடிப்படையான அபத்தத்திற்கு, வேறு பலவற்றையும் விட, கோல்மேன் தெளிவான உதாரணமாக விளங்குகிறார்.... இந்த ஐந்து 'ஆற்றல்களும்' நுண்ணறிவை வரையறுக்கும் என்றால், நாம் அவை தமக்கு இடையே உயர்ந்த அளவிலான ஒரு ஊடுதொடர்பை பெற்றிருக்கும் என்பதற்கான நாம் ஆதாரத்தை எதிர்பார்ப்போம்; ஆனால், கோல்மேனோ அவை முற்றிலும் தொடர்பற்றிருக்கக் கூடும் என்று ஒப்புக் கொள்கிறார். இவற்றை நம்மால அளவிட முடியாதென்றால், அவை தொடர்புற்றிருக்கின்றனவா என்பதை நாம் எவ்வாறு அறிவது? எனவே, இந்தக் கோட்பாடு முழுவதுமே புதைமணலின் மேல் கட்டப்பட்டுள்ளது: இதற்குப் பழுதற்ற அறிவியல் அடிப்படை இல்லை."

இதைப் போலவே, ஈஐ என்பதே நுண்ணறிவு என்னும் கருத்தாக்கத்தின் தவறான ஒரு மேல்விளக்கம் என்று லாக் (2005)[28] கோருகிறார். இதற்கு மாற்றாக அவர் ஒரு விளக்கம் அளிக்கிறார்: இது நுண்ணறிவின் மற்றொரு வடிவமோ அல்லது வகையோ அல்ல, ஆனால் நுண்ணறிவு - அருவமான கோட்பாடுகளைப் புரிந்து கொள்ளும் ஆற்றல் - வாழ்க்கையின் ஒரு குறிப்பிட்ட களத்தில் இடப்படுகிறது: உணர்ச்சிகள். இந்தக் கருத்துப் படிவம் பெயர் மாற்றம் செய்யப்பட்டு ஒரு திறன் என்று அழைக்கப்பட வேண்டும் என்று அவர் கருத்து தெரிவிக்கிறார்.

இந்த விமர்சனத்தின் சாராம்சம் என்னவென்றால், அறிவியல் சார்ந்த ஒரு புலனாய்வானது செல்லுமை மற்றும் தொடர்ச்சியுள்ள கருத்தாக்கப் பயன்பாட்டையே சார்ந்திருக்கிறது; மற்றும் ஈஐ என்னும் சொற்றொடர் அறிமுகமாவதற்கு முன்பே உளவியலாளர்கள் ஆற்றல்கள் மற்றும் சாதனைகள், திறன்கள் மற்றும் பழக்கங்கள், போக்குகள் மற்றும் மதிப்புகள் மற்றும் தனிமனிதப் பண்புத் திறன்கள் மற்றும் உணர்வு நிலைகள் ஆகிய காரணிகளுக்கு இடையிலான கோட்பாடு ரீதியிலான வேறுபாடுகளை நிலை நாட்டிவிட்டார்கள் என்பதாகும். [30] ஈஐ என்பதானது ஒப்புக்கொள்ளப்பட்ட மற்ற கருத்துப் படிவங்கள் மற்றும் வரையறைகளை கலந்துவிட்டது மற்றும் ஒருங்கிணைத்து விட்டது என்று சிலரால் நோக்கப்படுகிறது.

ஈஐக்குப் பெரும் அளவில் முன்னறிவிப்பு மதிப்பு கிடையாது[தொகு]

ஈஐயின் மீது நடத்தப்பட்ட சில கூடுதல் செல்லுமை ஆய்வுகள், சில பொதுவான வெளிப்பாடுகள் (மிகவும் குறிப்பாக கல்வி மற்றும் பணியில் வெற்றி) குறித்து விளக்கம் அல்லது முன்னுரைத்தல் ஆகியவற்றிற்கு மிகக் குறைந்த அல்லது கொஞ்சம் கூட சேர்மானத்தை அது கூட்டவில்லை என்பதை மெய்ப்படுத்தியிருப்பதாக லேண்டி (2005)[29] கோருகிறார். சில ஆய்வுகளில் ஒரு சிறு அளவிலான கூடுதல் முன்னறிவுப்பு மதிப்பு கண்டறியப்பட்டதன் காரணமும் உண்மையில், ஒழுங்குபடுத்தப்பட்ட வழக்குமுறைமைகளின் தவறுதலேயாகும் - அதாவது மாற்று விளக்கங்களை கருத்தில் கொள்வது முழுமடையாதிருத்தல்:

ஈஐ என்பது தனிமனிதப் பண்பியலின் அளவீட்டுடன் அல்லாமல்,அருவமான நுண்ணறிவு என்பதனோடு ஒப்பிட்டும் வேறுபடுத்தியும் பார்க்கப்படுகிறது; அல்லது கல்வி சார்ந்த நுண்ணறிவுடன் அளவீட்டுடன் அல்லாமல், தனிமனிதப் பண்பியலின் அளவீட்டுடன் ஒப்பிட்டும் வேறுபடுத்தியும் பார்க்கப்படுகிறது." - லேண்டி (2005)

இந்தக் கருத்துக்கு ஒப்ப, மற்ற ஆராய்ச்சியாளர்களும், முன்னரே நிலை நாட்டப்பட்டுவிட்ட தனிமனிதப் பண்பியலின் பரிமாணங்களுக்கு ஈஐயின் சுய-மதிப்பறிக்கை எந்த அளவுக்கு ஒத்திசைவாக உள்ளது என்பது குறித்துக் கவலை தெரிவித்துள்ளனர். பொதுவாக, ஈஐயின் சுய மதிப்பறிக்கை மதிப்பளவுகள் மற்றும் தனிமனிதப் பண்பியல் மதிப்பளவுகள் ஒன்று குவிவதாகவே கூறப்படுகின்றன. காரணம் இவை இரண்டுமே பண்பியல் மதிப்பளவிற்கு ஆதரவானவையாக இருப்பதுதான். மேலும், இவை இரண்டுமே சுய மதிப்பறிக்கை படிவத்தின் வழிதான் மதிப்பிடப்படுகின்றன.[31] குறிப்பிட்டுச் சொல்வதானால், சுய மதிப்பறிக்கை ஈஐக்கு மிகவும் தொடர்புள்ள பெரும் ஐந்து என்பதற்கு இரண்டு பரிமாணங்கள் காணப்படுகின்றன: நியுரோடிசிஸம் மற்றும் வெளிப்படையான பாங்கு. குறிப்பாக நியூரோடிசிஸம் எதிர்மறை உணர்ச்சிகள் மற்றும் பதட்டம் ஆகியவற்றிற்கு தொடர்புள்ளதாக கூறப்படுகிறது. உள்ளுணர்வினால், நியூரோட்டிசிஸத்தில் அதிகமாக மதிப்பெண் பெறும் தனி நபர்கள், சுய- மதிப்பறிக்கை ஈஐயின் அளவீடுகளில் குறைவாகப் பெறும் சாத்தியம் உண்டு.[31]

ஈஐ வினாவரிசைகள் மற்றும் தனிமனிதப் பண்பியல் ஆகியவற்றிற்கு இடையிலான ஒத்திசைவுகள் குறித்த மேல் விளக்கங்கள் வேறுபட்டிருக்கின்றன. ஈஐ என்பது தனி மனிதப் பண்பியலின் தொகுப்பு என மறு மேல்விளக்கம் அளிக்கும் ஈஐ பண்புத்திறம் அறிவியல் ஆராய்ச்சி நூல்களில் முதன்மையாக உள்ளது.[32][33][34]

மதிப்பீடு தொடர்பான விடயங்கள் குறித்த விமர்சனம்[தொகு]

ஆற்றல் அடிப்படையிலான அளவீடுகள் இணக்கத்தை அளவிடுகின்றன, ஆற்றலை அல்ல[தொகு]

மேயர் மற்றும் சால்வொயி ஆகியவர்களின் பணி பற்றிய ஒரு விமர்சனம் ராபர்ட்ஸ் மற்றும் பலரிடமிருந்து வருகிறது. (2001).[35]. இது எம்எஸ்சிஐஈடியால் அளவிடப்படும் ஈஐ அதன் இணக்கத்தை அளவிடுவதேயாகும் என்று கருத்து தெரிவிக்கிறது. இந்த வாதம், எம்எஸ்சிஐஈடி ஒருமித்த கருத்தின் அடிப்படையிலான மதிப்பீட்டைப் பயன்படுத்துவதில் வேரூன்றியுள்ளது. உண்மையில் எம்எஸ்சிஐஈடியில் மதிப்பெண்கள் எதிர்மறையாக விநியோகம் ஆகின்றன (இதன் பொருள் மதிப்பெண்கள், அதிக அளவு ஈஐ கொண்டவர்களை விட, குறைந்த அளவு ஈஐ கொண்டவர்களைச் சிறந்த முறையில் வேறுபடுத்திக் காட்டுகிறது).

ஆற்றல் அடிப்படையிலான அளவீடுகள் அறிவை அளவிடுகின்றன (உண்மையான ஆற்றலை அல்ல)[தொகு]

ப்ராடி (2004)[36] மேற்கொண்டும் விமர்சிக்கிறார். புரிதிறன் ஆற்றலுக்கான இதர சோதனைகளைப் போல் அல்லாது, எம்எஸ்சிஐஈடி "உணர்வுகளைப் பற்றிய அறிவைச் சோதிக்கிறது, ஆனால், அறிவுக்குத் தொடர்பான பணிகளைச் செய்து முடிக்கும் ஆற்றலை அல்ல." என்று இவர் கூறுகிறார். இதில் முதன்மையான வாதம் என்னவென்றால், ஒருவர் உணர்ச்சி மயமான ஒரு சூழலில் தான் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை அறிந்திருந்தாலும், அவர் அவ்வாறு அறிவிக்கப்பட்டபடிதான் நடந்து கொள்வார் என்பதை இது பின் கொள்ளவில்லை என்பதாகும்.

சுய மதிப்பறிக்கை அளவீடுகள் சிறந்தவை என்று போலியாக வெளிப்படுவதற்கு ஏதுவானவை[தொகு]

சமூக ரீதியாக விரும்பக் கூடிய பதிலிறுப்புக்கள் (socially desirable responding - STR) என்று முறையான ஒர் சொல் கொண்டு அழைக்கப்படும் 'சிறந்தது போல போலியாக காட்டிக் கொள்ளும் நடத்தை' என்பது என்பது ஒரு பதிலிறுப்பு உருமாதிரியாகும். சோதனைக்கு உட்படுபவர்கள், தங்களைப் பற்றிய நேர்மறையான ஒரு சார்புக்கு தங்களைத் தாங்களே பிரதிபலித்துக் கொள்கிறார்கள் (பால்ஹஸ், 2002). இந்தச் சார்பு என்பது தனிமனிதப் பண்பியல் பொருண்மைக் கூறுக்கான பதிலிறுப்புகளுக்களை மாசுபடுத்துகிறது என்பது நெடுங்காலமாகவே அறியப்பட்டுள்ளது (ஹாட்க்ரேவ்ஸ், 2004; மெக்ஃபார்லேண்ட் & ரையான்,2000; பெப்பிள்ஸ் & மூர் 1998; நிக்கோலாஸ் & க்ரீன் 1997; ஜெர்ப் & பால்ஹஸ்,1987). சுய மதிப்பறிக்கைகளுக்கு இடையிலான உறவுத் தொடர்புகளுக்கு இடையூடாக இது செயல்படுகிறது (நிக்கோலாஸ் & க்ரீன் 1997; கேங்கஸ்டர் மற்றும் பலர், 1983). விரும்பக் கூடிய வகையில் பதிலிறுப்பது என்பது சூழ்நிலையைப் பொறுத்ததான, தாற்காலிகமான ஒரு பதிலிறுப்பு உருப்படிவம் என்றும் கூறப்பட்டுள்ளது (பால்ஹஸ் & க்ரோஸ்ட், 2004; பால்ஹஸ், 1991). இது நீண்ட காலப் பண்புத்திறம் போன்ற குணம் கொண்ட ஒரு பதிலிறுப்பினின்றும் வேறுபட்டது. சில ஈஐ பொருண்மைக் கூறுகளின் சுய-மதிப்பறிக்கைகள் மிகுந்த அளவு ஆக்கம் அல்லது இழப்பு உள்ள இடங்களில் (உதா: பணிப் பின்புலன்கள் போன்றவை) பயன்படுகிறது என்பதே, இத்தகைய பதிலிறுப்புகள் உருவாக்கக் கூடிய பிரச்சினைகளைத் தெளிவாக்கும் (பால்ஹஸ் & ரெயிட், 2001).

சமூக ரீதியாக விரும்பப் படக் கூடிய விதத்தில் பதிலிறுக்கும் நடத்தை பொருண்மைக் கூறைத் தடுப்பதற்குச் சில வழிமுறைகள் உள்ளன. தனிமனிதப் பண்பியல் சோதனைக்கு உட்படுமுன், தங்களைப் பற்றி நல்லவிதமாகச் சொல்லவேண்டும் என்பதற்காக போலித்தனமாகப் பதிலிறுக்க வேண்டாம் என்று சோதனைக்கு உட்படுபவர்களை எச்சரிப்பது அவசியம் என்று சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர் (உதா: மெக்ஃபார்லேண்ட், 2003). சில பொருண்மைக் கூறுகள் செல்லுமைக்கான அளவுகோல்களை பயன்படுத்துகின்றன. எல்லா உருப்படிகளுக்கும் தொடர்ச்சியான பொருத்தம் இருப்பதை உறுதி செய்து கொள்வதற்காக இதனை மேற்கொள்கின்றனர்.

ஈஐயின் முன்னறிவிக்கும் சக்தி குறித்த பிரகடனங்கள் மிக அதிகமானவை[தொகு]

ஈஐ இயக்கத்தில் 'வணிக ரீதியான பிரிவு' மற்றும் 'கல்வி ரீதியான பிரிவு' என்று இரண்டினை லேண்டி[29] வேறுபடுத்திக் காட்டுகிறார். இதற்கு அடிப்படையாக ஈஐயின் முன்னறிவிக்கும் சக்தி என்று கூறப்படுவதைக் குறிப்பிடுகிறார். லேண்டியைப் பொறுத்த அளவில், முன்னதாகக் கூறப்பட்டது ஈஐயின் செயலாற்றும் மதிப்பை மிகப் பிரம்மாண்டமாகக் காட்டுகிறது; இரண்டாவதாகக் கூறப்படுவதோ அத்தகைய கோரிக்கைகளுக்கு எதிராக பயனர்களை எச்சரிக்கிறது.

ஒரு உதாரணம். "மிகவும் பயன் விளைக்கும் தலைமைகள் அனைத்தும் ஒரு முக்கியமான வகையில் ஒன்றையொன்று ஒத்ததாக உள்ளன: அவை அனைத்தும் தற்போது உணர்வுசார் நுண்ணறிவு என்று கூறப்படுவதை மிக அதிக அளவில் கொண்டுள்ளன.... உணர்வுசார் நுண்ணறிவு என்பது தலைமையின் சைன் குவா நான் என்பதாகும்" என்று கோல்மேன் (1998) வலியுறுத்துகிறார். இதற்கு மாறாக மேயர் (1999), "மிகுந்த அளவு உணர்வுசார் நுண்ணறிவு கொண்டிருப்பவர்கள் வாழ்க்கையில் வரையறையற்ற வெற்றி வாய்ப்பைக் கொண்டிருக்கிறார்கள் என்னும் பொதுவான கருத்து உள்ளீடு தற்போது மிகவும் ஆரவாரத்துடனும், தர்க்க ரீதியான அறிவியல் தர நிலைகளினால் ஆதாரப்படுத்தப்படாததாகவும் உள்ளது" என்று எச்சரிக்கிறார்.

இந்த வாதத்திற்கு லேண்டி மேலும் உரமூட்டுகிறார். இத்தகைய கோரிக்கைகள் எந்தத் தரவுகளின் மீது எழுப்பப்படுகிறதோ, அவை அனைத்தும் 'உரிமத் தரவுகள்', அதாவது, சுதந்திரமான ஆராய்ச்சியாளர்களின் மறுபகுப்பாய்வுக்கோ, மறு இடலுக்கோ அல்லது சரிபார்க்கப்படுவதற்கோ இவை கிடைக்கப் பெறுவதில்லை.[29] எனவே, அந்தத் தரவுகள் சுதந்திரமான பகுப்பாய்வுகளுக்காக வெளிப்படுத்தப்பட்டால் தவிர, இந்தக் கண்டுபிடிப்புகளின் நம்பகத்தன்மையை அறிவியல் ரீதியாக ஆதாரப்படுத்த முடியாது.

ஈஐ, ஐக்யூ மற்றும் பணியில் செயல்திறன்[தொகு]

ஈஐ மற்றும் பணியில் செயல்திறன் ஆகியவற்றின் மீதான ஆராய்ச்சிகள் மாறுபட்ட விளைவுகளைக் காட்டுகின்றன: இவற்றில் சில ஆய்வுகளில் நேர்மறையான தொடர்பு கண்டறியப்பட்டுள்ளது; வேறு சிலவற்றிலோ எந்தவிதமான தொடர்பும் இல்லை, அல்லது அத்தகைய தொடர்பு சீரற்றதாக உள்ளது. இதனால் ஆராய்ச்சியாளர்கள் கோட் மற்றும் மைனர்ஸ் (2006)[37] ஆகியோர் ஈஐ மற்றும் ஐக்யூ ஆகிய இரண்டுடனும் சமரசம் கொள்ளக் கூடிய ஒரு உருப்படிவத்தை அளித்தனர். இது, புரிதிறன் நுண்ணறிவு குறையும்போது, ஈஐ மற்றும் பணியில் செயல்திறன் ஆகியவற்றிற்கு இடையிலான தொடர்பு மேலும் நேர்மறையாவதைக் காட்டுகிறது. கல்வியில் செயல்திறன் என்னும் பொருளில் இந்தக் கருத்தாக்கம் முதன்முறையாக முன்வைக்கப்பட்டது (பெட்ரைட்ஸ், ஃப்ரெடரிக்சன் & ஃப்ர்ன்ஹாம், 2004). முந்தைய ஆய்வின் முடிவு, இந்த சமரச உருப்படிவத்திற்கு ஆதரவாக இருந்தது: மிகக் குறைவான ஐக்யூ கொண்டிருந்த பணியாளர்கள் அதிகமான அளவில் பணிச் செயல்திறனையும், அவர்களது ஈஐ அதிகமாகும் விகிதத்தில், நிறுவனத்தின் அங்கத்தினருக்கான நடத்தை நோக்கிய தன்மையும் கொண்டிருந்தனர்.

மேலும் பார்க்க[தொகு]

குறிப்புகள் மற்றும் குறிப்பீடுகள்[தொகு]

 1. 1.0 1.1 1.2 பிராட்பெர்ரி, டிராவிஸ் மற்றும் ஜீன். (2009). "உணர்வுசார் நுண்ணறிவு 2.0". சான் ஃபிரான்சிஸ்கோ: பதிப்பாளர் குழு, மேற்கு. (ஐஎஸ்பிஎன் 0071380760.
 2. மேயர்,ஜே.டி., சலவோயி, பி. & கருசோ, டி.ஆர்.2008). உணர்வுசார் நுண்ணறிவு: புதிய ஆற்றல் அல்லது விருப்பத் தனிக்கூறு, அமெரிக்கன் சைககாலஜிஸ்ட், 63, 6, 503-517.
 3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 பார்-ஆன், ஆர். (2006). உணர்வுசார்-சமுதாய நுண்ணறிவின் பார்-ஆன் மாதிரிப்படிவம் (ஈஎஸ்ஐ) சிகோதெமா,18 , இணைப்புl., 13-25.
 4. தோர்ண்டைக், ஆர்.கே (1920). "நுண்ணறிவும் அதன் பயன்களும்", ஹார்ப்பர்'ஸ் மேகசீன் 140, 227-335.
 5. கார்ட்னர், ஹெச். (1983). மனதின் உருப்படிமங்கள் நியூயார்க்:அடிப்படைப் புத்தகங்கள்.
 6. ஸ்மித், எம்.கே. (2002) "ஹோவர்ட் கார்ட்னர் மற்றும் பன்முக நுண்ணறிவுகள்", தி என்சைக்ளோபிடியா ஆஃப் இன்ஃபார்மல் எஜுகேஷன், ஹெச்டிடிபி://டபிள்யூடபிள்யூடபிள்யூ.இன்ஃபெட்.ஓஆர்ஜி/திங்கர்ஸ்/கார்ட்னர்/ஹெச்டிஎம்[தொடர்பிழந்த இணைப்பு] மிலிருந்து அக்டோபர் 31,2005 அன்று இறக்கப்பட்டது.
 7. பெய்ன், டபிள்யூ.எல். (1983/1986). உணர்ச்சிகளைப் பற்றிய ஒரு ஆய்வு: உணர்வுசார் நுண்ணறிவை மேம்படுத்துதல்; சுய ஒருங்கிணைப்பு; அச்சம், வலி மற்றும் ஆவல் தொடர்பானது. டிசர்டேஷன் அப்ஸ்ட்ராக்ட்ஸ் இண்டர்நேஷனல்,47, ப. 203ஏ.(யுனிவர்சிடி மைக்ரோஃபிலிம்ஸ் எண் No.ஏஏசி 8605928)
 8. 8.0 8.1 8.2 பெட்ரிடைஸ், கே.வி.& ஃப்ர்ன்ஹாம் ஏ. (2000ஏ). உணர்வுசார் நுண்ணறின் பரிமாணக் கட்டமைப்பு பற்றி தனிமனிதப் பண்பியல் மற்றும் தனி நபர் வேற்றுமைகள்,29, 313-320 பிழை காட்டு: Invalid <ref> tag; name "pet2000" defined multiple times with different content
 9. ஃபெல்ட்மேன்-பேரட், எல்., & சால்வொயி, பி. (ஈடிஎஸ்.). (2002). உணர்ச்சியில் விவேகம்: உணர்வுசார் நுண்ணறிவில் உளவியல் செயலாக்கங்கள் நியூ யார்க்: கில்ஃபோர்ட் பிரெஸ்.
 10. கோல்மேன்,டி. (1995). உணர்ச்சி ரீதியான நுண்ணறிவு நியூ யார்க்: பான்டம் புத்தகங்கள்
 11. 11.0 11.1 11.2 சலவோயி, பி.& க்ரெவால் டி (2005) உணர்வுசார் நுண்ணறிவின் அறிவியல் உளவியல் அறிவியல் தற்போது மேற்செல்லும் திசைகள், வால்யூம் 14-6
 12. ப்ராட்பெரி, டி. மற்றும் சு,எல்.(2003. ஆற்றல் - அதற்கெதிரான திறன் அடிப்படையில் உணர்வுசார் நுண்ணறிவின் மதிப்பீடு, சிகோதெமா, வால்.18, சப்ள்..,பிபி. 59-66.
 13. ஹெச்டிடிபி:/டபிள்யூடபிள்யூடபிள்யூ.சைக்காலஜி.யூஐஓ.என்ஓ/ஸ்டடியர்/டியார்பிஎஸ்ஒய்சிஹெச்/டிஸ்புடுடாசெர்/ஃபொல்லெஸ்டால்_சம்மரி.ஹெச்டிஎம்எல் ஹால்வார்ட் ஃபாலெஸ்டால் -'உணர்வுசார் நுண்ணறிவு ஒரு ஆற்றல்: மேயர்-சால்வாயி-கருசோ உணர்வு சார் நுண்ணறிவு சோதனை (எம்எஸ்சிஈஐடி)' யிலிலான மதிப்பெண்களின் கருத்தாக்க செல்லுமையை மதிப்பிடுதல் பிஹெச்டி தீசிஸ் மற்றும் அதனுடனான குறிப்புக்கள், யூனிவர்சிடி ஆஃப் ஓஸ்லோ 2008.
 14. கோல்மேன், டி (1998). உணர்வுசார் நுண்ணறிவுடன் பணி புரிதல். நியூ யார்க்: பான்டம் புத்தகங்கள்.
 15. போயாட்ஜிஸ், ஆர்., கோல்மேன், டி, & ரீ, கே. (2000). உணர்வுசார் நுண்ணறிவில் திறமையைக் கொத்தாகக் கூட்டுவது: உணர்வுசார் நுண்ணறிவுத் திறமையின் பொருண்மைக் கூற்றில் உட்பார்வைகள் (ஈசிஐ). இன்.ஆர். பார்-ஆன் & ஜே.டி.ஏ.பார்க்கர் (ஈடிஎஸ்): உணர்வுசார் நுண்ணறிவுக்கான கையேடு (பிபி. 343-362). சான் ஃபிரான்சிஸ்கோ: ஜாஸி-பாஸ்
 16. ப்ராட்பெரி, ட்ரேவிஸ் மற்றும் ஜீன். (2009). உணர்வுசார் நுண்ணறிவு 2.0. சான் ஃபிரான்சிஸ்கோ: பப்ளிஷர்ஸ் க்ரூப் வெஸ்ட். ஐஎஸ்பிஎன் 9780974320625
 17. பார்-ஆன், ஆர். (1997) உணர்வு ஈவு பொருண்மைக் கூறு (ஈக்யூ-ஐ): உணர்வுசார் நுண்ணறிவுக்கான ஒரு தேர்வு டொரொண்டோ: மல்டி-ஹெல்த் சிஸ்டம்ஸ்
 18. க்ளூம்பெர்,ஆர்,டி. ஹெச். (2008) உணர்வுசார் நுண்ணறிவுப் பண்புத் திறம்: மைய சுய மதிப்பீடு மற்றும் சமூக விருப்பமுடைமை ஆகியவற்றின் தாக்கம். தனிமனிதப் பண்பியலும் தனிமனித வேற்றுமைகளும்,44(6), 1402-1412.எல்ஏகே
 19. பெட்ரிடெஸ், கே.வீ., பிடா, ஆர்.,கொக்கினக்கி, எஃப். (2007). தனிமனிதப் பண்பியல் காரணி இடத்தில் உணர்வுசார் நுண்ணறிவுப் பண்பின் இருப்பிடம் ப்ரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் சைகாலஜி,98, 273-289.
 20. பெட்ரிடெஸ், கே.வி & ஃப்ர்ன்ஹாம், ஏ (2001). உணர்வுசார் நுண்ணறிவுப் பண்புத் திறம்: நிலை நிறுத்தப்பட்ட டேக்சோனொமிக் பண்புகளுடன் தொடர்பான ஒரு சைகோமெட்ரிக் புலனாய்வு. யூரோபியன் ஜர்னல் ஆஃப் பர்சலானிடி, 15, 425-448
 21. பெட்ரிடெஸ், கே.வி, & ஃப்ர்ன்ஹாம், ஏ (2003. உணர்வுசார் நுண்ணறிவு பண்புத் திறம்: உணர்வை அறிதல் மற்றும் பதிலிறுப்புத்தன்மை ஆகியவற்றிலான இரண்டு ஆய்வுகளில் நடத்தை செல்முறை. யூரோபியன் ஜர்னல் ஆஃப் பர்சனாலிடி, 17, 39–75
 22. மிகோலஜாஸ்க்,லுமிநெட்,லெராய் மற்றும் ராய் (2007). உணர்வுசார் நுண்ணறிவுப் பண்பின் சைகோமெட்ரிக் அம்சங்கள் வினாவரிசை: ஃபிரெஞ்சு மொழி பேசும் மக்கள் தொகையில் காரணி கட்டமைப்பு, நம்பகத்தன்மை, கருத்தாக்கம் மற்றும் மேலூக்க செல்லுமை. ஜர்னல் ஆஃப் பர்சனாலிடி அசெஸ்மெண்ட், 88(3), 338–353
 23. வெர்னான், பி.ஏ., பெட்ரிடெஸ், கே.வி, ப்ரேட்கோ, டி., & ஸ்கெர்மெர், ஜே. ஏ. (2008). உணர்வுசார் நுண்ணறிவுப் பண்பில் மரபியல் சார்ந்த நடத்தை பற்றிய ஆய்வு உணர்வு, 8, 635-642.
 24. பார்-ஆன், ரூவென்; பார்க்கர், ஜேம்ஸ் டிஏ (2000). உணர்வுசார் நுண்ணறிவுக் கையேடு: கருத்தாக்கம், மேம்பாடு, மதிப்பீடு மற்றும் வீடு, பள்ளி மற்றும் பணியிடத்தில் பயன்பாடு. சான் ஃபிரான்சிஸ்கோ, கலிஃபோர்னியா: ஜாஸி-பாஸ் ஐஎஸ்பிஎன் 0787949841. பிபி. 40-59
 25. டெய்லர், க்ரீம் ஜே; பாக்பி, ஆர். மைக்கேல் மற்றும் பார்க்கர், ஜேம்ஸ் டிஏ (1997). விதிமுறைகளை நோய்கள் பாதிக்கின்றன: மருத்துவம் மற்றும் உளவியல் நோய்களில் அலெக்சிதிமியா. கேம்ப்ரிட்ஜ்: கேம்ப்ரிட்ஜ் யூனிவர்சிடி பிரெஸ். ஐஎஸ்பிஎன்.052145610எக்ஸ்.பிபி,28-31
 26. பார்க்கர் ஜேடிஏ, டெய்லர் ஜிஜே, பாக்பி ஆர்எம் (2001). "அலெக்சிதிமியா மற்றும் உணர்வுசார் நுண்ணறிவுக்குமான உறவு" தனிமனிதப் பண்பியலும் தனி நபர் வேற்றுமைகளும் 30, 107–115
 27. வோர்ஸ்ட் ஹெச்சிஎம் பெர்மாண்ட் பி (ஃபிப்ரவரி 2001). "பெர்மாண்ட்-வோர்ஸ்ட் அலெகிதிமியா வினாவரிசையின் செல்லுமையும் நம்பகத்தன்மையும்" தனிமனிதப் பண்பியலும் தனி நபர் வேற்றுமைகளும், வால்யூம் 30, எண் 3, பிபி. 413–434(22)
 28. 28.0 28.1 28.2 லாக், ஈ.ஏ. (2005). உணர்வுசார் நுண்ணறிவு ஏன் செல்லாத கருத்தாக்கமாக உள்ளது. ஜர்னல் ஆஃப் ஆர்கனைசேஷனல் பிஹேவியர்,26, 425-431.
 29. 29.0 29.1 29.2 29.3 லேண்டி, எஃப்.ஜே. (2005). உணர்வுசார் நுண்ணறிவு பற்றிய ஆராய்ச்சிக்குத் தொடர்பான சில சரித்திர மற்றும் அறிவியல் பூர்வமான விடயங்கள். ஜர்னல் ஆஃப் ஆர்கனைசேஷனல் பிஹேவியர், 26, 411-424.
 30. மட்டியுஜி, பி.ஜி. உணர்வுசார் நுண்ணறிவு? பரணிடப்பட்டது 2009-07-20 at the வந்தவழி இயந்திரம்நான் அதை உணரவில்லை. பரணிடப்பட்டது 2009-07-20 at the வந்தவழி இயந்திரம் எவரிடேசைகாலஜி.காம்
 31. 31.0 31.1 மெக் கான், சி., ராபர்ட்ஸ், ஆர்.டி., மேத்யூஸ், ஜி., ஜெயிட்னர், எம். (2004). செயல்திறன் அடிப்படையிலான உணர்வுசார் நுண்ணறிவு சோதனைகளின் ஒருமித்த மதிப்பெண் வழங்கலும் செயல்திறனால் அறியப்படும் மதிப்பீட்டுத் தேர்வும். தனிமனிதப் பண்பியல் & தனி நபர் வேற்றுமைகள்,36, 645-662.
 32. மிகொலஜ்செக்,எம்., லுமிநெட்,ஓ., லெராய், சி., & ஈ.( 2007). உணர்வுசார் நுண்ணறிவு பண்பின் சைகோமெட்ரிக் அம்சங்கள் வினாவரிசை. ஜர்னல் ஆஃப் பர்சனாலிடி அசெஸ்மெண்ட், 88, 338-353.
 33. ஸ்மித், எல், கியாரொகி, ஜே., & ஹெவன், பி.சி.எல்., (2008). உணர்வுசார் நுண்ணறிவுப் பண்பின் ஸ்திரத்தன்மையும் மாற்றமும், முரண்பாடான தொடர்பு வடிவமைப்புகள் மற்றும் உறவு முறைகளில் திருப்தி: ஒரு வருடத்திற்கான ஒரு நீள வாட்டு ஆய்வு. தனிமனிதப் பண்பியலும் தனி நபர் வேற்றுமைகளும், 45, 738-743.
 34. ஆஸ்டின் ஈ.ஜே. (2008). உணர்வுசார் நுண்ணறிவு சோதனை அம்சங்களின் பண்புத் திறம் மற்றும் ஆற்றலுக்கான ஒரு பதிலிறுப்பு பின் நேர ஆய்வு. தனிமனிதப் பண்பியலும் தனி நபர் வேற்றுமைகளும், 36, 1855-1864.
 35. ராபர்ட்ஸ், ஆர். டி., ஜெயிட்னர், எம்., & மேத்யூஸ், ஜி. (2001). உணர்வுசார் நுண்ணறிவு என்பது அறிவாற்றலுக்கான பாராம்பரிய தர நிலைகளை சந்திக்கிறதா? சில புதிய தரவுகளும், முடிவுகளும். உணர்வு, 1, 196–231
 36. ப்ரோடி, என். (2004). புரிதிறன் நுண்ணறிவு என்றால் என்ன மற்றும் எது உணர்வுசார் நுண்ணறிவு அல்ல. சைகாலாஜிகல் இங்க்வியரி, 15, 234-238.
 37. கோட், எஸ் மற்றும் மைனர்ஸ், சி.டி.ஹெச். (2006). "உணர்வுசார் நுண்ணறிவு, புரிதிறன் நுண்ணறிவு மற்றும் பணியில் செயல்திறன்", அட்மினிஸ்ட்ரேடிவ் சயின்ஸ் க்வார்ட்டர்லி, 51(1), பிபி1-28.

புற இணைப்புகள்[தொகு]